Published:Updated:

“வீர் வீட்டுப்படி, நமி வீட்டுப்படி, வைரத்துல ஒண்ணுனு மொத்தம் மூணு தாலி” - 'இசையருவி' நிஷா #VikatanExclusive

“வீர் வீட்டுப்படி, நமி வீட்டுப்படி, வைரத்துல ஒண்ணுனு மொத்தம் மூணு தாலி” - 'இசையருவி' நிஷா #VikatanExclusive
“வீர் வீட்டுப்படி, நமி வீட்டுப்படி, வைரத்துல ஒண்ணுனு மொத்தம் மூணு தாலி” - 'இசையருவி' நிஷா #VikatanExclusive

‘இசையருவி' தொலைக்காட்சிமூலம் அனைவரின் வீட்டு வரவேற்பறையில் புன்னகைத்த தொகுப்பாளினி, நிஷா. அவரும் அதே டி.வியில் மற்றொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய முரளியும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். ஃபோரஸ் (Forus) என்கிற பொட்டீக்கை சாலிகிராமத்தில் நடத்திவருகிறார் நிஷா. நண்பர்மூலம் நமீதாவுடன் ஏற்பட்ட நட்பினை இறுகப் பற்றிக்கொண்டவர், நமீதாவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவராக இருக்கிறார். நமீதாவின் திருமண அறிவிப்பு முதல், மணமேடை வரை பிஸியாக இருந்தவர் நிஷா. நமீதாவின் திருமணம் குறித்துப் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்கிறார். 

படங்கள் - 5th Angle studio

“நமீதாவும் நானும் ரெண்டு வருஷமா நெருங்கிய நண்பர்கள். நமீதாவைப் பார்க்கிறவங்க எல்லோரும் அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட், அதிகமா கோபப்படுவாங்கனு நினைப்பாங்க. அது தப்பு. அவங்க ரொம்ப ஸ்வீட் பர்சன். எந்த வேலையைச் செஞ்சாலும் பர்ஃபெக்டா செய்ய நினைப்பாங்க. எனக்கு ஒரு கஷ்டம்னாலும் சரி, அவங்களுக்கு ஒரு கஷ்டம்னாலும் சரி, ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருப்போம். என்னோடு பேசும்போது ஒரு வீஜேவா நினைக்க மாட்டாங்க. அவங்களைப் பொறுத்தவரை, நான் பெஸ்ட் ஃப்ரண்ட் நிஷா. அவங்களும் நடிகை என்பதை மறந்து, தோழி நமீதாவாக நடந்துப்பாங்க. அந்தக் குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். 

வீர் அவங்ககிட்ட புரொப்போஸ் பண்ணதும், எங்ககிட்டதான் சொன்னாங்க. அவங்களுக்கும் அவரைப் பிடிச்சிருக்க, ஓகே சொல்லிட்டாங்க. ரெண்டு பேரும் ஒரு வருஷம் லவ் பண்ணாங்க. அவங்களுக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லே. டிசம்பருக்கு மேல கல்யாணம் செய்துக்கலாம்னு பிளானிங். திடீர்னு நவம்பரிலயே வெச்சுக்கலாம்னு ரெண்டு பேர் வீட்டிலும் முடிவு பண்ணிட்டாங்க. கல்யாணம் முடிவானதும் நிறைய வேலைகள் இருந்துச்சு. அப்போதான் திடீர்னு ஒரு நாள், 'இன்னைக்கே எல்லார்கிட்டயும் திருமணத் தேதியைச் சொல்லிடலாம்'னு காணொளிக் காட்சிமூலமா தேதியை அறிவிச்சோம்.

படங்கள் - 5th Angle studio

நமீதாவின் திருமணத்துக்கு நான்தான் டிசைனிங் பண்ணிக்கொடுத்தேன். நமீதாவுக்கு கிருஷ்ணர்னா உயிர். அவங்களுக்காக முகூர்த்த புடைவையில் கண்ணன் - ராதா டிசைன் பண்ணினேன். அவங்க நிறைய ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுவாங்க. அதனால், கல்யாணத்துக்கும் நிறைய பொருள்களை ஆன்லைனில் வாங்கினாங்க. வீர் தெலுங்கு, நமீ குஜராத்தி... அதனால், ரெண்டு வீட்டுக்கும் நாங்கதான் டிரான்சிலேட்டர் வேலையைப் பார்த்துட்டிருந்தோம். எங்க ஃப்ரண்ட்ஸ் டீம்ல ஜீவன்னு ஒருத்தர் இருக்கார். மியூசிக் டைரக்டர். நாங்க எல்லோரும் பிளான் பண்ணி, 'நமீவீர்' கல்யாணத்தை மையமாவெச்சு ஒரு ஆல்பம் சாங் ரெடி பண்ணலாம்னு பிளான் பண்ணிருக்கோம். ஜீவனும் அவர் நண்பர் நிஷாமும் இந்த ஆல்பத்தை ரெடி பண்றாங்க. 'நமீவீர் கல்யாணம்... நமீவீர் விவாஹம்னு' ஆரம்பிக்கும். டிசம்பரில் ஷூட்டிங் பிளான் பண்ணிருக்கோம். அதுக்கும் நான்தான் டிசைனிங். ஸோ, அந்த வேலையை இப்பவே ஆரம்பிச்சுட்டேன். 

படங்கள் - 5th Angle studio

நமீயைப் பொறுத்தவரை, கல்யாணத்தை ரொம்ப சிம்பிளா நடத்த பிளான் பண்ணியிருந்தாங்க. வீர் வீட்டில் என்ன சடங்கு சொன்னாலும், நமீ சிரிச்சுட்டே பண்ணாங்க. வீர் ஃபேமிலி ஹேப்பியா இருக்கணுங்குறது மட்டும்தான் அவங்க மைண்டுல இருந்துச்சு. அதனால்தான் சென்னையில் ரிசப்ஷன்கூட வைக்கலை. பத்து, பதினைந்து இன்விடேஷனை செலக்ட் பண்ணி காண்பிச்சோம். அதில், கிளாசிக்கா வித்தியாசமா இருந்ததை நமீ செலக்ட் பண்ணாங்க. ஜீவல்ஸ் எல்லாமே ஆன்லைனில் வாங்கினோம். வீர் வீட்டு முறைப்படி ஒரு தாலி, நமீ வீட்டு முறைப்படி ஒரு தாலி, டைமண்ட்ல ஒரு தாலினு மொத்தம் மூணு தாலி கட்டினாங்க. இப்போ ஆந்திரா போகும் பிளான் இருக்கிறதால், ஹனிமூன் பிளான் இப்போதைக்குப் பண்ணலை. அப்புறம்தான் அது விஷயமா பிளான் போட்டுக் கொடுக்கணும்'' என்று புன்னகைக்கிறார் நிஷா.