சினிமா: க.நாகப்பன்
படங்கள்: செனி.பி.அருகாட்டு
'அட்டகத்தி’ படத்தில் அறிமுகமான பெங்களூரு பேரழகி நந்திதா. 'முண்டாசுப்பட்டி’யில் ஹோம்லி முத்திரை பதித்தவர், இப்போது 'அஞ்சலி’, 'இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக் கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''அறிமுக இயக்குநர்கள் படங்களி லேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?''
'' 'அட்டகத்தி’ கதையை ரஞ்சித் சொன்னபோது எனக்கும் அந்தத் தயக்கம் இருந்தது. இயக்குநர், நடிகர், டெக்னிக்கல் டீம் என எல்லோரும் புதுமுகமாக இருக் கிறார்களேன்னு ரொம்ப யோசிச் சேன். நானும் புதுமுகம்தானேனு சமாதானம் செய்துகிட்டு நடிச்சேன். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு! புது டைரக்டர்னு யாரையும் சாதாரணமா நெனைச்சிடக் கூடாதுன்னு அப்பவே முடிவெடுத் துட்டேன். அதனால்தான், 'எதிர்நீச்சல்’, 'முண்டாசுப்பட்டி’ன்னு தொடர்ந்து புதுமுக இயக்குநர்கள் படங்கள்ல நடிச்சேன். இப்போ வர்ற புதுமுக இயக்குநர்கள் நெறைய திறமையோடு, நல்ல கதைகளோடு படம் எடுக்குறாங்க. சமீபகாலமாக வித்தியாசமான படங்கள்தான் சக்சஸ் ஆகுது. அடுத்தடுத்து புது இயக்குநர்கள் படங்கள்ல நடிக்க ஆர்வமா இருக்கேன்.''

''அப்படின்னா, பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் படங்கள்ல நடிக்கவே மாட்டீங்களா?''
''பெரிய நடிகர்களோடு நடிக் கணும்கிற ஆசை எனக்கும் இருக்கு. ஆனா, அதுக்காக என் கேரக்டருக்கான முக்கியத் துவத்தை இழக்க மாட்டேன். எனக்குப் பிடிச்ச கேரக்டரா இருந்தா, கண்டிப்பா பெரிய ஹீரோவோடு ஜோடியாகிடு வேன்.''
''எந்த பெரிய ஹீரோ படத்துல நடிக்கணும்னு ஆசைப்படறீங்க?''
''மிஸ் பண்ணாம அத்தனை ஹீரோக்கள்கூடவும் நடிச்சிட லாம்ல! அஜித், சூர்யா படங் கள்னா உடனே நடிக்க ரெடி!''
''காமெடி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறீங்களே... ஏன்?''
''வழக்கமான ஹீரோயினாக டூயட் மட்டும் ஆடுறதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனாலதான் கொஞ்சம் காமெடி கலந்த படங்கள்ல நடிக்கிறேன். சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்’ படத்தில் மலை கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். விஜய் சேதுபதி எனக்கு ஜோடி. இந்தப் படம் நடிப்பில் எனக்கு இன்னொரு அடையாளத்தைக் கொடுக்கும். நந்திதா இந்த கேரக் டருக்குப் பொருத்தமா இருப்பானு இயக்குநர்கள் நெனைக்குறாங்க. அவங்க நெனைக்கிறதை முடிஞ்சவரை நான் சரியா செயல்படுத் திக் காட்டணும்னு ஆசைப்படு றேன்.''

''எந்த கேரக்டரில் நடிக்க ஆசை?''
''எனக்குக் கிடைச்ச வெரைட் டியான கேரக்டர்கள் மாதிரி எல்லா ஹீரோயின்ஸுக்கும் அமைஞ்சிருக்குமான்னு தெரியலை. அதே மாதிரி இது என்னோட ட்ரீம் கேரக்டர், அதுல ஆன்ட்டி ஆகுறதுக்குள்ள நடிச்சுத்தான் ஆவேன்னு அடம் பிடிக்கவும் மாட்டேன். கிடைக்கிற எல்லா கேரக்டர்ஸ்லயும் திருப்தி கிடைக்கிற வரைக்கும் நடிச்சுக்கிட்டே இருப்பேன்.''
''உங்க ஹீரோக்கள் விஜய் சேதுபதி, விமல், விஷ்ணு, பரத் இவர்களில் ரொம்ப சேட்டை பண்ற ஹீரோ யார்?''
''விஷ்ணு ரொம்பவே யதார்த்தமானவர். விமல், பரத் ரெண்டு பேரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அடிக்கிற காமெடிக்கு அளவே இருக்காது. விஜய் சேதுபதியோட இப்போ எனக்கு ரெண்டாவது படம். அப்பவும் சரி, இப்பவும் சரி, கேமரா ஏரியாவுக்குள் வந்துட்டா அப்படியே அந்த கேரக்டருக்கான வேலையைத் தவிர, வேறு எந்த ஆங்கிள்லயும் அவரைப் பார்க்க முடியாது. இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு டைப்!''
''இவ்ளோ பிஸியிலும் எம்.பி.ஏ படிக்கிறீங்களாமே?''
''நடிப்போடு எனக்குப் படிப்பும் முக்கியம். மற்ற ஆர்வம் எல்லாம் அடுத்து பார்த்துக்கலாம்னு அம்மா சொல்வாங்க. எவ்வளவு பெரிய ஸ்டாரா ஆனாலும், படிப்பை விடமாட்டேன்.''

''கிசுகிசு வந்தால்...?''
''சிரிச்சுட்டுப் போயிடுவேன். அட்டகத்தி தினேஷ§டன் ஒரு தடவை கிசுகிசு எழுதியிருந்தாங்க. அதை சும்மா ஜாலியா எடுத்துக்கிட்டேன். கிசுகிசு பற்றி கமென்ட் செய்ய மாட்டேன்; கோபப்பட மாட்டேன்.''
''நந்திதாவின் காதல்?''
''இனிமேதான் காதலிக்கணும். சினிமா காதல் மட்டும்தான் இப்போ என்னைச் சுத்திச் சுத்தி வருது.''
''பிடித்த நடிகர்?''
''ஒன் அண்ட் ஒன்லி அஜித்!''
''பிடித்த இயக்குநர்கள்?''
''எந்த இயக்குநரையும் மிஸ் பண்ணாமல் நடிக்க விருப்பம். வெற்றிமாறன், வெங்கட்பிரபு படங்கள் என்றால் டபுள் ஓகே!''
''ட்ரீம் ரோல்?''
'' 'காதல்’, 'மரியான்’, 'கடல்’ படங்களின் ஹீரோயின் கேரக்டர்கள் பிடிக்கும்.''

''பிடித்த உணவு?''
''ஹைதராபாத் சில்லி சிக்கன்.''
''பிடித்த உடை?''
''ஜீன்ஸ், சேலை.''
''ப்ளஸ்?''
''ஜாலி, காமெடி, ஹோம்லி கேரக்டர்களில் நடிப்பது.''
''மறக்க முடியாத பாராட்டு?''
'' 'முண்டாசுப்பட்டி’யில் நடித்ததற்கு ரஜினி சார் பாராட்டியது.''