ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

லேகா ராமசுப்ரமணியம்

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

அப்பாஸ் கியோஸ்தமி

 ''நல்ல சினிமா என்பது நம் நம்பிக்கையைப் பெறுவது. மோசமான சினிமாவோ  நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று...''

  - அப்பாஸ் கியோஸ்தமி (ஈரானிய இயக்குநர்)

உலக அரங்கில் ஈரானிய சினிமா பெற்றிருக்கும் இடம் இந்த நம்பிக்கை சார்ந்ததே! ஈரானிய படங்கள் யாவும் யதார்த்த வாழ்வின் பதிவுகள். ஆடை விதிகளில் துவங்கி பாலியல் காட்சிகள், காதல், அரசியல், வன்முறை என அனைத்தையும் தணிக்கை குழுவின் விதிகளுக்கு உட்பட்டே அவர்கள் படமாக்க வேண்டும். சில படங்கள் அரசின் அனுமதி பெற்று வெளிவர பல மாதங்கள் வரைகூட ஆகும். இத்தனை இடர்ப்பாடு களுக்கு இடையே அவர்களின் படைப்புகள் தனித்துவம் பெறுவதற்கு, அவை நிதர்சனத்தின் பிரதிபலிப்புகள் என்பதே காரணம்.

ஈரானிய சினிமாவை சர்வதேச அளவில் எடுத்துச் சென்ற இயக்குநர்களில் முக்கியமானவர், அப்பாஸ் கியோஸ்தமி. 70-களில் தொடங்கி இன்று வரை தன் படைப்புகளால் ஈரானிய சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். கதை சொல்லலில் நுணுக்கங்களை புகுத்தி, ஈரானிய சினிமா வரலாற்றில் புதிய அலை உருவாக காரணமானவரும் இவரே! ''சத்யஜித் ரேயின் மரணத்துக்குப் பிறகு பெரும் கவலையில் இருந்தேன். அப்பாஸின் படங்களைப் பார்த்ததும் ரேயின் இடத் துக்குச் சரியான மாற்று என்பதை கண்டுகொண்டேன். அதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னேன்...'' என்கிறார் உலகமே வியக்கும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசோவா.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

அப்பாஸின் படங்கள் பெரும்பாலும் கேள்விகள் நிறைந்தவை. உரையாடல்களின்வழி வாழ்க்கைத் தத்துவத்தைப் பேசுபவை. இவரது ஜிணீstமீ ளியீ சிலீமீக்ஷீக்ஷீஹ் (1997) தற்கொலை செய்யத் துணிந்தவனின் ஒருநாள் பயணம் குறித்தது. மரணத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கும் இந்தப் படத்தில், மரணம் முரண்பாடுக ளின் இடைவெளி என்பதை தொடர்ச்சியான உரையா டல்கள் மூலம் முன்வைக்கிறார். இறப்பைக் குறித்து விரிவாகப் பேசும் இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் றிணீறீனீமீ பீ’ளிக்ஷீ விருது பெற்றுள்ளது.

அப்பாஸின் 'கீவீஸீபீ ஷ்வீறீறீ நீணீக்ஷீக்ஷீஹ் us (1999)’ சுயநலத்தால் மனிதம் சிதைவுறுவதை கிராமத்து நகரத்து மனிதர்களின் வேற்றுமை கொண்டு பேசுகிறது. படம் நெடுகிலும் ஈரானிய கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பது அவரது ரசனைக்கு சான்று! அப்பாஸின் ஆகச் சிறந்த படைப்பாக இது கருதப்படுவதற்கு, அதன் கருப்பொருளாக  அடிப்படை மனித நேயம் இருப்பது ஒரு முக்கியக் காரணம்.

அப்பாஸின் 'கீலீமீக்ஷீமீ வீs னீஹ் யீக்ஷீவீமீஸீபீ’s லீஷீனீமீ (1987)’, பள்ளியில் இருந்து மாற்றி எடுத்து வந்துவிட்ட நண்பனின் பாட நோட்டுப் புத்தகத்தை, அவனிடம் சேர்க்க, அவனது வீட்டைத் தேடி அலையும் சிறுவனின் கதை. தன் தவற்றினால், டீச்சரிடம் நண்பன் தண்டனை பெறக் கூடாது என்பதில் முனைப்பாய் இருக்கும் ஒரு சிறுவனின் பதற்றத்தை நேர்த்தியாய்ப் படம் பிடித்துக் காட்டியிருப்பார். அப்பாஸின் 'சிறீஷீsமீ uஜீ (1990)’, வேலை தேடும் இளைஞன் தன்னை இயக்குநர் மெஹ்மல்பப் எனத் கூறிக்கொண்டு ஒரு குடும்பத்தை ஏமாற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஈரானில் நிலவும் சினிமா மோகம் குறித்த இந்தப் படத்தில் நிஜத்தில் பாதிக்கப்பட்ட வர்களே நடித்திருக்கிறார்கள்; இயக்குநர் மெஹ்மல்பப் உட்பட. நிழலும் நிஜமும் சந்தித்துக்கொள்ளும் அந்த இறுதிக் காட்சி நெகிழ வைப்பது.

அப்பாஸின் படங்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே படமாகப்படுகின்றன. அதேபோல ஜிணீstமீ ளியீ சிலீமீக்ஷீக்ஷீஹ், ஜிமீஸீ போன்ற படங்களில் பிரதான கதாபாத்திரம் காரில் பயணித்தபடியே இருப்பதுபோல் படமாக்கி யுள்ளார். கிராமப்புறங்களும் கார் பயணங் களும் தன் விருப்பம் என அப்பாஸ் குறிப்பிடு கிறார். அப்பாஸ் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியரும்கூட! தன் சிஷ்யனும் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநருமான ஜாபர் பனாஹியின் 'கீலீவீtமீ ஙிணீறீறீஷீஷீஸீs’, 'சிக்ஷீவீனீsஷீஸீ நிஷீறீபீ’ திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அப்பாஸ் கியோஸ்தமியின் 'ஜிமீஸீ (2002)’ ஆரவாரமான டெக்ரான் நகர வீதிகளில் காரில் பயணிக்கும் நாயகி, உடன் பயணிப்பவர்களுடன் கொள் ளும் சுவாரஸ்யமான/ தீவிரமான விவாதங் களின் தொகுப்பு. பத்து நீண்ட காட்சிகள். விவாகரத்து பெற்ற நாயகி தன் நிலையை மகனிடம் விளக்க முயற்சித்துத் தோல்வியுறும் முதல் காட்சியோடு தொடங்குகிறது படம். தொடர்ச்சியாய் தன் சகோதரி, ஒரு மணப்பெண், பாலியல் தொழிலாளி என அவள் சந்திக்கும் யாவரிடமும் அவளுக்கு விவாதிக்க விஷயங்கள் இருக்கின்றன. பெரும்பாலான  உரையாடல்கள் திருமணத் தைச் சுற்றியே! எதிர்பார்ப்பு இல்லாமல் எந்த உறவும் சாத்தியம் இல்லை என்கிறாள் பாலியல் தொழிலாளி. மற்ற பெண்களின் பேச்சில் இருந்து அது உண்மை என்றே நிறுவப்படுகிறது. நவீன வாழ்வின் பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு பெண்ணிய பார்வையில் முன்வைக்கிற வகையில் இந்தப் படம் முக்கியமான ஒன்று.

ஒரு சிநேகிதனை அணுகும் பாவனையில் நம்மால் ஈரானியப் படங்களை அணுக முடிவதன் காரணம், அவற்றில் இருக்கும் யதார்த்தம்; நம் பக்கத்து வீட்டில் நடைபெறும் கதையைப்போல தொனிக்கும் அந்நியமற்ற தன்மை. காற்று நம்மைத் தாங்கிச் செல்லும் என்னும் அப்பாஸின் படத் தலைப்பைப்போல கவித்துவமான படைப்புகள் இவை. தீவிரமான அரசியல் கருத்துக்களையும் மென்மையான மொழியில் பேசும் ஈரானிய திரைப்படங்கள் நம் மனத்தோடு நெருக்கம் கொள்வதற்கு இந்தத் திரைமொழியே காரணம். உலக சினிமா குறித்த அறிமுகங்கள் பெற பலரும் ஈரானிய சினிமாவை முதலில் தேர்ந்தெடுப்பதன் ரகசியமும் அதுதான். அதிகமாக ஈரானிய படங்களை பார்க்க பார்க்க, நாம் இன்னும் அதிகமாய் சினிமாவை நேசிக்கத் துவங்குகிறோம் என்பதே உண்மை!

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

மொஹ்சன் மெஹ்மல்பஃப்

'சிறைச்சாலையில் நான்கரை வருடங்கள் இருந்தேன். விடுதலையான பின்னும் அநீதிக்கு எதிரான என் போராட்டத்தைத் தொடர்கிறேன். இந்த முறை ஆயுதங்களுக்குப் பதிலாக கலையையும் சினிமாவையும் என் போராட்டத்துக்குப் பயன்படுத்துகிறேன்''

- மொஹ்சன் மெஹ்மல்பஃப்

அப்பாஸை தொடர்ந்து தனித்தன்மை நிறைத்த திரை நுட்பங்களினால் வெற்றி கண்டவர் மொஹ்சன் மெஹ்மல்பஃப். எழுத்தாளர், அரசியல் போராளி என இவருக்குப் பல முகங்கள் உண்டு. மெஹ்மல் பப்பின் மனைவியும், மகள்கள் இருவரும் திரைப்பட இயக்குநர்களே! அரசியல் சமூக பிரச்னைகளே இவர் படங்களின் மையப் புள்ளி. இவரின் 'ஜிலீமீ சிஹ்நீறீவீst (1987)’ திரைப்படம் அதன் உள்ளார்ந்த அரசியலுக்காகப் பெரிதும் பேசப்பட்டது. வாழ வழியின்றி ஈரானில் அவதியுறும் ஆப்கன் அகதிகளின் நிலையை முகத்தில் அறைந்தாற்போல சொல்லும் கதை. மனைவியின் மருத்துவ செலவுக்காகத் தொடர்ந்து ஏழு நாட்கள் சைக்கிள் ஓட்டும் அகதியின் ஏழ்மையை சுட்டிக்காட்டும் இந்தப் படம் வலி மிகுந்த நிதர்சனத்தின் பதிவு.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

தன் ரசனைக்கென படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் கலையை ஆயுதமாகப் பயன்படுத்தி சமூக அவலங்களுக்குக் குரல் கொடுப்பதே மெஹ்மல்பப் படங்களின் சிறப்பு. அதற்கு மற்றுமொரு உதாரணம் 'நிணீதீதீமீலீ (1995)’. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்க்கையை, வண்ணங்கள் நிறைத்துப் பேசும் அற்புத காதல் கதை. கால்மிதி கம்பளிகள் தயாரிக்கும் நாடோடி கூட்டத்தின் வாழ்வை விவரிக்கும்  இந்தப் படத்தின் பின்னணி சுவாரஸ்யமானது. பொதுவாக ஈரானிய படங்களில் காணக் கிடைக்காத வண்ணங்கள் இதில் உண்டு. யதார்த்தத்தில் கனவைப் புகுத்திய அசாதாரண காதல் கதை இது. பெரும் விவாதத்துக்கு உள்ளான மெஹ்மல்பப்பின்

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

'ரிணீஸீபீலீணீளீணீணீக்ஷீ (2001)’ தாலிபான்களின் ஆட்சியில் ஆப்கன் மக்கள் பட்ட துன்பங்களைச் சொல்வது. பசியும் பட்டினியும் அடிப்படைத் தேவைகளும் பெருகிக் கிடக்க ஆயுதங்களைத் தவிர்த்து ஒரு முன்னேற்றமும் காணாத தாலிபான்களின் முகமூடியைக் கிழிக்கும் துணிச்சலான படைப்பு. சர்வதேச அங்கீகாரமான திமீபீமீக்ஷீவீநீஷீ திமீறீறீவீஸீவீ விருதை இவருக்கு வாங்கித் தந்த படம்.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

மஜித் மஜிதி

''குழந்தைகளுக்கான திரைப்படங்களில் நீங்கள் பல விதிமுறைகளை உடைக்கலாம். குழந்தைகளின் உலகில் உண்மை மிகத்தெளிவாக இருக்கிறது.''

- மஜீத் மஜிதி

ஈரானிய சினிமா என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவை சிறுவர்களை மையப்படுத்திய படங்கள். இயக்குநர் மஜீத் மஜிதியின் உலகம் குழந்தைகளுக்கானது. தொலைந்து போன ஒரு ஜோடி செருப்புகளைக் கொண்டும், குடுவையில் இருக்கும் தங்கமீன்களைக் கொண்டும் கதை படைத்திட மஜிதியால் மட்டுமே முடிகிறது. சிறுவர்கள் உலகில் நிகழும் சின்னச் சின்ன பதற்றங்கள், ஏக்கங்கள், கேள்விகள் அனைத்தையும் துல்லியமாய் காட்சிப்படுத்தும் படைப்புகள் இவருடையவை. 'சிலீவீறீபீக்ஷீமீஸீ ளியீ பிமீணீஸ்மீஸீ (1998)’ படத்தில் வரும் அண்ணனையும் தங்கையையும் அத்தனை எளிதில் நம்மால் மறக்க இயலாது. தொலைந்த செருப்பை அணிந்துள்ள சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் இவர்கள், பார்வையற்ற அவளின் ஏழைத் தகப்பனைப் பார்த்ததும் மௌனமாகத் திரும்பி வரும் காட்சி ஒன்று போதும், மஜிதியின் சிறுவர்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள.

பார்வையற்ற சிறுவன் மொஹமத்தின் கனவுகள் நிறைந்த உலகத்தைப் பேசும் உன்னத காவியம் மஜிதியின் 'சிஷீறீஷீuக்ஷீ ளியீ றிணீக்ஷீணீபீவீsமீ (2000)’. படத்தின் தலைப்பில் துவங்கும் கவித்துவம், காட்சிகள் முழுக்க விரவி இருப்பது அழகு. ஈரான் மலை கிராமம் ஒன்றில் நிகழும் இந்தப் படத்தின் நிலப்பரப்பு காட்சிகள் கண்களுக்கு விருந்து. மொஹமத் சிறுவன், நல்ல படிப்பாளி, திறமையானவன். குறை என்பது அவனிடம் இல்லை; அவனை வித்தி யாசப்படுத்தி பார்க்கும் நம்மிடமே! அவனை பாரம் எனக் கருதும் தந்தை, ஒரு நிமிட தடுமாற்றத்துக்குப் பிறகு மனம் மாறும் இறுதிக் காட்சி உறவின் மகத்துவத்தைச் சொல்லுவது.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

தாயின் இரண்டாவது கணவனுக்கும் மகனுக்கும் இடையே நிகழும் பனிப்போரை மையப்படுத்தியது மஜிதியின் 'றிமீபீணீக்ஷீ (1996)’. உறவுச் சிக்கல்களை சிறுவனின் பார்வையில் சொல்ல முனைவது. புதிய தகப்பனைக் குறித்து முழுதாய் அறிந்து கொள்ளாமல், அன்பை அடைகாக்கும் சிறுவனின் உணர்ச்சிப் போராட்டங்கள், அவனுள் உண்டாக்கும் வன்மம் என இந்தப் படம் உணர்ச்சிமிக்க பல விஷயங்களை கையாள்கிறது.

மிகச்சிறந்த ஈரானிய காதல் படங்கள் பட்டியலில் மஜிதியின் 'ஙிணீக்ஷீணீஸீ (2001)--க்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அகதிப் பெண்ணின் காதலைப் பெற தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுக்கும் இளைஞனைப் பற்றியது. பாரான் என்பது மழையைக் குறிக்கும் சொல். அவள் மேகம், அவன் பூமி... அவன் மீது மழையாகப் பொழிந்தாளா என்பதை கவிதை மொழியில் காட்சிப்படுத்திய படைப்பு.

குழந்தைகளைப் பின்னணியாகக் கொண்டு யுத்தத்தின் தீவிரத்தைப் பேசிய படங்கள் 'ஷிtக்ஷீணீஹ் ஞிஷீரீs(2004)’, 'ஜிuக்ஷீtறீமீs சிணீஸீ திறீஹ்(2004)’. மர்சீ மெஷ்கினியின் ஷிtக்ஷீணீஹ் ஞிஷீரீs தாலிபான் போருக்குப் பின் நிகழும் கதை. யுத்தத்தின் பசிக்கு இரையாகிப்போன அண்ணன், தங்கை இருவரின் கதை. அமெரிக்காவுக்கு எதிராகப் போராடிய காரணத்தினால் சிறைக்குப் போன தந்தை, மறுமணம் புரிந்ததால் வேறொரு சிறையில் இருக்கும் தாய். பிள்ளைகளின் நிலையோ பரிதாபம். தாயோடு கொஞ்ச நாட்கள் சிறையில் கழிக்கும் இவர்கள் புதிய சட்டத்தால் சிறையில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். வாழ வழி தேடி, மீண்டும் தாயிடம் சேர அந்தச் சிறுவர்கள் யுத்த பூமியில் அலைந்து திரியும் காட்சிகள் கண்ணீர் வரவழைப்பவை.

ஈரானிய இயக்குநர் பாஹ்மன் கோபாடியின் ஜிuக்ஷீtறீமீs சிணீஸீ திறீஹ். சதாமின் மரணத்துக்குப் பின்னாக வெளிவந்த இப்படம், ஈராக், துருக்கி எல்லையில் நிகழ்வதான கதை. படிப்பு, விளையாட்டு, பண்டிகை, கொண்டாட்டங்கள் எதுவுமில்லாத பிள்ளைகள் அவர்கள். போரின் எச்சமாய் நிலமெங்கும் மிஞ்சிக்  கிடக்கும் கண்ணி வெடிகளை சேகரித்து பணத்துக்கு விற்கிறார்கள். அவர்கள் அறிந்த சொற்கள் மிகச் சில. சதாம், அமெரிக்கா, போர், கண்ணி வெடி, போர்க்கால அறிவிப்புகள் என்பனபோல. போரில் சீரழிக்கப்பட்ட சிறுமி ஒருத்தியைச் சுற்றியே கதை சுழல்கிறது. இனி எப்போதும் அன்பை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலைக்கு தள்ளப்பட்டவள். சோகம் தாங்கிய கண்கள், வன்மம் கொப்பளிக்கும் வார்த்தைகள் அவளின் அடையாளங்கள். அவளது கடந்த காலம் அதிர்ச்சிகரமானது. சின்ன நிகழ்வுகள்கூட சிறுவர் மனநிலையைப் பாதிக்கும் என விவாதங்கள் காண நேரிடும் இந்நாட்களில், போர் பின்னணியிலான இத்தகைய சிறுவர் உலகம் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

ஜாஃபர் பனாஹி

''மில்லியன் டாலர்கள் செலவழித்துப் படங்கள் தயாரிக்கும் உலகில், நாங்கள் ஒரு டாலருக்குக் குறைவான மதிப்புள்ள மீனை வாங்கிட விரும்பும் சிறுமியைக் குறித்துப் படம் எடுக்கிறோம். நாங்கள் காண்பிக்க விரும்புவதும் அதுவே!''

-  ஜாஃபர் பனாஹி

இயக்குநர் ஜாபர் பனாஹியை ஈரானிய சினிமாவின் கலகக்காரன் என்றால் மிகையில்லை. திரைப்படங் களின் வழி இவர் முன்வைக்கும் அரசியல் துணிச்சலானது. அதற்கு அவர் கொடுத்த விலை, படம் இயக்குவதில் இருந்து அரசாங்கத் தடையும், சில ஆண்டுகள் சிறைத்தண்டனையும். கேன்ஸ் விழாவில் சிணீனீஙக்ஷீணீ பீ’ளிக்ஷீ விருதுபெற்ற முதல் ஈரானியப் படம் பனாஹியின் 'கீலீவீtமீ ஙிணீறீறீஷீஷீஸீs (1995)’. இந்தத் திரைப்படத்தில் தங்க மீன் ஒன்றினை வாங்க ஏங்கிடும் சிறுமியின் கனவுப் பயணத்தில் சுவாரஸ்யமான மனிதர்கள் பலரை அறிமுகம் செய்கிறார் பனாஹி. புத்தாண்டு கொண்டாட்ட குதூகலத்தில் இருக்கும் டெஹ்ரான் நகரவாசி களின் மத்தியில் அடுத்த நாளை குறித்து எதுவும் நிச்சயமில்லாத மனிதர்களும் இருக்கிறார்கள். ஜாபரின் நோக்கம் அவர்களை நமக்கு அறிமுகம் செய்வதே. ஒற்றை வெள்ளை பலூனோடு இறுதிக் காட்சியில் தனித்து அமர்ந்திருக்கும் ஆப்கன் அகதிச் சிறுவன் நமக்கு உணர்த்தும் பேருண்மை கசப்பானது.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

ஜாஃபர் பனாஹியின் 'ஜிலீமீ கிநீநீஷீக்ஷீபீவீஷீஸீ (2000)’ குறும்படம், எளியவர்கள் குறித்த கதையென்றால் அழுது வடியத் தேவையில்லை என்பதற்கு ஓர் உதாரணம். மேலும், அன்பும் கருணை யும் நிறைந்து கிடப்பது அவர்கள் உலகத்தில்தான் என்பதை 10 நிமிடங்களுக்குக் குறைவான நிகழ்வில் நமக்கு உணர்த்துவது. ஜாஃபரின் விவீக்ஷீக்ஷீஷீக்ஷீ (1997), சிக்ஷீவீனீsஷீஸீ நிஷீறீபீ (2003) ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்க படைப்புகளே. ஜாஃபர் பனாஹியின் 'ஜிலீமீ சிவீக்ஷீநீறீமீ (2000)’ சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் மூன்று பெண்கள் எதிர்கொள்ளும் மோசமான அனுபவங்களின் கோவை. அதிக சர்ச்சைகளுக்கு ஆளான இந்தப் படம் வெனிஸ் திரைப்பட விழாவில்

நிஷீறீபீமீஸீ லிவீஷீஸீ விருது பெற்றது. பெண் குழந்தை பிறந்ததால் தன் மகள் விவாகரத்து பெற நேரிடும் என ஒரு மூதாட்டி கவலைகொள்ளும் மருத்துவமனைக் காட்சியோடு தொடங்குகிறது இந்தப் படம். சிறை சென்றுவந்த பெண்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு செல்ல முடியாதபடி நெருக்கும் சமூகத்தின் கோரப் பிடியை ஓங்கிய குரலில் பேசும் படம். இதில் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எந்தக் காட்சியும் சேர்க்கப்படவில்லை. மாறாக, ஈரானியப் பெண்கள் காண நேரிடும் இருண்ட பக்கத்தை உள்ளபடியே நமக்குக் காண்பிக்கிறார் பனாஹி.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

மர்சீ மெஷ்கினி

பெண்களை முன்னிலைப் படுத்தி வெளிவந்துள்ள ஈரானிய படங்களின் பட்டியல் பெரிது. ஈரானிய பெண் படைப்பாளிகளில் ஒருவரான மர்சீ மெஷ்கினி இயக்கிய ஜிலீமீ ஞிணீஹ் மி தீமீநீணீனீமீ ணீ கீஷீனீணீஸீ (2000) ஈரானிய பெண்களின் நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்வது. ஒரு சிறுமி, ஒரு நடுத்தர வயதுப் பெண், ஒரு மூதாட்டி... இந்த மூவரும் தங்களை அடையாளம் கண்டுகொள்ள நேரிடும் ஒரு நாளைக் குறித்த மூன்று தனிக்கதைகள். முடக்கப்படும் சுதந்திரம், லட்சியத்தை வென்றெடுக்க விடாமுயற்சி, இறுதி நாட்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்வது ஆகிய மூன்று விஷயங்களை இந்தப் பெண்களின் வாழ்வில் ஒருநாள் நிகழ்வின் மூலம் பார்வையாளனுக்கு சிறப்பாய்க் கொண்டு சேர்ந்திருக்கிறார் மர்சீ மெஷ்கினி. தீவிரமான பெண்ணியக் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசும் இந்தத் திரைப்படம் ஈரானில் சிறிது காலம் தடை செய்யப்பட்டது. மத ரீதியான கட்டுப்பாடுகளை விலக்கிப் பார்த்தால் இந்தத் திரைப்படம் எல்லா தேசத்து பெண்களுக்கும் பொருந்தி வருவதே, இந்தத் திரைப்படத்துக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள மர்சீ, இயக்குநர் மெஹ்மல்பஃப்பின் மனைவி.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!
ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

அஸ்கர் ஃபர்ஹாடி

2000-ம் ஆண்டுக்குப் பின் வந்த ஈரானிய இயக்குநர்களில் முக்கியமானவர் அஸ்கர் ஃபர்ஹாடி தனது 'கி ஷிமீஜீணீக்ஷீணீtவீஷீஸீ (2012)’ மூலம் சினிமா ஆர்வலர்களை ஈர்த்தவர். ஈரானில் நிலவும் வெளிநாட்டு மோகம், பெற்றோர் பிள்ளைகளின் கடமை, எளியவர்கள் மீதான வன்மம் என இந்தப் படம் தொட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம். அல்சைமர் நோயில் நினைவுகளை இழந்து இருக்கும் தகப்பனை விட்டுவிட்டு, கணவனை தன்னோடு வெளிநாட்டுக்கு வரச் சொல்கிறாள் நாயகி. ''அவருக்கு நீ அப்படிச் செய்யப்போவது தெரியப்போவது இல்லை'' என்பவளிடம், ''ஆனால் எனக்குத் தெரியும் அவர் என் அப்பா என்று...'' எனக் கூறுகிறான் நாயகன். மனித உறவுகள் அழகானவை. தொடர்ந்து இயங்க அதன் அற்புத கணங்கள் எப்போதும் நம்முள்ளே இருப்பது அவசியம். அத்தகைய அற்புத கணங்களை உருவாக்குவதில் வெற்றிபெறாது போகும் கணவன்  மனைவியின் கதை. 2012-ம் ஆண்டு சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்றது இந்தத் திரைப்படம்.

ஈர உணர்வுகளைப் பேசும் ஈரானியப் படங்கள்!

ஃபர்ஹாடியின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த படமான 'கிதீஷீut ணிறீறீஹ் (2009)’ சைக்காலஜிகல் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. எதிர்பாராத அசம்பாவத்தினால் நண்பர்களின் குடும்பங்களுக்கிடையே இடையே நிகழும் மனப் போராட்டங்களின் அப்பட்ட பதிவு. குழு மனப்பான்மையின் விளைவுகளை ஆண் - பெண் உறவுகளின் துணைகொண்டு சொன்ன விதத்தில் இந்தப் படம் தனித்து மிளிர்கிறது.