Published:Updated:

மீண்டும் மிரட்ட வரும் டைனோசர்கள்: 'ஜுராசிக் வேர்ல்டு - ஃபாலன் கிங்டம்' ட்ரெய்லர்!

ராகினி ஆத்ம வெண்டி மு.
மீண்டும் மிரட்ட வரும் டைனோசர்கள்: 'ஜுராசிக் வேர்ல்டு - ஃபாலன் கிங்டம்' ட்ரெய்லர்!
மீண்டும் மிரட்ட வரும் டைனோசர்கள்: 'ஜுராசிக் வேர்ல்டு - ஃபாலன் கிங்டம்' ட்ரெய்லர்!

ஜுராசிக் வேர்ல்டு திரைப்பட வரிசையில் தற்போது, ‘ஜுராசிக் வேர்ல்டு - ஃபாலன் கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மீண்டும் மிரட்ட வரும் டைனோசர்கள்: 'ஜுராசிக் வேர்ல்டு - ஃபாலன் கிங்டம்' ட்ரெய்லர்!

கிரிஸ் பிராட் மற்றும் ப்ரைஸ் டாலஸ், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். 'ஜுராசிக் பார்க்' வரிசையில் மீண்டும் உருவாகியுள்ள இப்படத்தில், வழக்கம்போல டைனோசர்களே கதாநாயகர்களாக இடம்பெற்றுள்ளனர். ’தி இம்பாசிபிள்’ திரைப்படத்தை இயக்கிய ஜே.ஏ.பயோனா தான் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்பீல்பெர்க்- ட்ரேவரோவ் உடன் பிராங்க் மார்ஷல் மற்றும் பேட் க்ரெளலி புதிய தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

மனிதர்களால் முற்றிலும் ஒதுக்கப்பட்ட இஸ்லா நுப்லார் தீவிலிருந்து படத்தின் கதை தொடங்குகிறது. வெடித்துச் சிதறும் எரிமலைகள், ஆர்ப்பரிக்கும் டைனோசர் கூட்டம் என வழக்கமான அதகளங்களுடன் படத்தின் ட்ரெய்லர் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம், வரும் 2018-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.