Published:Updated:

“சினிமா ஹீரோயின்... ஹோம் மேக்கர்... எது ஈஸி சொல்லுங்க..!?” - நடிகை ஷிவதா நாயர்

“சினிமா ஹீரோயின்... ஹோம் மேக்கர்... எது ஈஸி சொல்லுங்க..!?” - நடிகை ஷிவதா நாயர்
“சினிமா ஹீரோயின்... ஹோம் மேக்கர்... எது ஈஸி சொல்லுங்க..!?” - நடிகை ஷிவதா நாயர்

“ஆங்கரா இருந்து நடிகையானேன். இது மனசுக்கு நிறைவைக் கொடுக்குது. என் காதல் கணவரின் பாசத்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் நெடுஞ்சாலை படத்தின் நாயகி ஷிவதா நாயர். 

"ஆக்டிங் வாய்ப்பு எப்படி வந்துச்சு?" 

"திருச்சியில் பிறந்து, அஞ்சாவது வரை சென்னையில் படிச்சு, கேரளாவுல செட்டில்ட் ஆனேன். கேரளாவில் காலேஜ்ல பி.டெக் படிச்சுட்டிருந்த சமயத்தில் ஆங்கரா வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய பிரபலங்களைப் பேட்டி எடுத்தேன். பி.டெக் முடிச்ச சமயம் சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ‘கேரளா கஃபே’, ‘லிவிங் டுகெதர்’ மலையாளப் படங்கள் பெரிய ரீச் கொடுத்துச்சு. தமிழ்ல 'நெடுஞ்சாலை' படத்தில் நடிச்சேன். இந்தப் படத்துக்குப் பிறகுதான் ஆக்டிங் மேலே முழு ஈடுபாடு வந்துச்சு. ரொம்பவே டெடிகேட்டடா நடிக்க ஆரம்பிச்சேன்." 

"பரபரனு வளர்ந்துட்டிருந்தபோது திடீர்னு கல்யாணம் பண்ணிகிட்டீங்களே..." 

"நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ். வேற வேற கிளாஸ். காலேஜ்ல நிறையப் பசங்க புரப்போஸ் பண்றதுக்காக என் பின்னாடியே சுத்துவாங்க. அவங்களைக் கண்டபடி திட்டி அனுப்புவேன். அப்படித்தான் முரளி கிருஷ்ணாவும் என் பின்னாடி சுத்தினார். பலமுறை திட்டியும் அசரலை. அடிக்கடி எங்களுக்குள் சண்டை நடக்கும். அப்படியும் 'வாலன்டைன்ஸ் டே' அன்னிக்கு கார்டு கொடுத்து புரொப்போஸ் பண்ணினார். செம கடுப்பாகி கார்டை தூக்கி வீசினேன். 'என் பேரன்ட்ஸ்கிட்ட போய் என்னைக் காதலிக்க சம்மதம் வாங்கிட்டு வாங்க'னு சொன்னேன். பயந்துபோய் பின்வாங்கிடுவார்னு நினைச்சேன். ஆனால், அடுத்த நாளே என் பேரன்ட்ஸை சந்திச்சிருக்கார். 'முதல்ல நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போங்க. அப்புறமா பேசிக்கலாம்'னு சொல்லி அனுப்பியிருக்காங்க. அவரின் அந்தக் குணமும் தைரியமும் பிடிச்சுப்போச்சு. ரெண்டு பேரும் காலேஜ்ல நிறைய கல்சுரல் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த ஆரம்பிச்சோம். அந்த நட்பு காதலாச்சு. படிப்பு முடிஞ்சதுமே நான் ஹீரோயினாகிட்டேன். நல்ல விஷயத்தை ஏன் தாமதிக்கணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்." 

"காதல் கணவர் உங்க ஆக்டிங் பயணத்துக்கு எந்த அளவுக்கு பக்கபலமா இருக்கார்?" 

"எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்யறார். ரெண்டு படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கார். அவருக்கும் சினிமா ரொம்ப பிடிக்கும் என்பதால், என் ஆக்டிங் பயணத்துக்கு பெரிய சப்போர்ட். என் படங்களைப் பார்த்து சரியான ஃபீட்பேக் கொடுப்பார். என் வளர்ச்சியில் அக்கறையுள்ள முதல் ஆள். 'உன் திறமைக்கு இன்னும் பெரிய நடிகையா வந்திருக்கணும்'னு சொல்வார். 'நாம என்ன பண்ணமுடியும். என் பெஸ்ட் நடிப்பைக் கொடுக்கிறேன். மத்ததெல்லாம் நம்ம கையில இல்லை'னு சொல்லுவேன். 'நீ வேணா பாரு, சீக்கிரமே டாப் மோஸ்ட் ஹீரோயினா வருவேன்'னு சொல்லிட்டே இருப்பார். 'எது நடந்தாலும், எவ்வளவு புகழ் கிடைச்சாலும், உங்க மனைவி என்பது என் மெயின் அடையாளம்'னு சொல்வேன். நான் எப்போ, எது கேட்டாலும் ஆசையை நிறைவேத்திடுவாரு. வெரி ஸ்வீட் ஹஸ்பன்ட்." 

"பல பிரபலங்களைப் பேட்டி எடுத்த நீங்களே இப்போ பிரபல நடிகை. எப்படி ஃபீல் பண்றீங்க?" 

"ஸ்கிரீன்லதான் நான் நடிகை. நிஜ வாழ்க்கையில் அந்தச் சாயலே தெரியாது. வீட்டு வேலைகள் எல்லாம் செய்வேன். நல்லா சமைப்பேன். காய்கறி வாங்க நானே மார்கெட் போவேன். வழியில் பலரும் பார்த்துப் பேசுவாங்க. போட்டோஸ் எடுத்துப்பாங்க. எப்பவும் எதார்த்தமான பெண்ணா இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு." 

"நீங்க டான்ஸர். இப்பவும் டான்ஸ் பிராக்டீஸ் பண்றீங்களா?" 

"நிச்சயமா! கிளாஸிக்கல் டான்ஸரான நான், மோகினியாட்டம், குச்சுப்பிடியும் நல்லா ஆடுவேன். பரதநாட்டியத்தில் சீனியர்ஸான தனஞ்செயன் - சாந்தா இருவரிடமும் பரதம் கத்துக்கறேன். அதுக்காக அடிக்கடி சென்னைக்கு வர்றேன். பரதநாட்டியத்தில் மாஸ்டர் டிகிரி படிக்கிறேன். டான்ஸ்னா அவ்ளோ பிடிக்கும்" எனப் புன்னகைக்கிறார் ஷிவதா நாயர்.

அடுத்த கட்டுரைக்கு