Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மோகன், லிசியின் ஐடியா.. சுஹாசினியின் மெனக்கெடல்.. ரேவதியின் சர்ப்பிரைஸ் கிஃப்ட். பூர்ணிமா பாக்யராஜின் 80'S ரி யூனியன் அனுபவங்கள்!

பூர்ணிமா பாக்யராஜ்

டந்த இரண்டு நாள்களாக இணையதளத்தை கலக்கி வருவது சினிமா பிரபலங்களின்  80's Reunion படங்கள்தாம். அவர்கள் அணிந்திருந்த உடையின் நிறங்களே அசத்தலாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான பூர்ணிமா பாக்யராஜிடம் பேசினோம், 

''இந்த வருடத்திற்கான 'தீம்' கலரை யார் தேர்ந்தெடுத்தார்கள்?''

''ஒவ்வொரு வருஷமும் ஒரு தீம் கலர் இருக்கும். கடந்த வருஷம் மஞ்சள் நிறம், அதற்கு முந்தைய வருஷம் வெள்ளை நிறம். இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு கலரை எல்லோரும் பேசித் தேர்ந்தெடுப்போம். இந்த வருஷம் வயலட் கலர் செலக்ட் பண்ணோம். ஸோ அந்தக் கலர்ல டிரஸ் செலக்ட் பண்ணினோம். போட்டோல டிரஸ் பார்க்க அசத்தலா இருந்தது. நாங்களும் இந்தளவுக்கு எங்க தீம் கலர் அழகாக இருக்கும்னு எதிர்பார்க்கலை''.

''இதில் அதிகம் மெனக்கெடுவது யார்?'' 

''நிறைய வேலைப் பார்க்கிறது முதல் மெனக்கெட்டு பண்றது சுஹாசினியும், லிசியும்தான். ஒவ்வொரு விஷயத்துக்கும் ரொம்பவே மெனக்கெடுவாங்க. மற்றபடி ஒவ்வொருத்தரும் உதவி செய்வாங்க. எங்க யாருக்குமே நாங்க பெரிய ஸ்டார்ங்கிற நினைப்பெல்லாம் வந்ததேயில்லை. ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சு பிரிஞ்சு போய், மறுபடியும் ஒண்ணா சேருகிற ஸ்கூல் பிள்ளைங்களோட மனநிலையிலதான் இருப்போம்.''

''இன்ப அதிர்ச்சி, கிஃப்ட்ஸ் எல்லாம் நடந்ததா ரீயூனியன்ல?''

'' கிஃப்ட்ஸைப் பொறுத்தவரைக்கும் யாருக்கும் ஸ்பெஷலா எல்லாம் கொடுக்கமாட்டோம். எந்தப் பாகுபாடும் இல்லாம ஒரே கலர் கிஃப்ட் கவர்ல பேக் பண்ணிதான் கொடுப்போம். இந்த முறை வெல்கம் கிஃப்ட் மாதிரி ஒண்ணு ரெடி பண்ணியிருந்தோம். அது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதே போல வயலட் கலர் ஹோம் மேட் சோப்பை பரிசாகக் கொடுத்தாங்க ரேவதி. ஒரு முறை எங்களுடைய போட்டோ போட்ட கப் பரிசா கொடுத்தார் ஒரு வி.ஐ.பி (பேர் சீக்ரெட்டாம்). இப்படி ஒவ்வொரு வருஷமும்  நாங்க பகிர்ந்து கொள்கிற கிஃப்டை வீட்டில் அவ்வளவு பத்திரமாக வெச்சிருப்போம்''

 ''இந்த ஒருங்கிணைப்பு வேலைகள் எப்படி நடக்கும்?''

''ஒவ்வொரு வருஷமும் நடிகர், நடிகைகளின் ஃப்ரீ டேட்டை அடிப்படையா வெச்சு, எங்க 'கோர் கமிட்டி' மூலமா ஒரு தேதியை முடிவு பண்ணுவோம். அதை வெச்சு ஒவ்வொருத்தருக்கும் தகவல் கொடுப்போம். எந்த இடத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதையும் தெளிவாகச் சொல்லிடுவோம். எல்லோருக்கும் அந்த இடம் பிடித்த இடமாக இருக்கிற மாதிரி பேசி முடிவு பண்ணுவோம். கடந்த வருஷம் ஒரு நடிகர் கெட் டுகெதரை பிக்ஸ் பண்ணினோம். இந்த வருஷம் ஒரு ஹோட்டலில் வைக்க முடிவுப் பண்ணினோம். அதே மாதிரி இந்த வருஷம் கெட் டு கெதர் ரெண்டு நாள் நடத்தலாம்னு முடிவு பண்ணினோம். அதே மாதிரி சென்னையில உள்ள ஹோட்டல்ல சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினோம். நான், குஷ்பூ, லிசி, சுஹாசினி, ராஜ்குமார், ரேவதி எனச் சிலர் இணைந்து எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வேலைகளைப் பார்ப்போம். ரொம்பவே பாசிட்டிவான குரூப் இது. எல்லாருமே இறங்கி வேலைப் பண்ணுவாங்க. எப்பக் கூப்பிட்டாலும் ஹெல்ப்புக்கு வந்துடுவாங்க.

பூர்ணிமா பாக்யராஜ்

''எல்லோரும் இணையும் நிகழ்ச்சியில என்ன ஸ்பெஷல் வெச்சிருப்பீங்க?''

''எல்லாருமே ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம். நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துப்போம். ஜாலியா பாட்டுப் பாடுவோம், நினைவுகளை சந்தோஷமா பகிர்ந்துப்போம். கிட்டத்தட்ட, ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இருப்போம். இந்த வருஷம் 30 பேர் வந்திருந்தாங்க. க்விஸ் போட்டி வைப்போம். அதற்கு பரிசுக் கொடுப்போம்.  இப்படி பல தீம்கள்ல போட்டிகள் ரொம்ப ஜாலியா நடக்கும். இந்த முறை பாடகர் ஶ்ரீராமைப் பாடச் சொன்னோம். அது ஸ்பெஷலா இருந்தது. ரீயூனியனுக்கு வந்துட்டாலே எல்லாரும் கலகலனு ஆகிடுவாங்க. நிகழ்ச்சிகள் முடிந்து கிளம்பும்போது மனசுக் கஷ்டமா இருக்கும். அடுத்த வருஷம் எப்போ மீட் பண்ணப் போறோம்ங்கிறதைப் பத்தியும் பேசிடுவோம்.'' 

'' உங்க ஃபங்ஷன் மாதிரியே போட்டோவும் அழகா இருக்கே'' 

''ஒவ்வொரு வருஷமும் ஒரு போட்டோகிராபரை அழைப்போம். இதுவரைக்கும் நான்கு போட்டோகிராபர்கள் படம் எடுத்துக் கொடுத்திருக்காங்க''. 

''என்ன திடீர்னு இந்தி நடிகர்களும் கலந்திருக்காங்க..?''

''அப்படியில்ல. கடந்த மூன்று வருஷமாக இந்தி நடிகர்கள் சிலர் எங்களோடு ஜாயின் பண்ணிக்கிட்டாங்க. நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களை மட்டும்தான் கூப்பிடுவீங்களா... எங்களைக் கூப்பிட மாட்டீங்களானு கேட்டாங்க. அதற்கென்ன தாராளமாகக் கலந்துக்கோங்கனு அழைப்புவிடுத்தோம்.'' 

''எப்படி உருவாச்சு இந்த 80களின் ரீயூனியன் சந்திப்பு?''

''2009ம் வருஷம் இந்த நிகழ்ச்சியை ஆரம்பிச்சோம். ஒரு முறை மோகன், லிசி, நான் எல்லாம் ஒரு ஃபங்ஷனில் சந்திச்சுப் பேசிட்டு இருந்தோம். இந்த மாதிரி எப்பவாவது ஒரு நிகழ்ச்சியில சந்திச்சுக்கிட்டாத்தான் உண்டு. அப்பவும், ஹாய், ஹலோ சொல்லிட்டு கிளம்பிடுறோம். சரியாப் பேசிக்கக்கூட முடியல. எப்பவும் பிஸியாகவே இருக்கோம். ஒருத்தரையொருத்தர் சந்திக்க முடியாம இருக்கே... பேசாம ஒரு கெட் டு கெதர் வெச்சா என்னனு பேசினோம். அப்படி பிறந்ததுதான் இந்த ஐடியா. முதல் வருஷம் சந்திச்சோம். அந்தச் சந்திப்பு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. வீட்டில் பிள்ளைகள்தான் 'நாங்க பார்ட்டிக்குப் போனா மட்டும் திட்டுறீங்க.. நீங்க மட்டும் பார்ட்டி கொண்டாடுறீங்க'னு செல்லமா கோவிச்சுக்கிறாங்க.' எனச் சிரிக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்