Published:Updated:

சிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..! #2017Rewind

சிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..! #2017Rewind
சிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..! #2017Rewind

சிங்கம் - 3... விக்ரம் வேதா... தீரன்... 2017ல் வெளிவந்த போலீஸ் ஸ்டோரிஸ்..! #2017Rewind

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, 'தங்கப்பதக்கம்' காலத்திலிருந்து 'தீரன்' காலம் வரை, கதாநாயகன் போலீஸாக வரும் படங்களுக்குத் தனி மவுசு இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு ஹீரோ போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வந்த நாள் முதலே அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிடும். அந்த வகையில், இந்த வருடம் திரைக்கு வந்த போலீஸ் கதைகள் உள்ள படங்களின் பட்டியல் இதோ...

இந்த வருடத்தின் முதல் போலீஸ் படம் இதுதான். 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவி - ஹன்சிகா - லக்‌ஷ்மன் கூட்டணியில் இரண்டாவது படம். போகரின் பரகாய பிரவேசத்தை பயன்படுத்தி அரவிந்த் சாமி என்னவெல்லாம் செய்கிறார், அதை எப்படிச் சமாளிக்கிறார் ஹீரோ என்பதுதான் கதை. 
 

ஹரியின் அடையாளமே போலீஸ் கதைதான். சூர்யாவையும் அனுஷ்காவையும் வைத்து ஹரி எடுத்த ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு விதமான புது கதாபாத்திரங்களைச் சேர்ப்பார். அந்த வகையில், இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனை பத்திரிகையாளராக நடிக்க வைத்திருந்தார். மருத்துவக் கழிவுகளையும், எலக்ட்ரானிக் கழிவுகளையும் பற்றி பேசியுள்ள படம். 
 

இயக்குநர் அறிவழகனின் நான்காவது படம். என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் மிரட்டிய அருண் விஜய் வெற்றிமாறனாக மெர்சல் காட்டிய படம். மெடிக்கல் க்ரைம், விறுவிறுப்பான திரைக்கதை, தென்றலாக வரும் மஹிமா நம்பியார் என போலீஸ் கதையில் சற்று வித்தியாசமான படம். 
 

சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ் போலீஸ் அதிகாரியாக நடித்த படம் மொட்ட சிவா கெட்ட சிவா. பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், லாரன்ஸ் - நிக்கி கல்ராணி இணைந்து ஆடும் 'ஆடலுடன் பாடலை கேட்டு' பாடலின் ரீமிக்ஸ் இணையத்தில் வைரலானது. 
 

அறிமுக இயக்குநர் ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் 8 தோட்டாக்கள். வங்கிக் கொள்ளை ஒன்றில் தெரியாமல் சிக்கிக்கொண்டுள்ள காவல் அதிகாரி. அந்தக் குற்றத்தின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதும், ஹீரோவிடமிருந்து காணாமல் போன எட்டு தோட்டக்கள் உடைய துப்பாக்கி என்ன ஆனது என்பதுமே இப்படத்தின் கதை. 
 

கார்த்தியை முதன் முறையாக க்ளீன் ஷேவ் லுக்கில் காட்டிய படம்.  பைலட் கார்த்தி, டாக்டர் அதிதி இவர்களுக்குள் ஏற்படும் காதல், ஈகோ ஆகியவற்றை சொல்லும் படம். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் இந்தக் கதைக்கு ரஹ்மானின் இசை இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கிறது. 
 

சில வருடங்கள் கழித்து பி.வாசு தமிழில் இயக்கிய படம் சிவலிங்கா. கன்னடத்தில் இவர் இயக்கிய 'சிவலிங்கா'வைதான் தமிழிலும் ரீமேக் செய்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு இந்தப் படத்தில் நடித்திருந்தார். சிஐடி ஆபீசராக வரும் லாரன்ஸ், ஒரு இறப்பை கொலையா தற்கொலையா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. 
 

விக்ரமாக வரும் போலீஸ் மாதவனுக்கும் வேதாவாக வரும் தாதா விஜய் சேதுபதிக்கும் நடுவே உள்ள டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டுதான் படம். 'ஒரு கதை சொல்லட்டுமா?' என்று சொல்லி சொல்லி தான் செய்தது சரியா தவறா? எது தர்மம்? என கேட்கிறார் வேதா. மாதவன், சேதுபதி, வரலட்சுமி, ஷ்ரத்தா ஶ்ரீநாத், கதிர் எனப் பெரிய காஸ்டிங்கை வைத்து மிரட்டியிருக்கிறது புஷ்கர் காயத்ரியின் படைப்பு. 
 

மர்மமான முரையில் நிகழும் கொலைகளைச் செய்யும் குற்றவாளி யார், எதற்காக இதை செய்கிறார்கள், கொலையாளி விட்டுச்சென்ற தடயங்களை எப்படிக் கண்டுப்பிடிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்புடன் காட்டிய படம் நிபுணன். இதில், அர்ஜுனின் டீம் மேட்ஸாக பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தார்கள். இது அர்ஜூனின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

அஜித் - சிவா கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்த படம். டீசரும் டிரெயிலரும் வெளியானவுடன் அஜித்தின் தோற்றதிற்காகவும் அவரின் வசனத்திற்காகவும் அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர். பல்கேரியாவில் கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட் ஏஜென்ட்டாக வரும் அஜித், ஹோம்லி காஜல், அக்‌ஷராவின் அறிமுகம், விவேக் ஓபராய், அனிருத் இசை எனப் பெரிய காம்போவாக வெளியானது. 
 

நான்கு வெவ்வேறு கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மித்தாலஜியும் சேர்த்து, ஆந்தாலஜி படமாக வெளிவந்தது பிஜோய் நம்பியாரின் 'சோலோ'. இதில் ஒரு ஜோடிதான் ருத்ரா ராமச்சந்திரன் - அக்‌ஷ்ரா.  இவர்களின்  ஜாலியான காதல் காட்சிகள் ரசிகர்களைப் போரடிக்காமல் வைத்திருந்தது. நான்கு விதமான கேரக்டர்களில் துல்கர் அசத்தியிருக்கிறார். 
 

வழக்கமான ‘கமர்ஷியல் போலீஸ்’ படங்களைப் போல் இல்லாமல், நிறைய யதார்த்த விவரங்களோடும், ஆவணப் பதிவுகளோடும் கதை நகர்கிறது. டார்க் காலர் க்ரைமை வைத்து வினோத் இயக்கிய இந்தப் படம் கார்த்தியின் கெரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். ரொமான்ஸ் பகுதிகளில் கார்த்தி - ரகுல் ஜோடி அப்ளாஸ் பெற்றது.
 

முதல் பாகம் வந்து பதினொரு வருடங்கள் கழித்து இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது. ஹீரோவுக்கும் வில்லனுக்குமான வழக்கமான பிரச்னை என்றல்லாமல் ஹேக்கிங்கை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியான படம் இது. பாபி சிம்ஹா - பிரசன்னா இவர்களுக்கான போட்டியில் பெரிய திருட்டுப்பையன் யார் என்பதே கதை. 
 

'சைத்தான்' பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டான 'ஷணம்' படத்தின் ரீமேக்தான் 'சத்யா'. ஐடி ஊழியர்களாக வரும் சிபி - ரம்யா நம்பீசன் ஜோடியின் காதல் தோல்வி, ரம்யாவின் குழந்தை கடத்தல் புகார், ஏசிபி வரலட்சுமியின் செகன்ட் ஆஃப் மிரட்டல் என த்ரில்லுடன் கதை நகர்கிறது. யோகி பாபுவின் காமெடி சாரல் போல அவ்வப்போது வீசி அரங்கை சிரிக்க வைக்கிறது. 
 

சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி ஆகியோரின் நடிப்பில் சி.வி.குமாரின் இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து வெளியான படம் 'மாயவன்'. சயின்ஸ் ஃபிக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையுடைய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மூளையின் ஆற்றலை பற்றிய ஆராய்ச்சிகளையும் படம் பேசியிருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு