Published:Updated:

“ ‘இத்தனை படம் பண்ண பிறகும், கண்டக்டர் வேலையை ஞாபகப்படுத்துறீங்களே’ன்னார் ரஜினி!” - மதன் கார்க்கியின் 2.0 அனுபவம் #2Point0 #VikatanExclusive

“ ‘இத்தனை படம் பண்ண பிறகும், கண்டக்டர் வேலையை ஞாபகப்படுத்துறீங்களே’ன்னார் ரஜினி!” - மதன் கார்க்கியின் 2.0 அனுபவம்  #2Point0 #VikatanExclusive
“ ‘இத்தனை படம் பண்ண பிறகும், கண்டக்டர் வேலையை ஞாபகப்படுத்துறீங்களே’ன்னார் ரஜினி!” - மதன் கார்க்கியின் 2.0 அனுபவம் #2Point0 #VikatanExclusive

பைந்தமிழ் ஆனாலும் சரி, பண்டைய தமிழ் ஆனாலும் சரி... தனது வரிகள் மூலம் ரசிகர்களுக்குப் புது உற்சாகம் தருபவர், கவிஞர் மதன் கார்க்கி. பேட்டிக்கான அனைத்துக் கேள்விகளுக்கும், கவிதை நடையில் பதில் வருகிறது அவரிடம்...

“நீங்கள் எப்படி வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் இரட்டை சவாரி செய்கிறீர்கள்?”

“நான் இன்னும் நிறைய பாதைகளில் பயணிச்சுட்டு வர்றேன். ஆஸ்திரேலியாவை விட்டுட்டு இந்தியா வரும்போது என்னோட பிளஸ் மைனஸை நானே அனலைஸ் பண்ணி, முப்பது ஐடியாக்களோட வந்தேன். அந்தப் பட்டியல்ல முதல்ல இருந்து 'ஆசிரியர்' பணி. அது, இந்தியா வந்தவுடனேயே எனக்கு அமைஞ்சிடுச்சு. பிறகு, திரைத்துறையில் பாடல்கள், வசனம் எழுதணும்னு ஆசைப்பட்டேன். அதுவும் சிலநாள்களிலேயே சாத்தியம் ஆச்சு. இதுமாதிரி நிறைய விஷயங்கள் முயற்சி பண்ணிப் பார்க்கணும்னு இருக்கேன். எல்லாம் ஒண்ணு ஒண்ணா பண்ணிக்கிட்டு இருப்பேன்.” 

“ ‘2.0’ படத்துக்குப் பாடல் எழுதிய அனுபவம்?" 

“ஆக்சுவலா, '2.0' படத்தை பாடலே இல்லாமதான் ஆரம்பிச்சார் இயக்குநர் ஷங்கர் சார். போகப்போக 'இந்திரலோகத்து சுந்தரியே...' பாடல் படத்துக்குத் தேவைப்பட்டது. இரண்டு எந்திரங்களுக்குக் இடையே காதல் வருது... அதை, எப்படித் தங்களுக்குள் பரிமாறிக்கொன்றன, என்பதுதான் அந்தப் பாடல். இந்தப் பாட்டுக்காக நிறைய தூரம் பயணப்பட்டோம். ரஹ்மான் சார் நிறைய டியூன்ஸ் போட்டுக் கொடுத்தாரு. அதுலதான் இந்த டியூனைத் தேர்ந்தெடுத்து நிறைய விதமாக முயற்சி செய்து கடைசியாக இந்தப் பாடலை எழுதினேன். அந்தப் பாடலை ஒருநாள் ரஜினி சாருக்குப் போட்டுக் காட்டினோம். அதில் ஒரு வரி, ‘சுத்தம் செய்த டேட்டா... உன்னை ஊட்டி விடட்டா.. உன்வசம் கண்டக்டர் 'னு வரும். இதைக்கேட்ட ரஜினி சார், "இத்தனை படம் பண்ணிட்டேன், இத்தனை பேர்கூட நடிச்சிட்டேன்... இன்னும் இந்தக் கண்டக்டர் வேலையை ஞாபகப்படுத்திட்டு இருக்கீங்களே?'னு சிரிச்சுக்கிட்டே சொன்னார், ரஜினி சார். உடனே நான், 'சார், இந்த வரிக்கு அது அர்த்தம் இல்ல... கண்டக்டர்னா USB. அது வழியாதானே டேட்டாக்கள் எல்லாம் கடத்தப்படும்'னு விளக்கம் சொன்னேன். ஆனாலும், ரஜினி சார் சொன்னதுக்கும் அந்த வரிகள் நல்லாவே செட் ஆகுது."

" 'உயிரே உயிரே...' பாடல் பற்றி?"

"அது திட்டம் போட்டுப் பண்ணினதுதான். இந்தப் பாட்டை ரோபோவோட மட்டும் பொருத்திப்பார்க்காம, பொதுவா பொருத்திப் பார்க்குறமாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சப்போதான், மொபைல் போன் பேட்டரி ஞாபகம் வந்துச்சு. ஒரு எந்திரம் இன்னொரு எந்திரத்தை 'உயிரே' னு சொல்றப்போ அடிக்கிற மாதிரி இருக்கும். ஆனால், இந்த பேட்டரியோட தொடர்பு படுத்திப் பார்க்கும்போது நல்லா இருக்குது."

“நீங்கள் வசனம் எழுதும் படங்கள் அனைத்தும் பெரிய படங்களாகவே இருக்கின்றதே?"

“நான் தனியா வசனம் எழுதிய ஒரே படம் 'பாகுபலி' மட்டும்தான். மற்ற படங்கள் எல்லாம் இணைந்து செய்ததாக இருக்கும். 'எந்திரன்' படத்துல சுஜாதா சார், ஷங்கர் சாரோட சேர்ந்து நானும் வசனம் எழுதினேன். அந்தப் படத்தின் பெரும்பாலான வசனங்களை சுஜாதா சார்தான் எழுதியிருந்தார். நான் சின்னச் சின்ன வசனங்கள்தான் எழுதினேன். கிளைமாக்ஸ் காட்சி எழுதுவதற்கு முன்பு சுஜாதா சார் தவறிட்டாரு. நான்தான் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு வசனம் எழுதினேன். 'நண்பன்' படத்துக்கும் நான்தான் எழுதினேன். ஆனால், அது ரீமேக் பண்ண படம். அதனால, முழு உரிமையை நான் எடுத்துக்க முடியாது. பிறகு இயக்குநர் கோகுலோடு இணைந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துக்கு வசனம் எழுதினேன்."

"திரைப்படப் பாடல்கள் எழுதுவதைத் தாண்டி, வேறு பாடல்கள் எழுதியிருக்கிறீர்களா?"

"எங்கேயாவது பயணம் செல்லும்போது திடீரென்று ஒரு வரி தோன்றும். சில சமயங்களில் முழு பாடல்களும் தோன்றும். அப்போது நான் அந்தப் பாடல்களையெல்லாம் ஒலிப்பதிவு செய்துகொள்வேன். வீட்டுக்கு வந்த பிறகு அந்தப் பாடலை எழுதி வைத்துக்கொள்வேன். இதையெல்லாம், திரைப்படங்களுக்குக் கொடுக்காமல் தன்னிசைக்கு ஒரு வங்கி போல வைத்துக்கொள்வேன். இனிமேல்தான் அதையெல்லாம் திரைப்படங்களுக்குக் கொண்டுபோகணும்."

"அந்தப் பாடல்களையெல்லாம் உங்களிடம் யாராவது கேட்டிருக்கிறார்களா?"

"இந்தப் பாடல் வங்கியில் உள்ள சிக்கல்கள் என்ன?"

"உங்களுக்கு இயக்குநராகும் எண்ணம் இருக்கிறதா?"

"நீங்கள்  கண்ட கனவை அடைந்துவிட்டீர்களா?"

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. அதை, இந்த வீடியோ இணைப்பில் பார்க்கலாம்.