Published:Updated:

சல்மான், அமீர், ஷாருக்... யார் யாருக்கு எந்தெந்த இடம்..! - IMDb சிறந்த 10 நடிகர்களின் பட்டியல்

சல்மான், அமீர், ஷாருக்... யார் யாருக்கு எந்தெந்த இடம்..! - IMDb சிறந்த 10 நடிகர்களின் பட்டியல்
சல்மான், அமீர், ஷாருக்... யார் யாருக்கு எந்தெந்த இடம்..! - IMDb சிறந்த 10 நடிகர்களின் பட்டியல்

சல்மான், அமீர், ஷாருக்... யார் யாருக்கு எந்தெந்த இடம்..! - IMDb சிறந்த 10 நடிகர்களின் பட்டியல்

ஒரு படம் வெளிவந்த உடனே அந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் விமர்சனங்களைப் பார்ப்பது தற்போது வழக்கமாகி விட்டது. மிகச் சரியான விமர்சனங்களை தருவதில் IMDb தளமும் ஒன்று. இந்தத் தளத்தில் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்து எவ்வளவு வசூல் செய்துள்ளது வரை அனைத்து தகவல்களும் இருக்கும். இவர்கள் ஒவ்வொரு வருடமும், மிகச்சிறந்த 10 நடிகர், நடிகைகளை நடிப்புகேற்ப மதிப்பிட்டு பட்டியலிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

அந்த வரிசையில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் நடிகர், நடிகைகளின் நடிப்பை மதிப்பிட்டு சிறந்த 10 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் யாரென்று பார்ப்போம்.

10.கத்ரினா கைஃப்:

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை. இந்த வருடம், 'ஜக்கா ஜசூஸ்' படத்தில் தொலைந்து போன அப்பாவை தேடி அலையும் ஹீரோவுக்கு காதலியாகவும், அப்படியே எதிர்மறையாக ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தில் சல்மானுடன் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து  10வது இடத்தை பிடித்துள்ளார்.

9. ஹ்ரித்திக் ரோஷன்:    

 "Dhoom machale" என்று பாடிக்கொண்டு சிக்ஸ் பேக்கை எப்போதும் காட்டிக் கொண்டு நடிக்கும் ஹ்ரித்திக், தனக்கு முற்றிலும் மாறுபட்ட கதை களத்தைதேர்வு செய்து மனதையும், வசூலையும் காபில் படம் மூலம் அள்ளிவிட்டார். கண்தெரியாத காதலனாகவும் அதே நேரத்தில் பழிதீர்க்கும் ஹீரோவாகவும் தத்ரூபமான நடிப்பின் மூலம் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

8. அனுஷ்கா : 

அழகே பொறாமை கொள்ளும் பேரழகு” என்ற வார்த்தைக்கு அர்த்தம் சேர்த்தவர் அனுஷ்காஷெட்டி. இந்த வருடம் பாகுபலியில் அமேந்திர பாகுபலிக்கு அழகிய காதலியாகவும், குந்தள தேசத்து இளவரசியாக வீரம் கொண்ட "தேவ சேனையாகவும்" , அதே நேரத்தில் மகேந்திர பாகுபலிக்கு தாயாகவும் உணர்வு பூர்வமாக நடித்து 8வது இடத்தை பிடித்துள்ளார். 

7. அனுஷ்கா சர்மா: 

விராட் கோலியின் காதலி, பாலிவுட் சினிமாவின் "கான்" களின் ஆஸ்தான நடிகையுமானவர் அனுஷ்கா சர்மா. ’பிலவுரி’ படத்தின் மூலம் மந்திரங்கள் செய்யும், தோழியாக பழகும் பேய் கதாபாத்திரத்திலும், `ஜப் ஹரி மெட் சேஜல்' படத்தில் ஷாருக்குடன் இணைந்து காதலை பொழிந்தும் என மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து 7வது இடத்தை பிடித்துள்ளார்.

6.பிரபாஸ்:

பாகுபலியாக மக்கள் மனதில் வாழ்ந்தவர் பிரபாஸ். 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய திரைப்படத்தின் கதாநாயகன். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பிரபாஸாக நடிக்காமல் பாகுபலியாகவே மாறியதால் 6வது இடம் கிடைத்துள்ளது.

 5. இர்பான் கான் :

குணச்சித்திர நடிப்புக்கு பேர் போனவர். ஹாலிவுட் படத்திற்கு இந்திய நடிகர் வேண்டுமென்றால் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படுபவர் இவரே. இந்த வருடம் "ஷிந்தி மீடியம்" படத்தில் தன் குழந்தையை மிகச்சிறந்த பள்ளியில் சேர்ப்பதற்கு பணக்கார தந்தையிலிருந்து ஏழை தந்தையாக மாறி காமெடியும் கலாசார நிலைகளையும் வெளிப்படுத்தி இருந்தார். அதே நேரத்தில் `கரிப் கரிப் சிங்கிள்' படத்தில் காதலனாகவும் வலம் வந்து 5வது இடத்தை பிடித்துள்ளார். 

4. தமன்னா : 

இந்த வருடம் தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற 3 மொழிகளில் நடித்துள்ளார். அதுவும் பாகுபலியில் ஓர் புரட்சி வீராங்கனையாகவும், khamoshi படத்தில் பேயால் அவதிப்படும் திகில் நிறைந்த பெண்ணாகவும் வேறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து, 4வது இடத்தை தட்டிச் சென்றுள்ளார்.

 3. சல்மான் கான் :

‘கான்’களின் படம் என்றாலே வசூல் நிச்சயம். அதுவும் 100 கோடி உறுதி. இந்த வருடம் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார் சல்மான் கான். ஒன்று, ‘ட்யூப் லைட்’ படத்தில் இந்தியா - சீனா போரில்தொலைந்து போன தனது சகோதரனை தேடும் அப்நார்மல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியதால் 3வது இடத்தை பிடித்துள்ளார். டிசம்பர் 22ஆம் தேதி ‘டைகர் ஜிந்தா ஹே’ படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2.அமீர்கான் :

2016ஆம் ஆண்டின் இறுதியில் தங்கல் படம் ரிலீஸானதால் அதன் தாக்கம் 2017ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. "ஒரு நேஷனல் லெவல் சாம்பியன்கிட்ட தான் தோற்றுக்க’’ என கெத்தாக சொல்லி மல்யுத்த வீரனாக படத்தின் கதையை ஆரம்பித்து, "வெள்ளி ஜெயிச்சா ஒண்ணு, இரண்டு நாள்ல மறந்துடுவாங்க கீதா, தங்கம் ஜெயிக்கணும் அதுவும் நாட்டுக்காக" என்று சொல்லும் போது அமீர்கானாக தெரியாமல், கீதாவுக்கு தந்தையாகவும், பயிற்சியாளராகவும் நமது கண்களுக்கு தெரிந்தார். 2000 கோடி வசூலை அள்ளிய முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார் அமீர்கான்.

1. ஷாருக்கான்: 

"கான்"களின் ராஜ்யம் எப்போதும் இருக்கும். அதிலும் இவர் "My Name is khan But I am not terrorist" என்று சொன்னாலே யாரைக் குறிக்கும், கிங் ஆஃப் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தான். இந்த வரும் "ரயீஸ்" படத்தில் கேங்ஸ்டர் ஆக உச்சக்கட்ட நடிப்பிலும், `ஜப் ஹரி மெட் சேஜல்' படத்தில் ஊர் சுற்றி காட்டும் வழிகாட்டியாகவும், காதலனாகவும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு