Published:Updated:

ரஜினி, கமல், விஜய், அஜித்... எல்லா பர்னிச்சரையும் உடைத்த வெங்கட் பிரபுவின் `கோவா'! - #10YearsOfGoa

கோவா

பயணத்தில் அவர்கள் சந்தித்த மனிதர்களும் உறவுகளும், அகத்தில் உள்ளது நம் விடுதலை, அதை உணர்ந்தால் சுற்றமே சொர்க்கம்தான் என்பதை உணர்த்துவதுதான் கதை. இதை நம் பிடரியில் அடித்துச் சொல்லாமல், பீர் அடித்து சொன்னதுதான் வெங்கட்பிரபுவின் டச்!

ரஜினி, கமல், விஜய், அஜித்... எல்லா பர்னிச்சரையும் உடைத்த வெங்கட் பிரபுவின் `கோவா'! - #10YearsOfGoa

பயணத்தில் அவர்கள் சந்தித்த மனிதர்களும் உறவுகளும், அகத்தில் உள்ளது நம் விடுதலை, அதை உணர்ந்தால் சுற்றமே சொர்க்கம்தான் என்பதை உணர்த்துவதுதான் கதை. இதை நம் பிடரியில் அடித்துச் சொல்லாமல், பீர் அடித்து சொன்னதுதான் வெங்கட்பிரபுவின் டச்!

Published:Updated:
கோவா

டேனி : ``உனக்கு அமீர்கான் தெரியுமா?''

விநாயகம் : ``யார் சார் அவரு?''

ராமராஜன் : ``அதான், ஆர்ம்ஸ் காட்டுவாரே மச்சான்!''

டேனி : ``சரி, உனக்கு கமல்ஹாசன் தெரியுமா?''

விநாயகம் : ``தெரியும் சார்...''

டேனி : ``அவர் 80'ஸ்ல சைடு வகிடு எடுத்து பெல்பாட்டம்லாம் போட்டுகிட்டு இருப்பார்.''

விநாயகம் : ``ஹாஹா...''

டேனி : ``ஆனா, இப்போ பார் `தசாவதாரம்'ல `10 கெட்டப்பெல்லாம் போட்டுகிட்டு ஹேண்டசமா வர்றச்சே, அவரே டைமுக்கு ஏத்தமாதிரி மாத்திகலையா?''

டோப் பார்ட்டி
டோப் பார்ட்டி

நிலவொளியில், மணல் வெளியில் நிகழும் இந்த உரையாடல்தான், மொத்தப் படமும். தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் பல புளித்துப்போன வழக்கங்களைக் க்ளீன் போல்டாக்கியவர் வெங்கட் பிரபு. அதில் அவரின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான், `கோவா.' அழகான வெள்ளைக்காரியை திருமணம் செய்து, வெளிநாட்டில் செட்டிலாக வேண்டுமென்கிற தங்களின் கனவை நிஜாம் பாக்காக்க... ஸாரி, நிஜமாக்கப்போகும் சொர்க்கம், தங்களை விடுதலை செய்யப்போகும் சுதந்திரதேசம் என கோவாவுக்கு ஆட்டுமந்தையோடு லாரியில் செல்கிறார்கள் மூன்று பண்ணைபுரத்து இளைஞர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயணத்தில் அவர்கள் சந்தித்த மனிதர்களும் உறவுகளும், அகத்தில் உள்ளது நம் விடுதலை, அதை உணர்ந்தால் சுற்றமே சொர்க்கம்தான் என்பதை உணர்த்துவதுதான் கதை. இதை நம் பிடரியில் அடித்துச் சொல்லாமல், பீர் அடித்து சொன்னதுதான் வெங்கட்பிரபுவின் டச்!

கோவா
கோவா

`` 'கோவா' ஏன் மிக முக்கியமான படம்?' எனும் கேள்விக்கு நிறைய பதில் இருக்கின்றன. அதில் ஒன்று, பல `பர்னிச்சர்களை உடைத்தது'. ஒவ்வொரு மனிதரையும் அவர் வாழ்வின் அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல், பின்னிருந்துப் பிடித்து இழுக்கும் பழைமைவாத சிந்தனைகளை ஜாலியாகச் சுட்டிக்காட்டி, நவீன சிந்தனைகளை `நார்மலைசிங்' செய்து உட்புகுத்திப் புரட்சி செய்திருப்பார் இயக்குநர் வி.பி.பிலீவா நாட்டோ, அதுதான் நிஜம்! நாட் பிலீவ் என்றால், இந்தாங்கோ லிஸ்ட்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழைமைவாத பண்ணைபுரம் :

பண்ணைபுரம் பஞ்சாயத்து
பண்ணைபுரம் பஞ்சாயத்து

சண்முகசுந்தரத்தின் வேண்டுதல் வாய்ஸ் ஓவரில் தொடங்கி, `ஏழேழு தலைமுறை' பாடலின் வழியாக, பஞ்சாயத்து காட்சி வரை, 80-களின் பாணியிலேயே படம் நகரும். இன்னும் அதீத தெய்வநம்பிக்கை, அதே ஆலமரப் பஞ்சாயத்து, பித்தளை சொம்பு, வெற்றிலைப் பெட்டி, ஊர் கட்டுப்பாடு, `இப்படியே இருந்தா என்னய்யா அர்த்தம். யாராவது ஒருத்தர் பேச ஆரம்பிங்க' என எல்லாப் பஞ்சாயத்துகளிலும் இருக்கும் ஜீவராசியென, இந்த மில்லினியல் யுகத்தில் அந்தக் கிராமம் மட்டும் 80-களிலேயே தேங்கிவிட்டது என்பதைக் காட்டியிருப்பார்கள். அந்த ஊரில், ஓரளவுக்கு வெளியுலகம் தெரிந்த நபராகப் பார்க்கப்படும் `விநாயகம்' ஜெய்க்கு அமெரிக்கா இஸ் அவர் கன்ட்ரி. ஆனால், `America'வையே `Amrica' என்றுதான் எழுதுபவர். அமிர்க்காவில் காய்கறி விற்கும் பாட்டிகள்கூட ஆங்கிலத்தில்தான் பேசும் என்பதுதான் அவரது அதிகபட்ச தெளிவு! இப்படி ஆங்கிலத்தை ஒருதலையாகக் காதலித்து வருபவன் விநாயகம். விநாயகத்தின் அப்பாவுக்கோ தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்!

சாமியாடியும் சக மனிதன்தான் :

சாமிக்கண்ணு
சாமிக்கண்ணு

`சாமிக்கண்ணு' பிரேம்ஜிக்கு மற்ற சக வயது இளைஞர்களைப் போல் வாழ வேண்டுமென்கிற ஆசை. சாமியாடியும் சக மனிதன்தானே மக்களே. ஆனால், `சாமிப்புள்ளடா நீ' என பொங்கலும் புளியோதரையும் உண்ணவிட்டு, அவரைக் கோயிலுக்கு நேர்ந்துவிட்டிருப்பர். அவரும் செய்வதறியாது தியானம் என்ற பெயரில் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருப்பார். ராமராஜனைப் பற்றி என்ன சொல்வது, நகிர்தனா தினதினா தினனா..! அவ்வளவுதான். ஊர் தலைவரின் மகன் எனும் தோரணையில், புலிப்பல் செயின் அணிந்துகொண்டு சுற்றும் பில்டப் ப்ளேபாய்.

அழகர் வெட்ஸ் ஏஞ்சலினா ஜோலி :

அழகர் வெட்ஸ் ஏஞ்சலினா ஜோலி
அழகர் வெட்ஸ் ஏஞ்சலினா ஜோலி

ஊரில் ராமராஜன்போல கலர்கலர் சட்டை, கழுத்தில் சங்கிலி, தலைவரின் மகன் எனும் கெத்தாகத் திரிபவர்களுக்கே, காதல் எல்லாம் சாத்தியம். அதுவும் அழகான பெண் காதலிப்பதென்பது அவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என நம்பிக்கொண்டிருந்த மூவருக்கும், அழகரின் கல்யாணம் ஷாக்கிங்கான காட்சி! காதல் என்பது நிறம், நிலம், இனம், மொழி எல்லாம் கடந்தது என்பதுதான் அந்தத் திருமணம் உணர்த்தும் செய்தி. ஆனால், `இவனுக்கே நடக்குது, நமக்கு நடக்காதா' என வேறேதோ புரிந்துகொண்டு சர்தார்ஜியின் லாரியில் கோவாவுக்கு கிளம்புவார்கள். அவர்களின் லாரியை, காஸ்ட்லியான கார் ஒன்று கடந்து செல்லும். அதில் வெங்கட் பிரபு உற்சாகமாகச் சென்றுகொண்டிருப்பார்.

கோலிவுட் டோட்டல் க்ளோஸ் :

மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ஜெஸிக்காவின் நண்பர்கள் பிரேம்ஜியைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் புகழ்ந்து சொல்ல, அதை ``இவன் `ஏகன்' அஜித் மாதிரி இருக்கான்டி" என டப்பிங் பட மாடுலேஷன்களில் டப்பிங் கொடுத்திருப்பர் வெங்கட் பிரபு. இந்த ஒரு வாக்கியத்திலேயே பல பர்னிச்சர்கள் டேமேஜ். ``சிரிக்காதீங்க சார், அசிங்கமா இருக்குது" என ஜெய்யும், ``நம்மளை மாதிரி பசங்களைப் பார்த்தா பிடிக்காது, பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்" என பிரேம்ஜியும் தனுஷ் பக்கம் வண்டியைத் திருப்பியிருப்பார்கள். `வேட்டைக்காரன்' படத்தின் `புலி உறுமுது' பாடல் பின்னணியில் ஒலிக்க, காப்பை ஏற்றிவிட்டு பறந்துப் பறந்து அடிப்பார் பிரேம்ஜி. இரண்டு வெளிநாட்டுப் பெண்களில் ஒருவரின் பெயர் ஏஞ்சலினா ஜோலி, இன்னொருவர் பெயர் ஜெஸ்ஸிகா ஆல்பா. உண்மையாகவே ஹாலிவுட் நடிகை ஜெஸ்ஸிகா ஆல்பாவை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக்கேட்டு, அது முடியாமல் போக, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஜெஸ்ஸிகா ஆல்பா எனப் பெயர் வைத்து பேலன்ஸ் செய்துவிட்டார்கள்.

பின்னணி இசை அலப்பறைகள் :

கிராமத்து கதாபாத்திரம்
கிராமத்து கதாபாத்திரம்

இவை எல்லாவற்றையும் விட முரட்டு சம்பவம், `தசாவதாரம்' பர்னிச்சர்தான். கமல் 10 வேடங்களில் நடித்த சாதனையை, `கோவா'வில் சமன் செய்திருப்பார்கள். பள்ளி வாத்தியார், கேசினோ தொழிலாளி, திருமண புரோகிதர், லாரி டிரைவர் சர்தார்ஜி, பைலட், வெளிநாட்டுக்காரர், கிராமத்து பெரிய மனிதர், பெண், ஜோக்கர், காவல்துறை அதிகாரி என மொத்தம் படம் முழுக்க 10 வேடங்களில் வந்திருப்பார் நடிகர் ரவிகாந்த். இவர் கூடவே, இன்னொருவரும் அதே 10 கெட்டப்களிலும் வருவதுதான் வி.பி அடித்த சம்பவம். 10 கேரக்டர்களை, 11 கேரக்டர்களாக மாற்றி புது சாதனை படைத்திருக்க முடிந்தும் அதைத் தவிர்த்ததுதான் வெங்கட் பிரபுவின் பெருந்தன்மை! அரவிந்த் ஆகாஷ் வைத்திருக்கும் சிக்ஸ்பேக்குக்கு ஒன்று முதல் ஆறு வரை நம்பர் போடுவது. மதுரைக்கு `மதுரை மரிக்கொழுந்து வாசம்', திருப்பரங்குன்றத்துக்கு `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடல், பிரேம்ஜியின் காதலுக்கு `கண்கள் இரண்டால்' மற்றும் `7ஜி ரெயின்போ காலணி' தீம் என பின்னணி இசையிலும் கூத்து பண்ணியிருப்பார்கள். அதிலும், ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் டப்பிங் செய்கிறேன் எனப் பின்னணியில் ஒலிக்கும் பாடலையும் `ஒவ்வொரு பூக்களுமே' பாடலாக மாற்றியது எல்லாம் குபீர் ரகம்!

காதல்தானே எல்லாம் :

ஜேக்
ஜேக்

`குளோரிஃபிகேஷன்' எனப்படும் மேன்மைப்படுத்துதலை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அடித்துக் காலி செய்யும் `கோவா.' காதலை மட்டும் அதையும் தாண்டிய ஒரு உணர்வாக, உறவாக காட்சிப்படுத்தியிருக்கும். ஜெஸ்ஸிகா தன்னைக் கடக்கும்போதெல்லாம், மனதுக்குள் `கண்கள் இரண்டால்' பாடல் ஓடும் `சாமிக்கண்ணு இன்ஸ்டின்க்ட்'. `அவ இங்கேதான் எங்கேயோ இருக்கான்னு தோணுதுடா' எனச் சொல்லும் நேரத்தில் பலிக்கும் சாமிக்கண்ணுவின் தெய்வவாக்கு. விநாயகம் மனதுக்குள் சொன்ன `ஐ லவ் யூ'க்கு, வெளியில் `ஐ லவ் யூ டு' சொல்லும் ரோஷினி, காதல் எனும் உணர்வை மட்டுமே ஃபேன்டஸியாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இன்னொரு பக்கம், டேனி மற்றும் ஜாக்குக்கு இடையிலுள்ள காதலும், கதையில் வரும் மற்ற எதிர்பாலின காதல்களைப் போலவே அணுகப்பட்டிருக்கும். விநாயகத்துக்கு ராமராஜனும் ரோஷினியும் பேசிச் சிரிப்பது எப்படி புகைச்சலை உண்டாக்குமோ, அதேதான் ஜாக்குக்கு டேனியும், சாமிக்கண்ணுவும் பேசிச் சிரிக்கும்போதும் உண்டாகும். `வாலிபா வா வா' பாடலில், இரவில் கேம்ப் ஃபயர்களுக்கு இடையில் அரவிந்த் ஆகாஷ் ஆடும் நடனம், வெங்கட்பிரபுவின் முதிர்ச்சிக்கு மிகப்பெரும் சான்று! ஜாக் மற்றும் டேனி தவிர, இன்னொரு ஓரினக் காதலின் ஆரம்பமும் அதில் காட்டப்பட்டிருக்கும்.

இயக்குநர்கள் கேமியோ :

வெங்கட் பிரபு கேமியோ
வெங்கட் பிரபு கேமியோ

`கோவா'வில் வெங்கட் பிரபுவின் கதாபாத்திரம் கேமியோவா அல்லது குணச்சித்திர கதாபாத்திரமா என்பதே பெருங்குழப்பம். காரணம், இந்த மூன்று இளைஞர்களின் கதைக்கும் அப்படியே நேர்மாறான வாழ்க்கையைக் கோவாவில் வாழ்ந்துகொண்டிருப்பார் அவர். இவர்கள் லாரியில் செல்கையில், வி.பி காஸ்ட்லி காரில் சென்றுகொண்டிருப்பார். இவர்கள் சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருக்க, வி.பி ஒரு வெளிநாட்டுப் பெண்ணுடன் ஷாப்பிங் செய்துகொண்டிருப்பார். பிரேம்ஜி, அடியாட்களை அடித்து துவைக்கையில், அதிர்ந்துபோய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார் வெங்கட் பிரபு. மூவரும் கமிட்டாகி ஒவ்வொரு நிலையில் இருக்க, அவர் `பூண்டு ஊறுகாய் கிடைக்குமா சார்' என சோகத்தில் சரக்கடித்துக்கொண்டிருப்பார். தவிர சிம்பு, நயன்தாரா, பிரசன்னா, `அம்மா கிரியேஷன்ஸ்' சிவா, வாசுகி பாஸ்கர் ஆகியோரும் கேமியோ கொடுத்திருப்பார்கள். இப்படியாக, ஃப்ரேமுக்கு ஃப்ரேம் மேஜிக் தொப்பிக்குள் இருந்து முயல்களையும் சிலநேரங்களில் நீர்யானை, காண்டாமிருகம் போன்றவற்றையும் எடுத்துக்காட்டி உங்களை ஆச்சர்யப்படுத்தும் இந்தக் `கோவா'. வெங்கட் பிரபுவின் ஹாலிடேவுக்கு ஹேப்பி பத்தாவது பர்த்டே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism