மலையாள இயக்குநரின் கோபம், விஷால் படத்தில் தனுஷ், அனுஷ்காவின் நியூ லுக் - கோலிவுட் #QuickSeven | Seven Latest buzz in kollywood

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (02/12/2017)

கடைசி தொடர்பு:16:52 (02/12/2017)

மலையாள இயக்குநரின் கோபம், விஷால் படத்தில் தனுஷ், அனுஷ்காவின் நியூ லுக் - கோலிவுட் #QuickSeven

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில், விஜயுடன் நயன்தாரா ஜோடி சேருகிறார் என்று பேசப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் ஏற்கெனவே 'கத்தி', 'துப்பாக்கி' படங்களில் இணைத்து பணிபுரிந்தனர். தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார்கள். மேலும் நயன்தாரா - விஜய் சேர்ந்து 'வில்லு', 'சிவகாசி' ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தவிர, இந்தப் படத்தில் அனு இமானுவேல் இரண்டாவது கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார். இது விஜயின் 62-வது படம். #Vijay62

Nayantara

பிரபல குணச்சித்திர நடிகரான தியாகுவின் மகன் சாரங்கன் இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பிறகு 'எனை நோக்கிப் பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வருகிறார். "இப்படங்களின் வேலை முடிந்தவுடன் தனியாக டைரக்ஷன் செய்யும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டும் என்பது எனது தீரா ஆசை" என்று குறிப்பிட்டுள்ளார். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார்.

வம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடந்த 48-வது சர்வதேச கேரளா திரைப்பட விழாவில் 'செக்ஸி துர்கா' என்ற திரைப்படம் கடைசி நிமிடத்தில் திரையிடப்படவில்லை. படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழு 'செக்ஸி துர்கா' படைத்தைத் தேர்வு செய்தும், இறுதிப் பட்டியலில் இருந்து இப்படத்தை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நீக்கியது. இதுகுறித்து கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இயக்குநர் சனல்குமார் சசிதரன் நேற்று முகநூல் பக்கத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். "நான் இன்னொருவகையில் சந்தோஷமாக இருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தில் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று கேட்ட பலருக்கு இச்சம்பவம் பதிலாக இருக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காததை அழிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது படத்துக்கு எதிராக அமைச்சகம் நடத்திய விளையாட்டினால் ஏமாற்றமும், மனஅழுத்தமும் அடைந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். #Sexydurga

சசிதரன்

றிமுக இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் 'குலேபகாவலி' திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'அறம்' படத்துக்குப் பிறகு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். 'வடகறி' படத்தில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான 'விவேக் - மெர்வின்' ஜோடி இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளது. இதன் இசை உரிமத்தினை 'திங்க் மியூசிக்' நிறுவனம் வாங்கியுள்ளது. #Gulebagavali

Gulebagavali

'பாகுபாலி'க்குச் சவால் விடும் 'பாக்மதி' படத்தில் பிஸியாக நடித்துவரும் அனுஷ்காவின் தற்போதைய லுக் இதுதான். தனது முகநூல் பக்கத்தில் இதனை வெளியிட்ட அவர், "வியர்வை, உறுதி மற்றும் கடின உழைப்பு இல்லாமல் எந்தவொரு கனவையும் அடைய முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார். 'பாக்மதி'யில் முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் அனுஷ்காவின் இந்த நியூ லுக் எந்தப் படத்துக்கானதாக இருக்கும் என்று ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Anushka

'அவெஞ்சர்ஸ்' படத்தின் மூன்றாவது பாகமான 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. 'கேப்டன் அமெரிக்கா', 'ஸ்பைடர்மேன்', 'தோர்', 'அயர்ன் மேன்' என சூப்பர் ஹீரோக்கள் பட்டாளமே இந்த 'அவெஞ்சர்ஸ்-3'யில் இணைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்சிஸ்' படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் இப்படத்தில் இணைந்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம். பிரபஞ்சத்தை ஆளும் சக்தி படைத்த 'இன்ஃபினிட்டி ஸ்டோன்' எனப்படும் மந்திரக்கல்லை அடைய வில்லனுக்கும், ஹீரோக்களுக்கும் இடையே ஏற்படும் யுத்தம்தான் இந்தப் படத்தின் கதை. இந்த டிரெய்லர் இதுவரை 56 மில்லியன் பார்வையார்களைக் கடந்து, யூ-டியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. #AvengersInfinityWarTrailer

அவெஞ்சர்ஸ்

2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரும் நடிக்கின்றனர். மேலும், ராஜ்கிரண், சூரி ஆகியோரும் உள்ளனர். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், இப்படத்திற்காக தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். நவம்பர் 30-ந் தேதியன்று இப்பாடலின் ஒலிப்பதிவு நடைபெற்றது. 


டிரெண்டிங் @ விகடன்