Published:Updated:

''அம்மா டெக்னிக்... பாட்டி கைமணம்தான் என்னை ஸ்லிம் ஆக்குச்சு!’’ - ஸ்லிம் லட்சுமி மேனன்

''அம்மா டெக்னிக்... பாட்டி கைமணம்தான் என்னை ஸ்லிம் ஆக்குச்சு!’’ - ஸ்லிம் லட்சுமி மேனன்

''அம்மா டெக்னிக்... பாட்டி கைமணம்தான் என்னை ஸ்லிம் ஆக்குச்சு!’’ - ஸ்லிம் லட்சுமி மேனன்

''அம்மா டெக்னிக்... பாட்டி கைமணம்தான் என்னை ஸ்லிம் ஆக்குச்சு!’’ - ஸ்லிம் லட்சுமி மேனன்

''அம்மா டெக்னிக்... பாட்டி கைமணம்தான் என்னை ஸ்லிம் ஆக்குச்சு!’’ - ஸ்லிம் லட்சுமி மேனன்

Published:Updated:
''அம்மா டெக்னிக்... பாட்டி கைமணம்தான் என்னை ஸ்லிம் ஆக்குச்சு!’’ - ஸ்லிம் லட்சுமி மேனன்

" சினிமா ஃபீல்டுலதான் இருக்கேன். எனக்குப் பிடிச்ச கேரக்டர் அமையும் படங்கள்ல நிச்சயம் நடிப்பேன். அப்படித்தான் இப்போ 'யங் மங் சங்' படம் மூலமா சீக்கிரமே எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ண வரப்போறேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை லட்சுமி மேனன்.

" 'யங் மங் சங்' படத்தில் நடிக்கும் அனுபவம்..."

"எல்லாப் படங்கள்லயும் வொர்க் பண்ற மாதிரிதான் இந்தப் படத்திலும் நடிக்கும் அனுபவம் நல்லாப் போகுது. முதல் முறையா பிரபுதேவா சார்கூட நடிக்கிறேன். தொடர்ந்து ஷூட்டிங் நடந்திட்டிருக்குது. அவரோட டான்ஸ் பத்தி நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுவரைக்கும் அவர்கூட சேர்ந்து டான்ஸ் ஆடுற மாதிரியான போர்ஷன் வரலை. அப்படியான சீன் இருக்குமான்னும் இப்ப வரைக்கும் தெரியலை. ஆனா, படத்துல நீங்க என்னை கிளாசிக்கல் டான்ஸரா பார்க்கலாம்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"கிளாசிக்கல் டான்ஸரான நீங்க, இப்பவும் டான்ஸ் கத்துக்கிறீங்களா?"

"ஆமாம். என்னோட அம்மா டான்ஸர். சின்ன வயசுலேருந்து இப்போ வரை அவங்ககிட்ட டான்ஸ் கத்துக்கிறேன். ஸ்கூல் படிக்கிறப்போவே ஹீரோயினாகிட்டதால படிப்புல என்னால சரியா கவனம் செலுத்த முடியாம போச்சு. ஆனா, அந்தச்  சூழ்நிலையிலேயும் டான்ஸை நிறுத்தலை. பிரேக் இல்லாம ஷூட்டிங் போறப்ப எல்லாம், சில மாசம் டான்ஸ் டச்சே இல்லாமலும் போகும். ஷூட்டிங் முடிஞ்சதும் சில மாசம் ஓய்வு கிடைச்சா, அப்போ ரெகுலரா டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுவேன். அதனால டான்ஸையும் என்னையும் எப்பவும் பிரிக்க முடியாது. அந்த பந்தத்துனாலதான் அடிக்கடி டான்ஸ் ஆடுற மாதிரியான போட்டோஸை சோஷியல் மீடியாவுல போஸ்ட் பண்றேன். எதிர்காலத்துல டான்ஸ் இன்ஸ்டிட்யூட் நடத்தணும்னு ஆசைப்படுறேன். அதைச் சாத்தியமாக்க நிறைய வொர்க் பண்ணணும். நிச்சயம் பண்ணுவேன்."

"திடீர்னு வெயிட் கூடினீங்க... இப்ப டக்குனு ஸ்லிம் ஆகிட்டீங்களே. படத்துக்காகவா?"

"டயட்ங்கிற கான்சப்ட்ல எனக்கு எப்பவும் உடன்பாடில்லை. என் பாட்டி சூப்பர் குக். அவங்க சமைச்ச உணவுகளை  ரொம்பவே திருப்தியா சாப்பிடுவேன். அதேசமயம் சினிமாவுல நடிக்கிறதால கொஞ்சம் ஸ்லிம்மா இருக்கவேண்டியதும் கட்டாயமா இருக்கு. அதுக்காக ஸ்பெஷல் வொர்க் அவுட்டெல்லாம் செய்ய மாட்டேன். நல்லா ஃபுல் எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். நடுவுல கொஞ்ச நாள் நடிக்காம இருந்ததால, கொஞ்சம் வெயிட் போட்டேன். இப்ப படத்துல கமிட் ஆனதால நல்லா டான்ஸ் ஆடினேன். அதில் அம்மாவின் ஊக்கமும் அதிகம். அதனாலதான் ஸ்லிம்மாகிட்டேன். அவ்ளோதான்."

"போன வருஷம் 'றெக்க' ரிலீஸாச்சு. ஒருவருஷத்துக்கு மேலாகியும் உங்க மூவி எதுவும் ரிலீஸாகலையே. ஏன் இப்போ பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்குது?"

"முன்பெல்லாம் ஒரு வருஷத்துக்கு மூணு நாலு படமெல்லாம் ரிலீஸாச்சு. அதுல பெரும்பாலும் எல்லா படமும் ஹிட்தான். ஆனா, 'றெக்க' படத்துக்குப் பிறகு நான் வாய்ப்பில்லாம உட்கார்ந்திட்டிருக்கலை. என்னைத் தேடி வந்த கதைகள் பலவும் எனக்குப் பிடிக்காததுதான் காரணம்." 

"முன்பு போல உங்கள பத்தின நியூஸூம் இப்போ அதிகமா வர்றதில்லையே..."

(சிரிப்பவர்), "சினிமா விஷயமா ஏதாச்சும் நடந்துச்சுன்னா பேசலாம். இப்போ அப்படி எதுவும் நடக்கலையே. முன்ன மாதிரி ஆக்டிவா நிறைய படங்கள்ல நடிச்சா, கட்டாயம் மீடியா முன்னாடி வந்துதான் ஆகணும். அப்படி நடந்தால், நிச்சயம் என்னைப் பத்தின செய்திகள் வரும்."

"படிப்பு எப்படிப் போகுது?"

"ஆக்டிங்ல பிஸியானதால கரஸ்ல காலேஜ் படிக்க ஆரம்பிச்சேன். இப்போ கேரளாவுல பி.ஏ., சோஷியலாஜி மூணாவது வருஷம் படிக்கிறேன். எக்ஸாம் நேரத்துல மட்டும்தான் படிப்பேன். தவிர டான்ஸ் கோர்ஸும் படிச்சுகிட்டிருக்கேன். ஃப்ரீ டைம்ல நிறைய மூவிஸ் பார்ப்பேன். தவிர பிரெண்ட்ஸ்கூட அடிக்கடி அவுட்டிங் போவேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism