Published:Updated:

``அன்புச்செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..!’’ - ஆர்.கே.சுரேஷ்

``அன்புச்செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..!’’ - ஆர்.கே.சுரேஷ்
``அன்புச்செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..!’’ - ஆர்.கே.சுரேஷ்

``அன்புச்செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..!’’ - ஆர்.கே.சுரேஷ்

தமிழில் வில்லனாக நடித்து பலரை கதிகலங்க வைத்த ஆர்.கே.சுரேஷ் தற்போது மலையாள சினிமாவிலும் கால்பதிக்கச் சென்றிருக்கிறார். நேற்று முழுவதும் இணையத்தில் இவரது ஒரு போட்டோ வைரலாகி வந்தது. 'சிக்கரி ஷாம்பு' என்ற மலையாளப் படத்துக்காக 70 வயது தாத்தாவாகவும் அதே நேரத்தில் 25 வயது இளைஞனாகவும் இருக்கும் புகைப்படம்தான் அது. அந்தப் புகைப்படத்துக்குப் பிறகு இருக்கும் ரகசியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்.கே.சுரேஷிடம் பேசினோம். 

``அன்புச்செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..!’’ - ஆர்.கே.சுரேஷ்

``என்னுடைய முதல் மலையாளப் படம் 'ஷிக்காரி ஷாம்பு'. அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம்தான் வைரலாகி வருகிறது. இந்தியன் காமிக்ஸ் கதைகளில் இடம்பெற்ற கதாபாத்திரத்தின் பெயர்தான் 'ஷிக்காரி ஷாம்பு'. ரொம்ப பிரபலமான பெயர். இயக்குநர் சுகித்துடைய படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் மலையாளத்தில் தொடர்ந்து நாலு ஹிட் படங்கள் கொடுத்து இருக்கார். இந்தப் படத்தில் முக்கியமான ரோல் ஒன்று செய்து இருக்கிறேன். அதுவும் இரட்டை வேடத்தில். 

மலையாள சினிமா எப்போதும் ஒரு நல்ல நடிகனை மட்டும்தான் அங்கீகரிக்கும். நல்ல நடிகனை மட்டும்தான் அந்த சினிமா நடிக்கக் கூப்பிடும். அந்த வகையில் என்னைக் கூப்பிட்டு இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டருக்கு முதலில் சமுத்திரக்கனி சார்தான் ஒப்பந்தமாகி இருந்தார். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் என்னைத் தேடி வந்தது. 

இதற்கு முன்னாடியே 'ஆடுபுலி ஆட்டம்' னு ஒரு மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் 'மருது' கால்ஷீட் பிரச்னையின் காரணமாக என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. மலையாள சினிமாவில் நடிப்பது எனது கனவு. அதுவும் அவர்களே கூப்பிட்டு நடிக்கச் சொல்வது எல்லாம் வரம். 

70 வயது கிழவனாக நான் மேக்கப் போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து செல்லும் போது என்னை அவர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. 25 வயது இளைஞராகவும் நடித்து இருக்கிறேன். ஒரு வித்தியாசமான கதை. இந்தப் படத்தில் நடிப்பதற்காக நான் ஹீரோவாக நடிக்க வேண்டிய படத்தின் ஷூட்டிங்கை தள்ளிவைத்துவிட்டு சென்றேன். மலையாள சினிமாவில் கமர்ஷியல் என்ற ஒன்றை இப்போதுதான் ஃபாலோ செய்கிறார்கள். இந்தப் படத்துக்காக நிறைய ரிஸ்க் எடுத்து இருக்கேன். சர்க்கஸ்க்காரனாக நடித்து இருக்கிறேன். முப்பது அடி உயரத்திலிருந்து எல்லாம் குதித்து இருக்கிறேன்'' என்றவர் தன்னை நடிகனாக அறிமுகப்படுத்திய பாலாவைப் பற்றி சொல்கிறார். 

``அன்புச்செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..!’’ - ஆர்.கே.சுரேஷ்

``இன்று நான் நடிகனாக இருப்பதற்கு பாலாதான் காரணம். நம்ம நடிப்பை மட்டும் சரியாகப் பண்ணிவிட்டால் போதும் தூக்கிவைத்து கொண்டாடுவார். 'தாரை தப்பட்டை' ஷூட்டிங் ஸ்பாட்டின் போது ஒரு சம்பவம் நடந்தது. அந்தப் படத்தில் சிகரெட் அடித்து புகையை மூக்கில் விட வேண்டும். அதுவும் பெரியதாக விடவேண்டும். மூக்கில் பத்து நொடிகளுக்கு மேல் புகையை வைத்திருந்தால் மூளையை பாதித்துவிடும். ஒரு 15, 20 டேக் போனது. டேக் முடிந்தவுடன் மயங்கி விழுந்து விட்டேன். உடனே, பாலா அண்ணன் தேங்காய் பர்பி, வெல்லமும் இடிச்சு சாப்பிட வைத்தார். ரொம்ப பாசக்கார அண்ணன். அவருடைய பாதிப்பு என்னிடம் இருக்கும்’’ என்றவரிடம், திருமணம் எப்போது என்று கேட்டால், ’’வரிசையாக படம் இருப்பதால், இப்போதைக்குத் திருமணம் செய்கின்ற எண்ணம் இல்லை. 'வேட்டை நாய்', 'வக்ரம்', 'பில்லா பாண்டி' என்று படங்களில் பிஸியாக இருக்கிறேன். இது மட்டுமில்லாமல் 'ஸ்கெட்ச்', 'காளி' படத்தில் வில்லன் கேரக்டர் செய்து கொண்டிருக்கிறேன். இதில் 'காளி' படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறேன். நடிப்புக்கே நேரம் சரியாக இருக்கு'' என்றவரிடம் 'அசோக் மரணத்தைப் பற்றிக் கேட்டோம்.

''இந்த விஷயம் பற்றி இதுவரை எந்தக் கருத்தும் நான் சொல்லவில்லை. ஏன்னா, இரண்டு பக்கமும் பார்க்க வேண்டியதாக உள்ளது. ஒன்று, அன்பு சார் இல்லாமல் சினிமா துறையில் ஃபைனான்ஸ் நடக்காது. எல்லோரும் பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள். அன்புதான் மேஜர். இதுவரைக்கும் அன்புவிடம் ஒரு பைசா நான் கடன் வாங்கியதில்லை. ஆனால், என்னைச் சுற்றி இருக்கிற எல்லோரும் பணம் வாங்கி இருக்காங்க. அதை நம்ம ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அதுவும் இரவு 12 மணிக்கு அன்பு வீட்டுக் கதவை தட்டுவார்கள். அவர் யார் வீட்டுக் கதவையும் தட்டியதில்லை. 

``அன்புச்செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..!’’ - ஆர்.கே.சுரேஷ்

படம் ரிலீஸூக்கு முன்னாடி காலையில் பதினொரு மணி வரைக்கும் பிரச்னை ஓடும். அப்போது அன்பு அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளமால் இருந்த காரணத்தினால்தான் பல படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதே நேரத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நான் நடித்ததால் எனக்குத் தெரியும். 'அசோக் குமார் சார் மாதிரி பொறுமையான, சகிப்புத்தன்மையுள்ள ஆளை நான் பார்த்ததே இல்லை. ரொம்ப அமைதியாக இருப்பார். பக்குவமாகப் பேசி நிறைய பிரச்னைகளைத் தீர்ப்பார். நான் பார்த்து இருக்கிறேன். எத்தனையோ ஃபைனான்ஸியர் போன் பண்ணுவாங்க. அதை அழகாக ஹேண்டில் பண்ணுவார். ஏன்னா, சசி அண்ணன் அதை ஹேண்டில் பண்ணவே மாட்டார். அதிகமான பிரஷரை அசோக்தான் எடுத்துக்கொள்வார். நானே சொல்வேன், ''ஏன் அண்ணன், எங்கயும் வர மாட்டிறீங்க, இதையே உலகம் என்று அழையுறீங்க’’னு கேட்பேன். அவருக்கு சசி சார் மேல் பாசம் அதிகம். அவருடைய பிரச்னைகள் எதையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார். அசோக் எப்படித் தற்கொலை செய்து கொண்டார் என்பதே எனக்கு டவுட்டாகதான் இருக்கு. ஏன்னா, அந்த நேரத்தில் நான் கேரளாவில் இருந்தேன். என்னுடைய பிரதர், சிஸ்டர் எல்லாம் அசோக் சார் அப்பார்ட்மென்ட்டில்தான் இருக்கிறார்கள். 

ரொம்ப அமைதியான மனுஷன், பிரச்னையை ஹேண்டில் பண்ணக் கூடியவர். எப்படி இப்படியொரு முடிவு எடுத்தார் என்பதை நம்பவே முடியவில்லை. அசோக், அன்புச் செழியனிடம்  மட்டும் பணம் வாங்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று பேரிடம் வாங்கி இருந்தார். 'தாரை தப்பட்டை' படத்தின் ஃபைனான்ஸை ஹேண்டில் பண்ணியவர்களால் 'கொடிவீரன்' போன்ற பிசினஸ் ஆன படத்தை ஹேண்டில் செய்ய முடியவில்லையா? 'கொடி வீரன்' எதிர்பார்ப்பு இருக்கின்ற படம். முத்தையா ஒரு நல்ல டைரக்டர், சசிகுமார் ஒரு 8- 9 கோடி சம்பளம் வாங்கக் கூடிய நடிகர். அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு ஏன் தள்ளப்படணும். அதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யமே. 

ஏன்னா, அன்பு சார் இல்லைன்னா, 60 பேர் படம் எடுக்கக்கூடிய சூழலில் கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர்தான் படம் எடுப்பாங்க. அன்புச்செழியன் இல்லை என்றால் பெரும்பாலானோர் சினிமாவில் படம் எடுக்க முடியாது. 

ஹீரோவுக்கு வேணும்னா, சொத்தை வித்து சம்பளம் கொடுப்பாங்க. மத்த டெக்னீஷியனுக்குக் கடன் வாங்கித்தானே சம்பளம் கொடுக்கணும். பணம் வைத்துக்கொண்டு படம் எடுக்கக்கூடிய தயாரிப்பாளர் 25 சதவிகிதம்தான். யாரிடமும் கடன் வாங்கி படம் எடுக்கக் கூடாது என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறேன். ஒரு தயாரிப்பாளர் எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை தெரிய வைக்கதான் அசோக் இறந்தாரா என்பது தெரியவில்லை. நாங்க எல்லோரும் ஒரே ஊர்க்காரங்க. அசோக், சசி இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம். அசோக் சார் குடும்பத்தைப் பார்க்கக்கூடிய தைரியம் எனக்கு இல்லை'' என்று சொல்லி முடித்தார் ஆர்.கே.சுரேஷ். 

அடுத்த கட்டுரைக்கு