Published:Updated:

பிள்ளைகளை ஓழுக்கமாக வளர்க்காவிட்டால்?

பிள்ளைகளை ஓழுக்கமாக வளர்க்காவிட்டால்?

பிள்ளைகளை ஓழுக்கமாக வளர்க்காவிட்டால்?

பிள்ளைகளை ஓழுக்கமாக வளர்க்காவிட்டால்?

Published:Updated:

ரு பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்ததால், அப்பெண்ணின் குடும்பம் மட்டுமின்றி, படம் எடுத்தவனின் குடும்பமும் எப்படியெல்லாம் சின்னாபின்னப்படும் என்பதுதான், ‘பாபநாசம்' படத்தின் கதை. மலையாளத்தில் மோகன்லாலை வைத்து `த்ரிஷ்யம்' என்கிற பெயரில் தான் எடுத்த வெற்றிப் படத்தை அப்படியே தமிழ்ப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

பிள்ளைகளை ஓழுக்கமாக வளர்க்காவிட்டால்?

கண்ணை இமை காப்பது போல குடும் பத்தைக் காத்து வருகிறார், கேபிள் டி.வி நடத்தும் கமல். சந்தர்ப்ப சூழலில், அவரின் மூத்த மகள், ஆபாசப் படம் எடுத்தவனை தன் அம்மாவின் முன்னிலையில் கொன்றுவிடுகிறாள். படிப்பறிவு கம்மிதான் என்றாலும் சினிமாவை சுவாசமாகக் கொண்ட கமல், சினிமாக்களில் வரும் காட்சிகளை வைத்தே கொலைப் பழியில் இருந்து குடும்பத்தை போலீஸிடமிருந்து சாதுர்யமாக எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மிச்ச சொச்ச ஆட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நம்ம பையனுக்கு பிரைவஸி வேணாமா?’ என போலீஸ் ஐ.ஜி-யாக வரும் அம்மா, வக்காலத்து வாங்கும்போது, ‘தப்பு பண்றவங்கதான் பிரை வஸி கேட்பாங்க!’ என்று கணவர் சொல்வது, சாட்டையடி.

போலீஸ் சித்ரவதைக்குப் பிறகு, ‘ஏங்க... பேசாம நாமதான் செஞ்சோம்னு ஒப்புக்கிட்டு சரண் அடைஞ்சிடலாங்க!’ என குற்றம் குறுகுறுக்க கௌதமி கேட்கும்போது, ‘இதுவே நம்ம பொண்ணுக்கு ஏதாவது ஆகி இருந்தா அந்த ஐ.ஜி என்ன பண்ணி இருப்பாங்க? பையனை தப்பிக்க வைக்கத்தான் யோசிப்பாங்க. அவங்க அவங்களுக்கு அவங்க புள்ளைங்கதான் முக்கியம். எனக்கு என் குடும்பம் முக்கியம்’ என்ற கமலின் பதில்தான், படத்தை நகர்த்தும் ஜீவன். 

‘அழகான குருவிக் கூடுபோல கட்டிய கூட்டை ஒரு தேவையில்லாத விருந்தாளி அழிக்கப் பார்த்தார். அவரைப் போகச் சொன்னோம். கேட்கலை. வேணும்னு செய்யலை. விபத்தா நடந்திருச்சு. மன்னிச்சுக்கோங்க. என் பாவத்தை கடைசி காலம் வரை இந்த பாபநாசம் நதியில மூழ்கி கரைச்சிக்குறேன்!’ என முகத் தசைகள் ஆட ஐ.ஜி தம்பதியிடம் கமல் பாவ மன்னிப்புக் கேட்கும் காட்சி, கலங்க வைக்கிறது!

க்ளைமாக்ஸ் முடிச்சை போலீஸிடம் மட்டு மல்ல, குடும்பத்தினரிடமோ, திரையில் வேறு யாரிடமுமோ சொல்லாமல், ரசிகர்களின் பார்வைக்கு மட்டும் காட்டி முடித்திருப்பது நச்!

பெண்கள் எப்போதும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்துகொள்ள வேண்டும் என்கிற கிளிஷே மெசேஜை தாண்டி, ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கும் ‘பாபநாசம்’, பெண்ணைப் பெற்ற... பிள்ளைகளைப் பெற்ற அனைவருமே தரிசிக்கவேண்டிய ஒன்றே!

பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism