மீண்டும் சந்தானம்- ராஜேஷ் காம்போ, ஒரு படம்... 12 பாடல்கள்! #QuickSeven

‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் மூலம் தொடங்கிய இயக்குநர் ராஜேஷ்-நடிகர் சந்தானம் காம்பினேஷன், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’... என்று அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது. இதற்கிடையில் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ராஜேஷ் சமீபத்தில் தான் இயக்கிய ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் மட்டுமே சந்தானம் இல்லாமல் அவர் இயக்கிய ஒரே படம். தற்போது இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தை ராஜேஷ் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 8ம் தேதி தொடங்குகிறது. சந்தானத்தின் ‘சக்கப்போடு போடு ராஜா’ படம் வரும் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

சந்தானம்

‘ஜென்டில்மேன்’ படத்தில் தன் மாமா ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே’ என்ற பாடலை தன் சிறார் பருவத்தில் பாடி சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பிறகு ‘வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், மிகச்சிறந்த பாடல்களை தன் இசையில் வழங்கிவருகிறார். இதற்கிடையில் நடிகராக அறிமுகமான ஜி.வி, தற்போது ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘நாச்சியார்’, ‘குப்பத்து ராஜா’, ‘100 சதவிகித காதல்’, ‘ரெட்டைக் கொம்பு’, ‘சர்வம் தாளமயம்’ உள்பட கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருகிறார். இசை, நடிப்பு என்று பயணித்தாலும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் பாடவேண்டும் என்பதே இவரின் நீண்டநாள் ஆசை. அந்த ஆசை இயக்குநர் பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படம் மூலம் நிறைவேறியுள்ளது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ள ‘உன்னைவிட்டாயாருமில்ல... உங்கையும் எங்கையும் சேர்த்து கைரேகை மாத்துது காத்து’ என்ற பாடலை சூப்பர் சிங்கர் புகழ் ப்ரியங்காவுடன் சேர்ந்து பாடியுள்ளார். 

சந்தானம்

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இருவரும் சேர்ந்து ரொமான்டிக் காமெடிப் படமான ‘ப்யார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். ‘பாகுபலி’ படத்தை விநியோகம் செய்த கே புரொடக்ஷன்ஸும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கே புரொடக்ஷன்ஸும் யுவனின் ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸும் பல படங்களை இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். 

சந்தானம்

‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து அனுஷ்கா நடிக்கும் படம் ‘பாகமதி’. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படம் ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் சினிமா. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அசோக் இயக்கும் இந்தப் படத்தின் ஆடியோ டிசம்பரில் ஹைதராபாத், சென்னையில் வெளியாகிறது. ‘பாகமதி’யை ‘ஸ்டுடியோ கிரீன்’  ஞானவேல்ராஜா தமிழில் வெளியிடுகிறார். 

சந்தானம்

யக்குநர் விஜய் தற்போது சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. தங்களின் குழந்தையைக் கருக்கலைப்பு செய்ய நினைக்கும் ஓர் இளம் ஜோடியும் அதையொட்டி நடக்கும் விஷயங்களை ஹாரர் படமாக எடுத்துள்ளார் விஜய். ஏற்கெனவே ஜி.வி.பிரகாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்தவர், தற்போது முதல் முறையாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடனத்தை மையப்படுத்திய படம் ஒன்றில் பிரபுதேவாவை இயக்குகிறார் விஜய். அதில் பிரபுதேவாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ். ஜோடி.. அதில் 12 பாடல்கள் இடம்பெறுகிறதாம்.  

சந்தானம்

டிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 படத்தை இயக்கிவருகிறார். இதில் ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா, வேதிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கான இசையை, மதன் கார்க்கி நடத்தும் ‘டூபாடூ’ என்ற இசைத்தளத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார். ஏற்கெனவே தன் டூபாடூ இணையதளத்தை சினிமா பாடல்களால் நிரப்பி வரும் கார்க்கி, அதில் புதிதாக ஒரு விஷயத்தைம் சேர்த்துள்ளார். தனி இசையமைப்பாளர்களின் பாடல் ட்யூன்கள் குவிக்கப்பட்டு இருக்குமாம். தேவையான இயக்குநர்கள் அங்கிருந்து தங்களுடைய கதைக்குத் தேவையான ட்யூன்களை வாங்கிக்கொள்ளலாம். தங்களுக்கான ட்யூன் அங்கு இல்லையென்றால் தங்களுடைய கதையின் சிச்சுவேஷனை சொல்லிவிட்டால் புது ட்யூன்களை டூபாடூவே அவர்களுக்காகத் தேடி வாங்கித்தரும். இதுதான் இந்த டூபாடூவின் தாத்பர்யம். அதன்படி டூபாடூவில் ட்யூன்களைப் பெற்ற முதல் இயக்குநர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

சந்தானம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-இயக்குநர் பொன்ராம் இணையும் அடுத்தப் படத்தின் பெயர் ‘சீமராசா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். சூரிக்கு முக்கியமான கேரக்டர். இமான் இசையமைக்கிறார். இதுவரை 55 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மூன்றாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தென்காசியில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை வரும் பிப்ரவரி மாதம் வெளியிடுகிறார்கள்.

சந்தானம் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!