Published:Updated:

தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

Published:Updated:

யக்கம், ஒளிப்பதிவு, ஒப்பனை என்று சினிமா துறையில் பெண்கள் பலர் நிறைவான பங்களிப்பு கொடுத்திருந்தாலும், 'எடிட்டர்’ நாற்காலியில் இதுவரை பெண்கள் அமரவில்லை. நூற்றாண்டுகால தமிழ்த் திரைப்படத்துறையின் அந்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார், கிருத்திகா காந்தி! 'தமிழ்த்திரையின் முதல் பெண் படத்தொகுப்பாளர்' என்ற பெருமையை வென்றெடுத்திருப்பவருடன் கைகுலுக்கினோம்!

தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

 'நான் ஒரு பரத நாட்டியக் கலைஞர். அதையே கல்லூரிப் படிப்பா படிக்கலாம்னு முடிவெடுத்தப்போ, 'நடனம் எப்பவும் உன்கூடதான் இருக்கும். உனக்கான அடையாளத்தை முதல்ல உருவாக்கிக்கோ!’'னு வீட்டில் சொல்ல, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் டிப்ளோமா இன் ஃபிலிம் டெக்னாலஜி (ஞிதிஜி) சேர்ந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

சினிமானு வந்தாச்சு... இனி தீயா வேலை செய்யணும்’னு கற்றலையும், கடின உழைப்பையும் ஆரம்பிச்சேன்!

நான் படிக்கும்போது என் கோர்ஸ்ல பெண்கள் மூணே பேருதான். எங்க சார், 'எப்படியும் கல்யாணம் முடிச்சிட்டு சேனல், விளம்பரம்னு ஒதுங்கிடுவீங்க பொண்ணுங்க. சினிமா பக்கம் வரமாட்டீங்க!’னு ஏமாற்றமா சொல்லும்போது, எனக்குக் கோபமா இருக்கும். மனசுல ஒரு வெறி உண்டாகும். அதை அப்படியே செயல்ல காட்டினேன்.

தமிழக அரசு வழங்கின 2000ம் ஆண்டுக்கான மாணவர் திரைப்பட விருதுகளில், நாங்க குழுவா சேர்ந்து எடுத்த குறும்படமான 'வளர்பிறை’ பல பாராட்டுகளை குவிச்சதோட, எனக்கு 'சிறந்த தொகுப்பாளர்’ விருதும் கிடைச்சது. அதுதான் என்னோட முதல் வெற்றி. 'நான் கண்டிப்பாபடம்பண்ணிக்காட்டுவேன்!’னு படிப்பை முடிச்ச கையோட துறையில் இறங்கிப் பயிற்சி எடுத்தேன்!'' என்றவர், திரைப்படத்தொகுப்பாளர் மோகனுடன் ஐந்து படங்கள் மற்றும் செல்வராஜுடன் ஒரு படத்தில் உதவி தொகுப்பாளராக அனுபவப் பாடங்கள் கற்றிருக்கிறார்.

2001ல் 'உயிரின் எடை 21 கிராம்’ என்ற திரைப்படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கிருத்திகா, இப்போது வெளி வந்திருக்கும் 'ஒரு தோழன் ஒரு தோழி’ படத்தின் எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர். இவர், சன் டி.வியில் வரும் சில நிகழ்ச்சிகளின் இயக்குநரும்கூட!

'சினிமா கனவோடு படிக்கும், உழைக்கும் பெண்கள், 'எடிட்டர்’ கேபினையும் குறிவைங்க. இங்கே அதிக கற்பனை, அதிக உழைப்பு... அதிக வெற்றி!''  மவுஸ் தடவி விடை கொடுக்கிறார், எடிட்டர் கிருத்திகா காந்தி!

அ.பார்வதி  படம்: பா.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism