Published:Updated:

``அக்காவுக்குப் பெரிய டஃப் கொடுக்கப்போறேன்!" சிங்கர், டப்பிங் ஆர்டிஸ்ட் சகோதரிகள் மானஸி, மோனிஷா

``அக்காவுக்குப் பெரிய டஃப்  கொடுக்கப்போறேன்!" சிங்கர், டப்பிங் ஆர்டிஸ்ட் சகோதரிகள் மானஸி, மோனிஷா
``அக்காவுக்குப் பெரிய டஃப் கொடுக்கப்போறேன்!" சிங்கர், டப்பிங் ஆர்டிஸ்ட் சகோதரிகள் மானஸி, மோனிஷா

``அக்காவுக்குப் பெரிய டஃப் கொடுக்கப்போறேன்!" சிங்கர், டப்பிங் ஆர்டிஸ்ட் சகோதரிகள் மானஸி, மோனிஷா

"பின்னணிப் பாடகியாகும் கனவோடு சினிமாவில் களம் இறங்கினேன். அந்த எண்ணம் நிறைவேறிடுச்சு. நான் எதிர்பார்க்காத டப்பிங் ஃபீல்டிலும் ஹிட்ஸ் கொடுக்கிறேன். 'ரெண்டு லட்டு திங்க ஆசையா' என்கிற மாதிரி கரியர் சூப்பரா போயிட்டிருக்கு" - உற்சாகமாகப் பேசுகிறார், பின்னணிப் பாடகி மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் மானஸி. இவர், தன் தங்கை மோனிஷாவுடன் இணைந்து வெளியிடும் பாடல்கள், சமூக வலைதளத்தில் செம வைரல். 

``தங்கையுடன் இணைந்து பாடும் ஐடியா எப்படி ஏற்பட்டுச்சு?" 

"நாங்க ரெண்டு பேரும் இளையராஜா சாரின் பெரிய ஃபேன்ஸ். வீட்டுல ஒண்ணா இருக்கும்போது, அவரின் பாடல்களைப் பிராக்டீஸ் பண்ணுவோம். அப்படி 'தும்பே வா தும்பக்குடத்தின்' என்கிற மலையாளப் பாடலின் இந்தி வெர்ஷனைப் பாடி, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணினோம். அடுத்து, 'காற்றில் வரும் கீதமே' பாடல். இந்த ரெண்டு வீடியோவும் பலரால் பாராட்டப்பட்டுச்சு. அடுத்து, 'கடலோரக் கவிதைகள்' படத்தில் வரும் 'அடி ஆத்தாடி', 'ஏதோ மோகம்' பாடல்களை ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் நின்னு மாறி மாறிப் பாடுற மாதிரி வீடியோவை அப்லோடு பண்ணினோம். அது பெரிய வைரலாகி, பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது.'' 

"வீட்டில் நீங்க ரெண்டு பேர் மட்டும்தான் இசைத் துறையைச் சார்ந்தவர்களா?" 

"கல்யாணத்துக்கு முன்னாடி வரை மியூசிக்ல கவனம் செலுத்திட்டிருந்த அம்மா, அப்புறமா வெளி நிகழ்ச்சிகளில் பாடறதை நிறுத்திட்டாங்க. ஆனால், எனக்கும் தங்கச்சிக்கும் மியூசிக் கத்துக்கொடுத்தாங்க. நாங்க மூணு பேரும் ஒண்ணா இருந்தால், நிறைய ரிகர்சல் பண்ணுவோம். வீட்டுக்குள்ளேயே சூப்பரா கச்சேரி பண்ணுவோம்." 

"சிங்கிங், டப்பிங் கரியர் எப்படிப் போகுது?" 

" 'ஸ்டைலிஸ் தமிழச்சி (ஆரம்பம்)', 'கட்டிக்கிட (காக்கிச்சட்டை)', 'ஆட்டுக்காரி மாமன் பொண்ணு (தாரை தப்பட்டை) ', 'எங்கதான் பொறந்த (வாலு)', 'வெறியேற (விவேகம்)' உள்பட பல ஹிட் சாங்க்ஸ் பாடியிருக்கேன். எதிர்பாராமல் கிடைச்ச டப்பிங் வாய்ப்புகளால், என் சினிமா கரியர் பலம் பெற்றிருக்கு. தமன்னா, த்ரிஷாவுக்கு ரெகுலரா டப்பிங் கொடுக்கிறேன். த்ரிஷாவின் 'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை' மற்றும் தமன்னாவின் 'ஸ்கெட்ச்', ஆண்ட்ரியாவின் 'விஸ்வரூபம் 2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு வெயிட்டிங். சமந்தாவுக்குப் பேசினதில் 'அஞ்சான்' பெரிய ரீச் கொடுத்துச்சு.'' 

"தங்கள் படத்தின் டப்பிங் பற்றி த்ரிஷா, தமன்னா ஏதாச்சும் ஃபீட் பேக் கொடுப்பாங்களா?" 

"தன் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, த்ரிஷா மேம் எனக்கு போன் பண்ணி பாராட்டுவாங்க. 'மானஸி வாய்ஸ் எனக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கு. அவங்களையே டப்பிங் பேசச் சொல்லுங்க'னு டைரக்டர்களிடம் தமன்னா சொல்வாங்க.'' 

"டப்பிங் பணிகளால், பாடுவதில் முழு கவனம் செலுத்தமுடியுதா?" 

"நிச்சயமா முடியுது. என் பிரதான இலக்கு பாடுவதுதான். நிறைய ஹிட்ஸ் கொடுத்திருக்கேன். ஒரு ஃபீல்டு மூலமா இன்னொரு ஃபீல்டுக்கு வாய்ப்பு கிடைக்குது. இப்போ, டப்பிங் ஆர்டிஸ்டுகளுக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது ரொம்பவே சந்தோஷமான விஷயம்" என்கிறார் மானஸி. 

"நானும் பின்னணிப் பாடகி அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட். என் வளர்ச்சியில் அக்காவின் பங்களிப்பு ரொம்பவே அதிகம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இன்னும் நிறைய வீடியோக்களை வெளியிடத் திட்டம் போட்டிருக்கோம்" - புன்னகையுடன் பேசுகிறார் மோனிஷா. 

"உங்க இசைப் பயணம் எப்போது தொடங்கியது?" 

"அக்கா மியூசிக் கத்துக்கிறதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துச்சு. மியூசிக் கிளாஸ் போனதோடு, அக்காவிடமும் கத்துக்கிட்டேன். மும்பையில் இருந்த சமயம், சன் டிவியின் 'அதிரடி சிங்கர்' போட்டியில் அக்கா டைட்டில் வின் பண்ணினா. அவள் கரியருக்காக சென்னைக்கு ஷிஃப்ட் ஆனோம். அப்போ, நானும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகிட்டேன். எனக்கும் இதுதான் கரியர்னு முடிவு பண்ணினேன்." 

"டப்பிங் வாய்ப்புகள் எப்படிக் கிடைச்சுது?" 

'' 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்', 'தில்லுக்குத் துட்டு' உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கேன். ஒருமுறை 'நிர்ணயம்' படத்துக்கு நானும் மானஸியும் பாடப்போயிருந்தோம். 'உங்க ரெண்டு பேரின் வாய்ஸூம் நல்லாயிருக்கு. டப்பிங் டிரைப் பண்ணிப் பாருங்க'னு டைரக்டர் சொன்னார். அந்தப் படத்தில் நாயகிகளுக்கு நாங்க டப்பிங் கொடுத்தோம். 'என்னை அறிந்தால்' (பார்வதி)', 'தர்மதுரை (சிருஷ்டி டாங்கே)' உள்ளிட்ட பல படங்களில் டப்பிங் பேசினேன். ஆனாலும், எங்க பாடல் வீடியோவைப் பார்த்துதான் என்னைப் பற்றி பலருக்கும் தெரிஞ்சிருக்கு." 

"உங்களுக்குள் யார் பெஸ்ட் என்ற போட்டிகள் ஏற்படுமா?" 

"ஹிட்டான பாடலைப் பாடினாலும், அதை எப்படிப் புதுமையா கொடுக்கலாம்னு நிறைய பிளான் பண்ணுவோம். அவங்கவங்க போர்ஷன் பெஸ்டா இருக்க மெனக்கெடுவோம். எங்களுக்குள் செல்லப் போட்டிகள் நிறைய இருக்கும். அப்படித்தான் சேர்ந்து பாடி, அதை சோஷியல் மீடியாவில் ரிலீஸ் பண்ணினோம். நிறைய பாராட்டுகள் கிடைக்குது. இப்போ, ரெண்டு பேரும் ஹிந்துஸ்தானி கத்துக்கிட்டிருக்கோம். எம்.பி.ஏ., படிப்பு முடிஞ்சதும், அக்காவை மாதிரி முழு நேரமா சிங்கிங், டப்பிங்ல கவனம் செலுத்துவேன். அப்போ, அக்காவுக்குப் பெரிய டஃப் கொடுக்கப்போறது நான்தான்" எனப் புன்னகைக்கிறார் மோனிஷா.

அடுத்த கட்டுரைக்கு