Published:Updated:

அவர் சொன்னால் தலையாட்டும் நயன்!

அவர் சொன்னால் தலையாட்டும் நயன்!
அவர் சொன்னால் தலையாட்டும் நயன்!
அவர் சொன்னால் தலையாட்டும் நயன்!

சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என அனைவரோடும் கிசுகிசுக்கப்பட்டவர் நயன்தாரா.  அனைவரிடமும் இவரது நட்பு  சுமார் ஒரு வருடம் தான். நயன் தற்போது ஆர்யாவோடு  கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

நயன்தாரா அறிமுகமான 'ஐயா' படத்தில் இருந்து நயன்தாராவிற்கு மேக்கப் மேனாக  இருந்து வருபவர்  ராஜு. நயன் எந்த ஒரு படத்தில் நடித்தாலும், பல்வேறு  நாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் இன்று வரை ராஜு தான் மேக்கப் மேனாக இருந்து  வருகிறார்.

யார் என்ன சொன்னாலும் ராஜு என்று வந்துவிட்டால் யாரையும் நம்ப மாட்டாராம் நயன்.  மறுபடியும் சிம்பு - நயன் சந்தித்து கொண்டார்களே, அந்த சந்திப்பினை உருவாக்கித்  தந்தவர் ராஜு தானாம்.

##~~##
நேரடியாகவோ, போனிலோ பேச மாட்டார் என்று ராஜு மூலமாக தூது அனுப்பியவர்  சிம்பு தானாம். முதலில் பெற்றோருடன் படப்பிடிப்பிற்கு வந்தவர், தற்போது மேக்கப்  மேன் ராஜு இல்லாமல் எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் செல்வது இல்லை. ராஜு என்ன  சொன்னாலும் எதுவுமே சொல்லாமல் தலையாட்டி விடுகிறாராம் நயன்.
பல பேருடன் கிசுகிசுத்தாலும் ராஜு வசம் தான் எப்போதும் நயன் என்கிறது கோலிவுட்.