Published:Updated:

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

கார்க்கிபவாசினிமா

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

கார்க்கிபவாசினிமா

Published:Updated:

கேரளா 'கடவுளின் தேசம்’ மட்டும் அல்ல... 'ஹீரோயின் உற்பத்தி தேசமும்’கூட! கோலிவுட்டின் 'கோடி லேடி’ நயன்தாரா முதல் 'ஹோம்லி மல்லி’ லட்சுமி மேனன் வரை, பெரும்பாலான அழகுக் கிளி செல்லங்கள் மலையாள இறக்குமதிகளே. அந்த மலையாளக் கரையோரத்தில் டிரெண்டிங் அடிக்கும் பியூட்டிகள் யார் யார்? அதகள ஹீரோக்கள் நிரம்பிய கன்னட சினிமா உலகத்தின் 'சாண்டல்’ அழகிகள் யார் யார்? ஓர் அழகு உலா...   

அழகுக் குட்டிச் செல்லங்கள்!
அழகுக் குட்டிச் செல்லங்கள்!

'கேரளா செல்லம்’! 2011-ல் 'டிராஃபிக்’ படம் மூலம் நடிக்க வந்த நமீதா பிரமோத்தின் கவனம் முழுக்க மலையாளப் படங்கள் மீது மட்டும்தான். திலீப்புடன் நடித்த 'சந்திரேட்டன் எவிடயா’ ஹிட்ஸ் குவிக்க, அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் நமி. பிருத்விராஜுடன் நடித்த 'அமர் அக்பர் அந்தோணி’ படம் நமீதாவை இன்னும் ஹாட் டார்லிங் ஆக்கிவிட்டது. இத்தனைக்கும் பொண்ணு கடந்த செப்டம்பரில்தான் டீனேஜ் தாண்டியிருக்கிறார். 'அடுத்த அஞ்சு வருஷத்துக்கு  எங்க ஆளை அடிச்சுக்க முடியாது... அடிச்சுக்க முடியாது!’ என்று 'ஜொள்ளு’கிறார்கள் நமீதா ரசிகர்கள்!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

'கண்’மணிக்குச் சொந்த ஊர் கேரளாதான். தெலுங்கு, தமிழ் எனப் பறந்து பறந்து நடித்தாலும், மலையாளப் படங்கள் என்றால், மறுக்காமல் 'ஓகே’ சொல்லிவிடுகிறார். சென்ற ஆண்டு சென்சேஷனல் ஹிட், 'பெங்களூர் டேஸ்’. வருடத்துக்குச் சில படங்களே எனத் தேர்ந்தெடுத்துதான் நடிப்பார்... ஆனால், அது வருடம் முழுக்க டிரெண்டிங்கில் இருக்கும். கேரள இளைஞர்களின் இதயம் முதல் மொபைல் வால்பேப்பர் வரை நித்யா... நித்யாதான். 'அடுத்து என்ன படம் கண்ணு?’ எனக் காத்திருக்கிறார்கள் கேரளா பாய்ஸ்!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

சிந்தி தேச அழகி நிக்கி கல்ரானி, இப்போது தென் இந்திய மொழிகள் அனைத்திலும் பிஸி. ஏற்கெனவே, இவரது அக்கா சஞ்சனா, கன்னட உலகைக் கலக்கியவர். நிக்கி, தமிழில் 'டார்லிங்’, 'யாகாவாராயினும் நாகாக்க’ என கணக்கைத் தொடங்கிவிட்டார். 'இவன் மரியாதராமன்’ என்ற ஹிட்டுடன் கேரளாவில் இந்த ஆண்டைத் தொடங்கியவர், இதுவரை மூன்று படங்களை முடித்து 'டாப் 5’ ரேங்கிங்கில் இடம்பிடித்திருக்கிறார். துறுதுறு பேச்சு, விறுவிறு கிளாமர் என ஸ்டார் நடிகைக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியிருக்கின்றன நிக்கி கல்ரானிக்கு. இவர் கொஞ்சிக் கொஞ்சி மலையாளம் பேச, 'ச்சோ ஸ்வீட்’ என உருகுகிறார்கள் மல்லு மக்கள்!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள், ஒரு ரியாலிட்டி ஷோவில் இயக்குநர் லால் ஜோஸை அசத்தியவர் அனுஸ்ரீ. உடனே தனது 'டைமண்ட் நெக்லஸ்’ படத்தில் அனுஸ்ரீக்கு வாய்ப்பு தந்தார். அந்தப் படத்துக்காக பல 'அறிமுக நடிகை’ விருதுகளை அள்ளி வைரல் ஹிட் அடித்தார் அழகி. ரசிகர்களும் லைக்ஸை அள்ளித் தெளிக்க, பிரகாச லைம்லைட்டுக்கு வந்தார். அவ்வளவு வரவேற்பு வாய்ப்புகளுக்கு இடையிலும், இந்த வருடம் மிகச் சில படங்களில் மட்டும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். காரணம் கேட்டால், 'நான் பி.ஏ படிக்கணுமே!’ எனச் சிணுங்குகிறார் அழகாக!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

மலையாள ஒளிப்பதிவாளர் விபின் மோஹனின் மகள். ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாகக் கவர்ந்தவர், இப்போது ஹீரோயினாகக் கலக்கிக்கொண்டிருக்கிறார்.  பிறந்தது கேரளா. ஆனால், கல்லூரிப் படிப்பு சென்னை ஸ்டெல்லா மேரீஸில்தான். நிவின் பாலியுடன் நடித்த 'ஒரு வடக்கன் செல்ஃபி’ மாஸ் ஹிட்டடிக்க, இளைஞர்களின் 'செல்ஃபி புள்ள’ ஆனார். இப்போது கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியின் 'அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மஞ்சிமாதான் ஹீரோயின். முக்கியமான புராஜெக்ட் என்பதால், வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார். 'படம் வெளிவந்ததும் தென் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்குவேன் ப்ரோ’ என்கிறார் மஞ்சிமா. அதெல்லாம் சரிதான். இந்த 'ப்ரோ’ மட்டும் வேண்டாமே!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

சென்னையில் வளர்ந்த மலையாளப் பெண்குட்டி. கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயின்ற அபர்ணா, பல மேடை நாடகங்களில் நடித்தவர். துல்கர் சல்மானுடன் 'ஏபிசிடி’-யில் அறிமுகமானார். இப்போது அதே துல்கருடன் 'சார்லி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பெர்ஃபார்மர் மம்மூட்டியுடனே தொடர்ந்து இரண்டு படங்களில் சளைக்காமல் மல்லுக்கட்டியவர். நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால், நடனப் பயிற்சி என அவ்வப்போது ஷ§ட்டிங்கைக் கண்டுகொள்வது இல்லை எனப் புலம்புகிறார்கள் ரசிகர்கள். அபர்ணா ஹீரோயின் மட்டும் இல்லைப்பா...  அவரை அவர் இஷ்டத்துக்கு விடுங்க. பின்னிப் பெடலெடுப்பார்!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

அழகிகளின் தாய் வீடான கேரளாவின் 'தொடுபுழா’வில் பிறந்தவர் ஹனி ரோஸ். பத்து ஆண்டுகளாக மல்லுவுட்டில் பரபரப்பவர் -  வினயன், ஷாஜி கைலாஷ், அன்வர் ரஷீத் என சீனியர் இயக்குநர்கள் பலரிடமும் 'வெரிகுட்’ வாங்கியிருக்கிறார். உடனே அம்மணி மிக சீனியர் என நினைத்துவிடாதீர்கள். 'ரொம்ம்ப சின்னப் பொண்ணா இருக்கறப்பவே நடிக்க வந்துட்டாங்க’ என சால்ஜாப்புகிறார்கள் ஹனியின் ரசிகர்கள். 'அது சரி... இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என யோசிக்கிறீர்களா? அட, ஜீவாவுடன் 'சிங்கம் புலி’யில் நடித்த அழகு ரோஜாதான் இந்த ஹனி ரோஸ்!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!
அழகுக் குட்டிச் செல்லங்கள்!

'எனக்குள் ஒருவன்’, 'யட்சன்’ என தமிழில் ஃப்ளாஷ் அடித்த  தீபா சந்நிதி, ஏற்கெனவே சாண்டல்வுட்டின் டிரெண்டிங் பியூட்டி. அங்கு அறிமுகமான 'சாரதி’ படத்திலேயே  'சிறந்த அறிமுக ஹீரோயின்’ விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தீபாவின் அப்பா காஃபி எஸ்டேட் உரிமையாளர். ஆக, கையில் கோல்டன் ஸ்பூனுடன் பிறந்தவர் தீபா. இதனால், எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார். கன்னடத்தில் ஹாட்ரிக் அடித்ததாலும், தமிழில் லைக்ஸ் குவிப்பதாலும், இப்போது கோலிவுட், சாண்டல்வுட் இரண்டும் தீபாவின் இரு கண்கள்!  

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

டில்லியில் பிறப்பு, பெங்களூருவில் வளர்ப்பு, மாடலிங் துடிப்பு, சினிமா நடிப்பு... இதுதான் க்ரிதி கிராப்! 'சுப்ரமணியபுரம்’ படத்தின் கன்னட ரீமேக் ஹிட் க்ரிதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்க, 'கூக்லி’ பட ஹிட் பல விருதுகளைக் கொட்டியது. பாய்ஸ் மட்டும் அல்லாமல், கேர்ள்ஸின் புரொஃபைல் பிக்சரிலும் இடம் பிடித்தார் க்ரிதி. பத்தாததற்கு ஹிட் ராசியும் சேர்ந்துகொள்ள, இப்போது க்ரிதியின் கால்ஷீட் பண்டிகைக் கால ரயிலைவிட வேகமாக புக் ஆகிறது. 'எல்லாரும் நடக்க ஆசைப்படுறப்ப, நான் பறக்க ஆசைப்படுவேன். இப்போ பறந்துட்டு இருக்கேன்!’ என்று சிரிக்கிறார் சில்மிஷமாக!  

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

ஹரிபிரியாவின் நிஜப்பெயர் ஸ்ருதி. ஏற்கெனவே ஏகப்பட்ட 'ஸ்ருதி’க்கள் இருப்பதால், 'ஹரிபிரியா’ ஆனார். அப்பா நாடகக் கலைஞர் என்பதால், நடிப்பு ரத்தத்திலேயே இருந்தது. 'கல்லர சாந்தே’ படம் அழகியை கன்னட உலகின் டார்லிங் டம்பக் ஆக்கியது. 'உக்ரம்’ பட வெற்றி அவரை 'அதுக்கும் மேலே’ கொண்டு சென்றது. 'ஃபேமிலி லுக் இருக்கும். ஆனா, செம ஹாட் மச்சி’ என எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக இளசுகளை ஈர்த்தார் ஹரிபிரியா. பிற மொழிகளில் வாய்ப்பு கதவு தட்டினாலும், கன்னட 'டாப் ரேங்க் ரேஸில்’ இருந்து பின்வாங்க விரும்பவில்லை ஹரி. சரிதான்!

அழகுக் குட்டிச் செல்லங்கள்!

'மிஸ் இந்தியா’வில் ஜஸ்ட் மிஸ்ஸாகி இரண்டாம் இடம் பிடித்தவர் ராகினி. 'நான் ஈ’ சுதீப்புடன் 'வீர மடகாரி’ படம் மூலம் கன்னட உலகில் கரை கடந்த புயல். தமிழில் 'நிமிர்ந்து நில்’ படத்தில் மட்டும் லேசுபாசாக எட்டிப் பார்த்தார். 'எனக்கு பெங்களூருதான் செட் ஆகும்’ என பேக் அடித்துவிட்டார். இப்போது அம்மணியின் கையில், விரல் எண்ணிக்கையைவிட அதிகப் படங்கள். அதுவும் 'ராகினி ஐ.பி.எஸ்’ அதிரிபுதிரி ஹிட் அடிக்க, இப்போது 'ராகினி சூப்பர் ஸ்டார்’ என்றொரு படத்துக்கு பூஜை போட்டுவிட்டார்கள். பத்த வெச்சிட்டியே ராகினி!