Published:Updated:

'புகைப்பிடிக்கிற ஷாட் அப்போ அம்மா, அப்பா கூட இருந்தாங்க!" - ’அருவி’ சுவாரஸ்யம் சொல்லும் அதிதி பாலன் #Aruvi

'புகைப்பிடிக்கிற ஷாட் அப்போ அம்மா, அப்பா கூட இருந்தாங்க!" - ’அருவி’ சுவாரஸ்யம் சொல்லும் அதிதி பாலன் #Aruvi
'புகைப்பிடிக்கிற ஷாட் அப்போ அம்மா, அப்பா கூட இருந்தாங்க!" - ’அருவி’ சுவாரஸ்யம் சொல்லும் அதிதி பாலன் #Aruvi

'ருவி' பட ட்ரைலர் 'இது ஏதோ புதுசு' என்று மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முகம் காட்டும் ஹீரோயின் அதிதி பாலன், ஆஸம்! 

''படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு, கிட்டத்தட்ட எட்டு மாதங்களா ஆள் தேடினாங்க. 500 பேர் வரை ஆடிஷன் நடத்தினாங்க. அதில் இறுதியா நான் செலக்ட் ஆனேன் என்பதை, இங்கே பெருமையுடன் பதிவு பண்ணிக்கிறேன்'' - ஒரு சிப் மாதுளை ஜூஸ் பருகிக்கொண்டே சொல்கிறார் அதிதி பாலன். ஒட்டுமொத்தப் படமும் அதிதியை அச்சாகக்கொண்டு சுழலும் ஹீரோயின் கேரக்டர் இது என்பதால், பெண்ணிடம் உற்சாகம் அன்லிமிட்டட்! 

''வழக்கறிஞரான நீங்க, கேமரா முன்னாடி வந்தது எப்படி?" 

''சென்னைப் பெண் நான். பெங்களூரில் சட்டம் படிச்சேன். ஆனாலும், சின்ன வயசிலிருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம். அதனால படிப்பை முடிச்சதும் கறுப்புக் கோட் மாட்டாம, தியேட்டர் பிளேயில் சேர்ந்தேன். நிறைய நாடகங்களில் நடிச்சேன். என் நடிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர்தான், 'அருவி' பட ஆடிஷன் பற்றி சொல்லி கலந்துக்கச் சொன்னார். சரி, முயற்சி பண்ணிப் பார்க்கலாமேனு போனேன். முதல் படத்திலேயே இவ்வளவு அழுத்தமான கேரக்டர் அமைஞ்சிருக்கு. சந்தோஷம்ங்கிறது சின்ன வார்த்தையா தெரியுது!" 

''புகைப்பிடிக்கிற காட்சியில் நடிச்சிருக்கீங்களாமே?" 

''ஸ்கிரிப்ட் படிச்சப்பவே இப்படிக் காட்சிகள் இருக்கும்னு தெரியும். ஸ்கிரிப்டை அப்பாகிட்ட கொடுத்தேன். படிச்சிட்டு, 'படத்துக்கு என்ன தேவையோ செய்'னு சொன்னாங்க. அந்த சீன்ல நான் நடிக்கும்போது என் அப்பாவும், அம்மாவும் ஷூட்டிங் ஸ்பாட்லதான் இருந்தாங்க.'' 

''டீசரைப் பார்க்கும்போது, உங்களுக்கு முதல் படம் மாதிரி தெரியலையே..?" 

''எந்த விஷயமா இருந்தாலும் அதை முழுசா கத்துகிட்டுதான் அதில் இறங்குவேன். 'அருவி' படத்தில் நடிக்கிறதுக்காக ரெண்டு மாசம் கதையில் வர்ற மக்களோட மக்களா வாழ்ந்து, அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிச்சேன். இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாமேனு வருத்தப்படாத அளவுக்கு, திருப்தியா உணர்றேன்.''  

''இதுவரை கிடைச்சிருக்கிற பாராட்டுகள்?"

''படத்தோட ஃப்ரிவ்யூ ஷோ பார்த்துட்டு இயக்குநர் ராஜூமுருகன் சார் போன் பண்ணி பாராட்டினார். இந்த மாதம் படம் ரிலீஸ். மக்களோட மார்க்குக்காக வெயிட்டிங்." 

''வேறு எதிலெல்லாம் ஆர்வம்..? 

''சின்ன வயசுல பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். காலேஜ் படிக்கிறதுக்காக வெளியூருக்குப் போனதால பரதத்துக்கு பிரேக் விடவேண்டியதாயிடுச்சு. இப்போ மறுபடியும் டான்ஸ் கிளாஸ் போயிட்டு இருக்கேன். அப்பா கர்நாடக சங்கீதத்துல எக்ஸ்பர்ட். என்னோட மியூசிக் குரு அவர்தான். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் கர்நாடக சங்கீதம் தெரியும். ட்ராவல் பிடிக்கும். ட்ரெக்கிங் ரொம்பப் பிடிக்கும். ஒருநாள் கிடைச்சாலும் ஃப்ரெண்ட்ஸ்கூட ட்ரிப் கிளம்பிடுவேன். ரீசன்ட்டா போனது, இமாச்சல் பிரதேஷ்!" 

''ஹோம்லியா இருக்கீங்க... காஸ்ட்யூம் செலக்‌ஷன்ஸ் எல்லாம் எப்படி இருக்கும்?" 

''புடைவைதான் என் ஃபேவரைட் உடை. பரதநாட்டிய டான்ஸர் என்பதால், அடிக்கடி புடைவை கட்டுவேன். அதில்தான் சௌகர்யமா ஃபீல் பண்றேன்.'' 

''அதிதியின் ப்ளஸ், மைனஸ்..?" 

''ரொம்ப நேர்மையா இருப்பேன். அதோட செயின் ரியாக்‌ஷனா, கொஞ்சம் கோபப்படுவேன். ஏதாவது தப்புணு தோணுச்சுனா முகத்துக்கு நேரா சொல்லிடுவேன். இதெல்லாம் சமயங்களில் ப்ளஸாக இருக்கு, சமயங்களில் மைனஸாக இருக்கு.'' 

''உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின்?''

''பார்வதி! 'பூ', 'மரியான்'னு ரொம்ப செலக்ட்டான படங்களில் நடிச்சாலும் மனசுல பதிஞ்சுபோற மனுஷி அவங்க!" 

''அடுத்து என்ன?" 

''மேற்படிப்புப் படிக்கணும். சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கணும்!"