Published:Updated:

``உங்கள் ரசிகர்களுக்காக வருஷத்துக்கு ரெண்டு படங்களாவது பண்ணுங்க!’’ - சிம்புவுக்கு ‘ஃப்ரெண்ட்’ தனுஷின் ரெக்வஸ்ட்

``உங்கள் ரசிகர்களுக்காக வருஷத்துக்கு ரெண்டு படங்களாவது பண்ணுங்க!’’ - சிம்புவுக்கு ‘ஃப்ரெண்ட்’ தனுஷின் ரெக்வஸ்ட்
``உங்கள் ரசிகர்களுக்காக வருஷத்துக்கு ரெண்டு படங்களாவது பண்ணுங்க!’’ - சிம்புவுக்கு ‘ஃப்ரெண்ட்’ தனுஷின் ரெக்வஸ்ட்

``உங்கள் ரசிகர்களுக்காக வருஷத்துக்கு ரெண்டு படங்களாவது பண்ணுங்க!’’ - சிம்புவுக்கு ‘ஃப்ரெண்ட்’ தனுஷின் ரெக்வஸ்ட்

சந்தானம் நடிப்பில் நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சக்க போடு போடு ராஜா’. புதுமுக இயக்குநர் சேதுராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ரசிகர்கள் முன்னிலையில் தனுஷ் பாடல் சிடியை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். இந்தப் படத்தை வரும் 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விழாவில் தனுஷ் பேசுகையில், “தான் இசையமைத்த பாடல்களைக் கேட்கச்சொல்லி சிம்பு எனக்கு அனுப்பியிருந்தார். இந்த விழாவுக்கு சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே நான் வந்தேன். நான் அவரை என் விழாவுக்கு அழைத்தால் அவரும் நிச்சயம் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் உள்ளோம். மற்றவர்கள் கூறுவதுபோல் எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என நினைக்கிறேன். என் ரசிகர்கள் சிம்பு படத்தைப் பார்க்க வேண்டும். சிம்பு ரசிகர்கள் என் படத்தை பார்க்கவேண்டும். எல்லா ரசிகர்களும் எல்லாருடைய படத்தையும் பார்க்க வேண்டும். அப்போதுதான் தேய்ந்து கொண்டிருக்கும் சினிமாத்துறை புத்துணர்ச்சி பெறும்” என்றார். அப்போது சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டியபடி ஆர்ப்பரித்தனர்.

அப்போது தனுஷ், ‘‘அப்படித்தான் இருக்கவேண்டும். இன்றைக்கு இந்தச் சத்தம் சிம்புவுக்குக் கேட்கவேண்டும். உங்களுடன் இருக்கும் ரசிகர்களுக்காகவாவது ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

அதன்பிறகு பேசிய சிம்பு, “சந்தானம் தன் நண்பர்களை விட்டக்கொடுக்காமல் இத்தனை நாள் அவர்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறார். அப்படிப்பட்ட என் நண்பன் சந்தானம் கேட்டுக்கொண்டதற்காகத்தான் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். அவரது வளர்ச்சிக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.

கடந்த சில நாள்களாக என்னைப்பற்றி சில பிரச்னைகள் பேசப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் பொய் என்று நான் சொல்லமாட்டேன். என்னுடைய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த விஷயத்தில் என் மீது தவறுகள் இருந்தால் அதை படம் எடுக்கும்போதோ அல்லது எடுத்து முடித்தபின்னரோ அல்லது படம் வெளியிட்ட உடனேயாவது சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு படம் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆன பின்னர் அதைப்பற்றி யாரோ பேசுவதை வைத்து தயாரிப்பாளர் பேசியுள்ளார் என்பது வருத்தம். ஆனால், என்னிடமும் தவறுகள் அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு ஒரு வரைமுறை உள்ளது, நான் நல்லவன் என்று சொல்லவில்லை. அவர்கள் செய்தது சரியல்ல. ஆனால் நடந்த விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தனுஷ் காலத்தின் கட்டாயத்தில் சினிமாவுக்குள் தள்ளப்பட்டவர். ஆனால் அவர் சினிமாவில் தன் உழைப்பை மட்டும் நம்பி வெவ்வேறு உயரங்களைத் தொட்டு வருகிறார். ஆனால் அவர் எதையும் தன் தலைக்குக் கொண்டு செல்லாமல் அடக்கமாக இருக்கிறார். அவருடன் இந்த மேடையில் நிற்பதை அந்த ஆண்டவன் எனக்களித்த பெருமையாகக் கருதுகிறேன். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு உண்மையான அன்பு இருக்கிறது. தனுஷ் சொன்னதுபோல் அவர் பிழைப்புக்காக சினிமாவுக்கு வந்தவர். நான் சினிமாவிலேயே சினிமாவுக்காகப் பிறந்தவன். எனக்கு இதைவிட்டால் வேறு ஏதும் தெரியாது. 

இப்போது அதிகபட்சமாக என்ன செய்து விடுவீர்கள். என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள். ஆனால் என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்துகொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது. இப்போதும் நான் அவரின் படத்தில் இருக்கிறேன் என்றுதான் மணிரத்னம் சார் கூறிவருகிறார். அவருக்கு என் மீது ஏன் அவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. ஒருவேளை அவரும் உங்களைப்போல எனது ரசிகரா என்பதும் தெரியவில்லை. 20-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறியுள்ளார். பார்ப்போம்” என்றார். 

அடுத்த கட்டுரைக்கு