Published:Updated:

“10 வருஷம் கழிச்சு சென்னை 28 டீமை சேர்த்ததே சாதனைதான்..!” - விஜய் வசந்த் #OneyearofChennai28SecondInnings

“10 வருஷம் கழிச்சு சென்னை 28 டீமை சேர்த்ததே சாதனைதான்..!” - விஜய் வசந்த் #OneyearofChennai28SecondInnings
“10 வருஷம் கழிச்சு சென்னை 28 டீமை சேர்த்ததே சாதனைதான்..!” - விஜய் வசந்த் #OneyearofChennai28SecondInnings

“10 வருஷம் கழிச்சு சென்னை 28 டீமை சேர்த்ததே சாதனைதான்..!” - விஜய் வசந்த் #OneyearofChennai28SecondInnings

‘சென்னை 28' கோபியையும் அவரது பேட்டையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அன்று ஆரம்பித்த இவரது பயணம் துணை நடிகராகவும் கதாநாயகனாகவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது, சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்' படத்தில் நடித்து முடித்த கையுடன் ஃப்ரஷாக அடுத்தப் படங்களுக்கு கதைகளை கேட்டு வரும்  நடிகர் விஜய் வசந்த்திடம் பேசினோம். 

‘சென்னை 28' படத்தில் நடிக்க வாய்ப்பு எப்படி வந்தது? 

“நான் சினிமாவுக்கு போகணும்னு எல்லாம் நினைச்சதே இல்லை. ஆனா, சினிமாவோட ரசிகன் நான். நான் படிச்சு முடிச்சுட்டு எங்க கம்பெனியை பார்த்துட்டு இருந்தேன். ஒரு முறை கோயம்புத்தூர்ல நாங்களும் ரேடியோ மிர்ச்சியும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணோம். அப்போதான் சிவாவோட பழக்கம் ஏற்பட்டுச்சு. அப்படியே, அவர் மூலமா பிரேம்ஜி பழக்கமானார். அப்புறம், அப்படியே யுவன், வெங்கட் பிரபு டீம்னு எல்லாரும் நல்லா க்ளோஸ் ஆகிட்டோம். அப்புறம் கிரிக்கெட் பத்தின ஒரு ஜாலியான படம்னு என்னையும் நடிக்க வைக்க ஆடிஷன் பண்ணாங்க. அதுல பார்த்துட்டு, பரவாயில்லை பையன் தேறிடுவான்னு சொல்லி என்னை ஃப்ரேம்குள்ள கூட்டி வந்துட்டாங்க.’’

'சென்னை 28' டு 'சென்னை 28 II ' அனுபவம் எப்படி இருந்துச்சு? 

“ ‘சென்னை 28' படத்துக்கு ஆடிஷன்ல திடீர்னு கேமரா முன்னாடி நடினு சொல்லிட்டாங்க. முதல் முறைங்கிறனால ரொம்ப பயமா இருந்துச்சு. அப்புறம் அவங்களும் நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. கிரிக்கெட் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த டைம்ல கிரிக்கெட் தான் விளையாடிட்டே இருப்போம். அதனால, அதுவும் எனக்கு ஒரு ப்ளஸாகிடுச்சு. பத்து வருஷம் கழிச்சு செகன்ட் இன்னிங்ஸ் படம் பண்ணும்போது, எல்லாரும் அவ்ளோ ஹாப்பி. முதல் பார்ட்ல நடிச்சவங்களும் சரி அதை பார்த்தவங்களும் சரி படத்துல மட்டுமில்லாமல் உண்மையாகவே நிறைய பேர் குடும்பஸ்தராயிட்டோம். அதே டீமை மறுபடி கொண்டுவரமுடியுமாங்கிறதே ரொம்ப சவாலான விசயமா இருந்துச்சு. ஏன்னா, அப்போ இருந்தவங்க எல்லாரும் தனித்தனியா படம் பண்ண ஆரம்பிச்சுட்டோம். ஆனா, எப்படியோ எல்லாரும் ஒண்ணு சேர்ந்து 40 நாள்  ஷூட் நடந்ததே ஒரு சாதனை தான். ஒவ்வொரு நொடியும் என்ஜாய்மென்ட்டுக்கு பஞ்சமே இல்லை. முதல் பார்ட் பண்ணும்போது, அப்பா என்கிட்ட, 'டேய்... குடிச்சுட்டு ஆடுற மாதிரி எல்லாம் நடிக்காதடா. உனக்கு வேற நான் பொண்ணு பார்த்துட்டு இருக்கேன்'னு சொன்னார். அதை நான் வெங்கட் பிரபு அண்ணன்கிட்ட சொன்னா, 'ஓகே. அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை. பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டு 'ஜல்சா பண்ணுங்கடா'  பாட்டு முழுக்க என்னை கையில க்ளாஸை கொடுத்து ஆடவெச்சுட்டாங்க. அதெல்லாம் மறக்கவே முடியாது’’

ஷங்கர் டைரக்சன்ல 'நண்பன்' படத்தில் நடிச்சது பத்தி சொல்லுங்க? 

“நான் அப்போ 'மதில் மேல் பூனை'னு ஒரு படம் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் போன்ல ஷங்கர் சார் ஆபிஸ்ல இருந்து பேசுறோம்னு ஒரு குரல் வந்துச்சு. நான் நம்பாமல் 'ஹே... விளையாடதீங்க'னு சொல்லி கட் பண்ணிட்டேன். அதுக்குபிறகு, மறுபடியும் போன் வந்துட்டே இருந்துச்சு. 'நான் ஷூட்ல இருக்கேன். விளையாடாதீங்க'னு சொல்ல்லி வெச்சுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு, என் நண்பர் 'ஈரம்' பட ஆதி போன் பண்ணி, 'உன் நம்பரை சங்கர் சார் ஆபிஸ்ல கேட்டாங்க. நான் கொடுத்திருக்கேன்'னு சொல்லிட்டு போனை வெச்சுட்டாப்ள. அப்புறம், திருப்பி ஷங்கர் சார் ஆபிஸ்க்கு கால் பண்ணி கேட்டா, ''3 இடியட்ஸ்' படத்துல ஒரு ரோல் நடிக்க சார் கேட்டார். நாளைக்கு வாங்க'னு சொன்னாங்க. நான் உடனே, நைட் கிளம்பி மறுநாள் சென்னை வந்து சாரைப் பார்த்தேன். அந்த பன்னீர் கேரக்டரைப் பத்தி சொன்னார். அவர் படத்தை யாராச்சும் வேண்டாம்னு சொல்லுவாங்களா? உடனே நான் பண்றேன் சார்னு சொல்லிட்டேன். அங்கப்போனா, ஒரு பக்கம் ஷங்கர் சார், இன்னொரு பக்கம் சத்யராஜ் சார்னு பெரிய ஜாம்பவான்கள் முன்னாடி நடிக்கவே வராமல், ஏகப்பட்ட டேக் வாங்கிட்டு இருந்தேன். அவங்க ரெண்டு பேரும் தான் என்னை கூல் பண்ணி நடிக்கவெச்சாங்க. விஜய் சாருக்கும் எனக்கும் ஒரு நாள் ஷூட் இருந்துச்சு. செம கேரக்டர்ங்க தளபதி.’’

அஜித் கூட 'மங்காத்தா' படத்துல கெஸ்ட் ரோல்ல பண்றேன்னு சொன்னீங்களாமே...

'’அப்போ நான் 'நண்பன்' படத்தில நடிச்சுட்டு இருந்தேன். எனக்கு முன்னாடியே பிரபு அண்ணன்கிட்ட, உங்க படத்துல எதாச்சும் ஒரு கெஸ்ட் ரோல்ல வந்துட்டு போயிரணும்னு சொல்லிருந்தேன். அதனால, இந்த படத்துக்கு என்னை கூப்பிட்ட போது, அஜித் சார் தான், 'இல்லை விஜய். 'நண்பன்' பண்ணு. இதுல இந்த சின்ன ரோல் வேணாம். அதுவும் ஒயின் ஷாப் சீனுக்கு மட்டும் எதுக்கு? அப்பா பார்த்தா எதாவது நினைக்கப்போறார்' னு சொன்னார். 'இல்லைண்ணே. பிரபு அண்ணன் படத்துல எதோ ஒரு ரோல் பண்ணணும்'னு சொன்னேன். அதுக்கு அப்புறம், சரி வாங்கனு சொன்னவுடனே ஹைதராபாத் கிளம்பி போய்ட்டேன். அப்போ அவர் என்னை, வசந்த் அன்ட் கோ னு சொல்லி டயலாக் பேயிருப்பார். அதெல்லாம் அவரா ஸ்பாட்ல சொன்னதுதான். உண்மையாகவே, தல தல தான்.’’

உங்களுக்கும் சமுத்திரக்கனிக்கும் ஒரு அண்ணன் தம்பி உறவு இருக்காமே... 

'’ ‘சென்னை 28' பார்த்துட்டு, 'தம்பி நான் அடுத்து ஒரு படம் பண்றேன். அதுல ஒரு முக்கியமான ரோல் உனக்கு இருக்கு'னு சொன்னார். முதல் படத்தை பார்த்துட்டு, அவர் இப்படி சொல்லி என்னை கூப்பிடும்போதே, அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 'நாடோடிகள்' படத்துல நிறைய கத்துக்கிட்டேன். அந்த கேரக்டராகவே வாழ்ந்தோம் படம் முடியுற வரைக்குமே. அப்போ எங்களுக்குள்ள நல்ல பழக்கம் ஏற்பட்டிடுச்சு. இப்போ, நான் 'அச்சமின்றி' படம் பண்ணும்போது, அந்த கேரக்டர் கனி அண்ணா பண்ணா நல்லா இருக்கும்னு நினைச்சு அவர்கிட்ட, 'அண்ணா, இந்த மாதிரி ஒரு படம் பண்றேன் . அதுல நீங்க நடிக்கணும்னே'னு சொன்னேன். அவர் நிறைய படங்கள் பண்ணிட்டு பிஸியா இருந்தாலும், நான் கேட்டத்துக்காக அந்த படத்துல நடிச்சுக்கொடுத்தார். சசி அண்ணனோட 'வெற்றிவேல்' படத்துல ஒரு கேரக்டர் பண்ணிருப்பேன். அதுக்குமே, சமுத்திரகனி அண்ணன் தான் 'சசிகுமார் படத்துல ஒரு ரோல் பண்ணணும். கிளம்பி வாடா தம்பி'னு சொன்னார். நானும் உடனே போய் நடிச்சுக்கொடுத்துட்டேன். கனி அண்ணன் தான் 'நாடோடிகள்' படத்துல என்னை செதுக்கினார். அவர்கிட்ட பேசுனாலே, ஒரு பாசிட்டிவ் வைப்ரேசன் கிடைக்கும்.’’

ஹீரோவா நடிக்கும்போதே, அடுத்த படம் சின்ன ரோல்ல நடிக்கிறீங்க. இதனால், உங்க கரியர் க்ராஃப் பாதிக்குமோனு நினைச்சதுண்டா?

“ஐயோ அப்படிலாம் இல்லைங்க. எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன். எவ்ளோ சின்ன கேரக்டரா இருந்தாலும் கதை பிடிச்சுருந்தா நடிச்சுடுவேன். ஹீரோ, சின்ன ரோல் இதெல்லாம் நான் பார்க்குறதே இல்லை.’’

சமீபமா ‘வேலைக்காரன்’ படத்துல நடிச்சது பத்தி சொல்லுங்க?

“திடீர்னு மோகன் ராஜா சார் ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சு. அங்கப் போன உடனே, அவர் கதைக்கான அவுட் லைன் சொன்னார். அப்புறம் நேரா ஷூட்டிங் தான். மோகன் ராஜா சார் ஷாட்டுக்கு முன்னாடி இப்போ என்ன பண்ணப்போறோம்னு தெளிவா சொல்லி, இதை இப்படி பண்ணலாமா, இந்த டயலாக்கை இப்படி பேசலாமானு எங்ககிட்டயும் கருத்து கேட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு தான், ஆக்‌ஷனே சொல்லுவார். பிரகாஷ்ராஜ் சார் கூட நடிக்கிற மாதிரி சில சீன் இருக்கு. அப்போல்லாம் ரொம்ப பயமா இருந்துச்சு. மோகன் ராஜா டைரக்சன்ல இருந்து  நிறைய கத்துக்க முடிஞ்சுது. இந்த படத்துல ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு ஆர்டிஸ்ட் பண்ணியிருக்காங்க. நான், சிவா, ரோபோ அண்ணன் எங்க மூணு பேருக்குதான் ஷூட் ஒன்னா அமைஞ்சுது. நாங்க மூணு பேர் சேர்ந்து வர ஷாட்டெல்லாம் செம ஜாலியா இருக்கும். சிவாவுக்கும் எனக்கும் அப்போலிருந்தே நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருந்துச்சு. இப்போ அவர்க்கூட வொர்க் பண்ணது ரொம்ப ஹாப்பி. இந்த படத்துல ஒரு நல்ல கெட்ட பையனா நான் வருவேன். மத்தபடி எப்படி இருக்குனு நீங்க தான் படம் பார்த்துட்டு சொல்லணும்’’.

அப்பா உங்க படத்தைப் பாத்துட்டு என்ன சொல்வார்? உங்களுடைய அடுத்தக்கட்ட ப்ளான் என்ன?   

“அப்பா சிவாஜி சாரோட பெரிய ரசிகர். எப்போவும் என்கிட்ட 'தினமும் ஒரு  சிவாஜி படம் பார். அதுலயே உன் நடிப்பு தானா இம்ப்ரூவ் ஆகும்'னு சொல்லிட்டே இருப்பார். சிவாஜி சாரோட ஒரு பாட்டு வந்தாலும் இது மாதிரி பண்ணு, இப்படி நடினு சொல்லுவார். எனக்கு பிஸ்னஸ் தான் ஃபர்ஸ்ட். ஏன்னா, சினிமாவை எதிர்பார்த்து நான் வரலை. படிச்ச படிப்புல இருந்து எல்லாமே பிஸ்னஸ் தான். அப்பா ஒன்னுமே இல்லாத இடத்துல இருந்து இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கார். பையன் சினிமாவுக்கு போய் பிஸ்னஸை சரியா கவனிச்சுக்கலைனு யாரும் சொல்லிடக்கூடாதுங்கிற பயம்தான் என்னை பிஸ்னஸையும் சினிமாவும் பேலன்ஸ் பண்ணி கூட்டிட்டு போய்ட்டு இருக்கு. இப்போ அடுத்து நிறைய கதைகளும் கேட்டுட்டு இருக்கேன். பார்க்கலாம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு