அவள் 16
தன்னம்பிக்கை
Published:Updated:

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்சூப்பர் ஸ்டார் மாதிரி... ஸ்டார் ஆகப்போறேன்!அவள் 16

வள்16 இதழ் உங்க கையில கிடைச்சதும் பாபி எங்க இருக்கார்னு தேடுனீங்கதானே?

பாபி ரெடி... அப்ப நாம நாஸ்டால்ஜிக் ஃபீலுக்குப் போக ரெடி ஆக வேணாமா?

கமான்... ‘அவள்16’ சேனலை டியூன் பண்ணுங்க மக்களே...

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

ஒரு பெர்ர்ர்ரிய இடைவெளிக்கு பிறகு உங்க எல்லாரையும் மீட் பண்றேன் அது என்ன மாயமோ... மந்திரமோ தெரியலைங்க. உங்ககூட வந்து பேசுறப்ப ‘ரெனால்ட்ஸ்-ஹீரோ’ பேனா வெச்சு எழுதுன காலத்துக்கு டைம் மெஷின்ல ஏறிப்போயிடுறேன். கையில இருக்குற போன்ல செல்ஃபி எடுத்தாக்கூட அரும்பு மீசை எட்டிப்பார்க்குற ஃபீல். சரி, நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. இப்படித்தான் குஜராத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு... ‘ஸாரி ஸாரி... சினிமா வாய்ப்புக்காக சென்னையில நாயா பேயா அலைஞ்ச காலத்துல சாப்பாட்டுக்காக இன்ஷுரன்ஸ் கம்பெனில வேலை பாத்த கதை, சொந்தமா தொழில் ஆரம்பிக்கிறேன்னு அதுல நஷ்டமாகி நாஸ்டாவுக்கு வழி இல்லாம போன கதை, 13 வயசுல லாரியில நான் கிளீனரா இருந்த கதைனு உங்ககிட்ட நான் சொல்ல வேண்டிய கதைகள் நிறைய இருக்கு’னு போன புக்ல சொன்னேன்ல. இதுல நான் மொதல்ல சொல்ல வேண்டிய கதை கிளீனரா இருந்த கதை.

காலேஜ்ல `நானும் ரவுடிதான்’னு செமையா பில்டப் கொடுத்திட்டு இருந்த இந்த பாபிக்கு, ஸ்கூல் டேஸ்ல பயங்கரமான ஃப்ளாஷ்பேக்கெல்லாம் இருக்கு.

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

கட் பண்ணி ஓபன் பண்ணா... ஹைதராபாத்! அப்போ நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். ’சில்ட்ரென்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’க்காக ஒரு தியேட்டர்ல LION KING படம் போட்டிருந்தாங்க. எங்க கிளாஸ் பசங்களைக் கூட்டிட்டுப் படத்துக்குப் போயிட்டேன். மதியம் படம் முடிஞ்ச பின்னாடியாச்சும் அவனுங்களை ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனா, அடுத்த படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு ஜாலியா கடலை மிட்டாய் பாக்கெட்டோட கூட்டிட்டுப் போயிட்டேன். படம் முடிஞ்சு வெளிய வந்தா செம ஷாக்! டீச்சர்ஸ், பேரன்ட்ஸ், ஆட்டோ அங்கிள்ஸ், ரிக்‌ஷா மாமாஸ்னு ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க! அடுத்த நாளே நாலாங்கிளாஸ் பையன்னுகூட பார்க்காம என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.

விதி நம்ம லைஃப்ல ரொம்ப வலியது...

விஜயவாடால ஒரு தெலுங்கு ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. அங்கயும் நமக்கு செட் ஆகலை. அப்டி இப்டினு ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் வந்துட்டாலும், சுத்தமா எனக்கு மேத்ஸ் வரல. வராத மேத்ஸை ‘வா வா’ன்னா எப்படி வரும்? மேத்ஸ்ல ஜீரோதான் என் ஆவரேஜ் மார்க். வீட்டுல டின்னு கட்டுவாங்க. ஒருநாள் எங்கயாச்சும் எஸ்கேப் ஆயிடலாம்னு மேத்ஸுக்குப் பயந்து முடிவு எடுத்தேன். எந்த ஒரு நல்லது பண்ணாலும் ஸ்வீட்ல ஆரம்பிக்கணும்லயா? சக்கரைங்கிற சக்கவர்த்தி... என் படா தோஸ்து கெடைச்சான். ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிடலாம்னு பிளான் போட்டு விஜயவாடாவுல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு கிளம்புனோம். அது ‘காதல் தேசம்' ரிலீஸ் டைம். ‘முஸ்தபா முஸ்தபா’ பாட்டு செம ஹிட் இல்லையா! நாங்க ரெண்டு பேரும் ஆட்டோ டிரைவரை திரும்பத் திரும்ப அந்தப் பாட்டைப் போடச் சொல்லி டார்ச்சர் பண்ணோம். சேட்டை ஓவரானதைப் பாத்து நாங்க ஓடி வந்த கதையை மனுஷன் போட்டு வாங்கிட்டு பாதி வழியில ‘ஓடிப்போங்கடா தொங்கனக்கொடுக்காஸ்’னு இறக்கி விட்டுட்டார்.

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

சர்க்கரை செம சமத்து. என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டான். நல்லவேளை கொஞ்ச தூரத்துல தூரத்து ரிலேஷன் வீடு இருந்துச்சு. விஷயத்தைச் சொல்லாம நல்லா சாப்டுட்டு அவங்க கொடுத்த 10 ரூபாயை எடுத்துட்டு ஜாக்கிசானோட ‘WHO AM I’ படத்துக்குப் போனேன். என்னை மாதிரியே சேட்டைப் பையன் ஒருத்தன் எனக்கு ஃப்ரெண்ட் ஆனான். என்னை ஒரு லாரி டிரைவர்கிட்ட கிளீனரா சேர்த்துவிட்டான். அது நேஷனல் பெர்மிட் லாரி. சொல்லவா வேணும்..? ’நானும் லாரியும்’னு லைஃப் ஒரே ’ஜிங்கலாலா’தான்! அதுலயும் நார்த் இந்தியன் பொண்ணுங்க பாக்குறதுக்கு...

இருங்க மூச்சு வாங்குது... ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக். ஐ வில் பி பேக்!

ஆங்... நார்த் இந்தியன் பொண்ணுங்க எல்லாம் சேட்ஜி வீட்டு சேஃப்டி லாக்கர் மாதிரி இருந்தாங்க. குலுமணாலி, சிம்லானு டிராவல் பண்ணா கசக்குமா? ‘இதான்டா உனக்கு சொர்க்கம்... டிரைவர் அண்ணன் மனசுல இடம் பிடிக்கணும்!’னு சின்சியரா லாரியில காத்து இருக்கானு செக் பண்றது, ஸ்டெப்னி மாத்துறது, எலுமிச்சம்பழம் தொங்கவிட்டு பூஜை போடுறதுனு ஆல்பெர்ஃபாமன்ஸும் பண்ணேன். 29 நாள் ஆச்சு. வீட்ல பையனைக் காணோம்னு தேடிட்டு இருக்காங்க. எனக்கு அந்த நெனைப்பே வரலை. டிரைவர் அண்ணனுக்கு என்னை பிடிச்சுப் போச்சு. ஆனா, ஏன் பிடிச்சதுனு ட்விஸ்ட் இருக்கு. வெயிட் ப்ளீஸ்!

ஒருமழை நாள்... தார்ப்பாய் ஒழுங்கா கட்டியிருக்கானு செக் பண்ணலாம்னு டாப்புல ஏறுனா... வாங்குன கடனுக்காக என்னை ஒருத்தர்கூட அனுப்ப லாரிக்கு கீழே நின்னு யார்கிட்டயோ பிளான் போட்டுட்டு இருந்தார் டிரைவர். இதுக்கு மேல இருந்தா கிட்னி சட்னியாகிடும்னு தெறிச்சு ட்ரெயின் புடிச்சு சென்னை வந்தேன். கொடைக்கானல் போகணும். கையில துட்டு நஹி. பஸ்ல ஏறி கண்டக்டரைப் பார்த்ததும் தாரைதாரையா அழுகை வந்திருச்சு. அவர் ரஜினி ஃபேன் போல! இரக்கம் உள்ள மனசுக்காரரா ஊருல இறக்கி விட்டாரு. இறங்குனதும் அப்பாவுக்கு தெரிஞ்சவரோட ஹோட்டலுக்கு தாவி... சொன்னா நம்ப மாட்டீங்க. அன்னிக்கு 42 இட்லி சாப்ட்டேன். ஆங்... வீட்டுக்குப் போனதும் அப்பாவும் அம்மாவும் எதுவுமே திட்டாம என்னை அமைதியா விட்டுட்டாங்க.
அப்புறம் டுடோரியல் காலேஜ்ல சேர்ந்து 3 வருஷம் கழிச்சு பத்தாவது பாஸ் பண்ணேன். அப்போலாம், ‘நீ என்னவாக போறே?’னு யாராவது கேட்டா... ‘நான் சூப்பர் ஸ்டார் மாதிரி ’ஸ்டார்’ ஆகப்போறேன்’னு சொல்வேன். தலைவரோட வசனத்தைதான் ரைம்ஸ் மாதிரி சொல்வேன். இதோ இப்ப மொபைல் வால்பேப்பர், ரிங்டோன் எல்லாமே தலைவர் மயம்.

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'
‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

வெறும் கனவு மட்டும் போதுமா? என் கனவுக்கு உருவம் கொடுத்தது... ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி!

அதைப்பத்தி.......

ஹோ... ஸாரி பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். டைம் ஆயிடுச்சாம்... நம்ம லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் அடக்கி வாசிக்கச் சொல்றாரு. மீதியை அடுத்த புக்ல சொல்றேன். கூடிய சீக்கிரம் என்னோட `உறுமீன்' ரிலீஸாகப் போகுது பார்த்திட்டு சொல்லுங்க. எங்கேயும் போயிடாதீங்க... வர்ற நவம்பர் 3-ம் தேதி மீட் பண்றேன்.

ஸீ யூ... பை பை!

மீட்: பொன்.விமலா, எஸ்.கே.பிரேம் குமார்,  ஐ.மா.கிருத்திகா, 
படங்கள்:  சொ.பாலசுப்ரமணியன், க.சர்வின்,  பா.அபிரக்‌ஷன், ச.பிரசாந்த்