Published:Updated:

’’தமிழ் ராக்கர்ஸ்ல இருக்குற வேலைக்காரர்களுக்கு ஒரு ரெக்வஸ்ட்..!’’ - மோகன் ராஜா

’’தமிழ் ராக்கர்ஸ்ல இருக்குற வேலைக்காரர்களுக்கு ஒரு ரெக்வஸ்ட்..!’’  - மோகன் ராஜா
’’தமிழ் ராக்கர்ஸ்ல இருக்குற வேலைக்காரர்களுக்கு ஒரு ரெக்வஸ்ட்..!’’ - மோகன் ராஜா

’’தமிழ் ராக்கர்ஸ்ல இருக்குற வேலைக்காரர்களுக்கு ஒரு ரெக்வஸ்ட்..!’’ - மோகன் ராஜா

"கருத்து சொல்கிற படங்கள் என்றாலே தீண்டதகாத படங்களாய் பார்க்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வேலைக்காரன் ஒரு மெசேஜ் சொல்லும் படம் என்று தெரிந்தும் இதற்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது" என்றார். சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படம், நாளை வெளியாக இருக்கும் நிலையில்,  நேற்று  மோகன் ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

’’எனக்கும் சினிமாவுக்குமான உறவு 1989ம் ஆண்டு தொடங்கியது. இருபது வருடங்களாக என் மனதுக்குள் இருந்த கேள்விகளை கேட்ட படம்தான் 'தனி ஒருவன்'. அந்த படம் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. மக்கள் கொடுத்த அந்த அடையாளத்தைக் கொண்டு இருபது வருடங்களுக்கு முன் எழுந்த சில கேள்விகளையும்,  மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து 'வேலைக்காரன்' படத்தில் கேட்டிருக்கிறேன். சில இடங்களில் பல கேள்விகளுக்கு தேவையான பதில்களையும் கூறியிருக்கிறேன்.

முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தையும், வேலைக்காரர்களிடம் இருக்கும் சில குறைகளையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்துவிட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம் இது. இந்த படத்துக்கு பிறகு அது கண்டிப்பாக நடக்கும். சமூகத்தை பற்றி பேசும் படங்கள் 'பாசிட்டிவாக' மட்டும் தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அப்படித்தான் இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் நாட்டில் சினிமா தரும் என்டர்டெயின்மென்டை விட நியூஸ் சேனல்கள் காட்டும் அரசியல் கூத்துகள்,  பிரச்னைகளில்  என்டர்டெயின்மென்ட்  அதிகமாக இருக்கிறது. இது மாதிரியான படங்களின் பட்ஜெட் 5 கோடிக்குள் தான் இருக்கும். ஆனால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளம் தேவைப்பட்டதாலேயே பெரிய நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறோம். எதற்காகவும்  படத்தின் கதையை தாண்டி செலவு அதிகரிக்கப் படவில்லை. ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை அமைக்கவே இப்பட்ஜெட் தேவைப்பட்டது. சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து கூறியிருக்கிறேன். 

மேலும், இப்படத்தை சிறிய பட்ஜெட்டில் எடுத்திருக்க முடியாது. இங்கு படங்கள் வெளிவர பல தடைகள் இருக்கு தியேட்டர்கள் கிடைக்கவேண்டும், வரிசையாக படங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே தமிழ் ராக்கர்ஸ் பிரச்னை வேறு இருக்கிறது. தமிழ் ராக்கர்ஸும் ஒரு சிறந்த 'வேலைக்காரன்'தான். அவனும் இரவு பகலாக கண் விழித்து தான் திருட்டு தனமாக படங்களை வெளியிடுகிறான். அவன் இப்படத்திற்கு மரியாதை செலுத்த எண்ணினால் இரண்டு நாட்கள் கழித்து படத்தை வெளியிடட்டும். ஒரு திருடனிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். 

இங்கு நினைத்த படங்களை செய்ய யாருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தயாரிப்பாளர், ஹீரோ ஆகியோரை திருப்திப்படுத்த தான் படங்கள்  எடுக்கப்படுகிறது. 14 வருடங்கள் ரீமேக் படங்கள் வழியாக ஒரு மேடை , 'தனி ஒருவன்' வழியாக மற்றொரு மேடை அமைத்த பிறகு தான் நான் நினைத்ததை எடுக்க முடிகிறது. ஆனால் நான் ஒரு உணர்வாளனாக எழுதிய ஒரு கதைக்கு தன்னையே அர்ப்பணித்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்படத்திற்கு என்ன தேவையோ அதை தந்தார் தயாரிப்பாளர். சிவகார்த்திகேயன் இல்லையென்றால் இப்படம் இல்லை. ’’ ‘தனி ஒருவன்' எப்படி ஒரு அழுத்தமான விஷயத்தை கூறியதோ நாம் சேர்ந்து வேலை செய்யக் கூடிய படமும் அப்படி இருக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார் சிவகார்த்திகேயன். அப்படி உருவானதுதான் 'வேலைக்காரன்' படம். கருத்து சொல்கிற படங்கள் என்றாலே தீண்டத்தகாத படங்களாய் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பார்த்து வந்த நிலை மாறி, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக 'வேலைக்காரன்' படம் ஒரு மெசேஜ் சொல்லும் படம் என்று தெரிந்தும் இதற்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம்.  பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. 

இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும், இது போன்ற சமூதாய கருத்துமிக்க படங்கள் எதிர்காலத்தில் எடுக்க இந்த படத்தின்  வெற்றி உறுதுணையாய் இருக்கும். படத்தில், "தப்ப யாரும் விரும்பி பண்றதில்ல, தப்பு ஜெயிக்கறதாலதான் பண்றாங்க, நன்மை ஜெயிக்கும்னு நிரூபிச்சா நன்மையை விரும்பி பண்ணுவாங்க’’னு ஒரு வசனம் இருக்கு. அது தான் உண்மை.  அதை மனதில் வைத்தே பண்ணப்பட்ட படம் இது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு