Published:Updated:

அழகிய இங்கிலீஷ் மகள்

அழகிய இங்கிலீஷ் மகள்

அழகிய இங்கிலீஷ் மகள்

‘வித்தவுட் மென்’, ‘ஃபுட் ஃபைட்’, ‘எ டார்க் ட்ரூத்’ போன்ற படங்களில் நடித்து அசத்திய ஈவா லோங்கரியா, இந்த வார இனிய இங்கிலீஷ் மகள்.

அம்மணிக்கு ஆச்சு 40 வயது. ஆனாலும் பார்த்தால் ஆன்ட்டி மாதிரியா தெரியுது?

குடும்பத்தின் நான்கு பெண்களில் கடைக்குட்டி என்பதால், ஆண்பிள்ளையைப் போலத்தான் வளர்ந்தார் ஈவா. சிறு வயதிலே காட்டுப்பன்னி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடக் கற்றுக்கொண்டாராம். அப்புறம் ஏன் பார்வையாலே பசங்களையும் வேட்டையாடுறீங்க அம்மணி?

படிப்பிலும் சுட்டி. பேச்சுலர் டிகிரியை முதல் வகுப்பில் பாஸ் செய்தவர், தொடர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்பையும் முடித்தார். ‘பெண்களுக்கு கல்வி முக்கியம். ஆண்கள் எதையும் சொல்லித்தர மாட்டார்கள்’ என்பார் ஈவா. ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட்!

அழகிய இங்கிலீஷ் மகள்

‘டெஸ்ப்ரேட் ஹவுஸ் ஒய்ஃப்ஸ்’ என்ற வில்லங்கமான தொலைக்காட்சித் தொடர்தான் ஈவாவைப் புகழ்பெற வைத்தது. அதில் அடிக்கடி சூடான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால், ஈவாவின் பாட்டி கோபப்பட்டாராம். கடமை உணர்ச்சி கண்ணுக்குத் தெரியலையா பாட்டி?

2005-ம் ஆண்டு உலகின் டாப் 50 அழகிகள் பட்டியலில் ஒய்யார நடை போட்டு இடம் பிடித்தார் ஈவா லோங்கரியா. அதற்கு முன்னே பல அழகிப் பட்டங்கள் வென்றிருந்தாலும் உலக லெவல் என்பது அப்போதுதான் கிடைத்தது.

‘மேக்ஸிம்’ பத்திரிகையின் டாப் 100 ஹாட் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ஈவா. ஒரு வருடம் அல்ல, தொடர்ந்து இரண்டு வருடங்கள் உலகின் நம்பர் ஒன் ஹாட் கேர்ள் ஈவாதான். அதனால்தானே டைம்பாஸில் எழுதுறோம்!

2003-ல் ‘ஸ்னிட்ச்ட்’ என்ற படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார். இருந்தாலும் ஈவாவின் சாய்ஸ் எப்போதுமே தொலைக்காட்சிதான். எங்க ஊரில் வெள்ளித்திரையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினாத்தான் சின்னத்திரைக்கு வருவாங்க!

அழகிய இங்கிலீஷ் மகள்

ஈவா ஹாட் பொண்ணுதான் என்றாலும் காமெடிதான் அவரது ஹைலைட். டிவி, சினிமா என இரண்டிலும் நகைச் சுவைக்காக மட்டுமே பத்து விருதுகள் பெற்றுள்ளார். ஃபன்னி கேர்ள்!

ஈவா மாதிரி ஒரு பொண்ணுக்கு எத்தனை பேர் க்யூவில் நி்ற்பாங்க? இதுவரை ஆறு பேருடன் காதலாகிக் கசிந்துருகியிருக்கிறார். இரண்டு பேருடன் திருமணம் செய்து வாழ்ந்துள்ளார் ஈவா. டோனி பார்க்கர் என்ற பேஸ்கட் பால் வீரருடன் 2007 முதல் 2011 வரை சேர்ந்து வாழ்ந்து பின் பிரிந்தார். இப்போதைக்கு அம்மணி சிங்கிள்தான்!

ஒல்லிக்குச்சி உடம்புக் காரியின் அங்க அளவுகள் 34-23-33 என்கிறது ஹாலிவுட் இணையதளம். படம் பார்த்து நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்!

- செந்தில்குமார்

அடுத்த கட்டுரைக்கு