Published:Updated:

சத்தமில்லாத வெற்றி!

Vikatan Correspondent
சத்தமில்லாத வெற்றி!
சத்தமில்லாத வெற்றி!
சத்தமில்லாத வெற்றி!

புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாவதும், ஒரு  வாரம் கழித்து, அதில் பாதிக்கும் மேற்பட்ட  திரையரங்குளில் இருந்து படத்தை  எடுத்துவிடுவதும் ஒன்றும் புதிதல்ல.

இதில் மாற்றத்தினை உண்டாக்கி இருக்கிறது 'பீட்சா'. புதுமுக இயக்குனர் கார்த்திக்  சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்று இருக்கிறது.

படத்திற்கு தேவையான பயமுறுத்தும் இசை, துல்லியமான கேமரா கோணங்கள்,  பார்ப்பவர்களை மிரட்டும் திரைக்கதை என அனைத்தும் சரியான விதத்தில் கலந்து  மக்களுக்கு பீட்சாவை பரிமாறி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

படம் வெளியான போது 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டார்கள். தற்போது  அந்த எண்ணிக்கை 180 திரையரங்குகளாக  அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி,  மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் குறைவான இருக்கைகள் கொண்ட தியேட்டர்களில்  இருந்து அதிக இருக்கைகள் கொண்ட தியேட்டர்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் முக்கிய சினிமா காம்ப்ளெக்ஸான சத்யம் திரையரங்கில் 6 Degreesல்  இருந்து சாந்தம் திரையரங்கிற்கு மாற்றி இருக்கிறார்கள். தேவி சினிமா காம்ப்ளெக்ஸில்  தேவி கலா அரங்கிலிருந்து தேவி பாரடைஸிற்கு மாற்றி இருக்கிறார்கள்.

பிரம்மாண்ட விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் சத்தமில்லாமல் வந்த 'பீட்சா'  வெற்றிப்படமாக உருவாகியிருப்பது தமிழ் திரையுலகிற்கு புதிது தான்.

'பீட்சா' படத்தினைத் தயாரித்த குமார் தற்போது நலன் என்கிற புதிய இயக்குனரை  வைத்து அடுத்த தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்.  அவரும் கார்த்திக் சுப்புராஜ்  போன்று சின்னத்திரை 'நாளைய இயக்குனர்' போட்டியில் வெற்றி பெற்றவர் தான்.