Published:Updated:

வைரலாகும் அஜித்தின் நியூ லுக்... சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படம்... கெளதம் மேனனின் ஹீரோ..! #QuickSeven

வைரலாகும் அஜித்தின் நியூ லுக்... சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படம்... கெளதம் மேனனின் ஹீரோ..! #QuickSeven
வைரலாகும் அஜித்தின் நியூ லுக்... சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படம்... கெளதம் மேனனின் ஹீரோ..! #QuickSeven

றிமுக இயக்குநர் எஸ்.பி மோகனின் பஞ்சு மிட்டாய் படத்துக்கு 'ஜே.பி.சாணக்யா', 'எழில் வரதன்', 'கோபாலகிருஷ்ணன்', 'எஸ்.செந்தில்குமார்' என நான்கு எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து திரைக்கதை அமைத்துள்ளனர். எஸ். பி.மோகன் ஏற்கெனவே இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். மேலும், இப்படத்துக்கு 'சரவணன்', 'ராஜேந்திரன்' ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கின்றனர். இதுபற்றி எஸ்.பி.மோகன் கூறியதாவது, "இப்படம் திருமணமான தம்பதியர்களுக்குள் முதல் மாதம் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு சிறுகதைகளை இணைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் புவனகிரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம்" என்று அவர் கூறினார். இதில் மா.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளார். 

2013-ஆம் ஆண்டு பல இன்னல்களைத் தாண்டி தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. வரும் ஜனவரி 26ந் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் நிலையில் உள்ளது. இந்தப் படத்தில் பூஜாகுமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்து விட்டது. மேலும், இரவு பகலாக ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தவிர, கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வரும் சூழலில், கட்சி எப்போது தொடங்கப்படும் என்று எந்த ஒரு அறிவிப்பையும் தற்போதுவரை வெளியிடவில்லை. அநேகமாக, விஸ்வரூபம்-2 படம் வெளியானதும் அரசியலில் செயல்படுவார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. 

ன்னை அறிந்தால் படத்தின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நடிகர் அருண் விஜயை வைத்து அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் கௌதம் மேனன். இதன் படப்பிடிப்புக்காக அருண்விஜயிடம் தொடர்ந்து ஆறுமாதம் கால்-ஷீட் கேட்டிருக்கிறார் கெளதம் மேனன். தற்போது எனை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் பிஸியாக இயங்கிவரும் கெளதம் மேனன் இப்படத்தை தொடங்குவதற்கான  எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வீரம், வேதாளம், விவேகம் தற்போது விசுவாசம் எனத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார் நடிகர் அஜித். இப்படத்துக்காக அஜித் தனது கெட்டப்பை இளமையான தோற்றத்துக்கு மாற்றிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் தொடர்ந்து நடித்து வருவதால் ரசிகர்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இனி சிவா படத்தில் நடிக்க வேண்டாம் என்றும்' ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக இப்படத்தில்,'அஜித் இஸ் பேக்' என்றவாறு புதுப்பொலிவுடன் களமிறங்கப் போகிறார். அதற்குச் சான்றாக இணையத்தில் ஒரு போட்டோவும் வைரலாகி வருகிறது. 

'சோலோ' படத்துக்கு அடுத்தபடியாக தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் விஜய் மில்டனின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த 'தேசிங் பெரியசாமி' இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் 'பாத்ஷா' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான 'ரிது வர்மா' துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் கெளதம் மேனனின் துருவநட்சத்திரம் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் துல்கர் மற்றும் ரிது வர்மா இருவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சமமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

ல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் நடிக்கும் 'ஒக்க ஷணம்' எனும் தெலுங்குப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய படம் 28ம் தேதியில் திரைக்கு வருகிறது. இதில் ஹீரோயினாக  'இவன் வேறமாதிரி' படத்தில் நடித்த சுரபி  நடித்துள்ளார். இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் வி. ஆனந்த் கூறுகையில், "இது ஒரு ரொமான்டிக் திரில்லர் மூவி. கட்டாயம் அல்லு சிரிஷின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும்"என்றார்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற சன்னிலியோன் தற்போது தமிழ்ப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்துக்காக இவர் 150 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கவிருக்கும் இந்தப் படத்தில் பாகுபலி, 2.0 போன்ற படங்களில் பணிபுரிந்த தொழில்நுட்பக்காரர்களை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். தென்னிந்திய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்திலிருந்து, "தான் இனி கிளாமர் ரூட்டில் பயணிப்பதில்லை" என முடிவெடுத்துள்ளார்.

இதுபற்றி சன்னி லியோன் கூறியதாவது, "இந்த படத்துக்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி சி வடிவுடையான் இந்தக் கதையை எனக்குச் சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்காகத் தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவில் எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்" என்று கூறினார்.