அவள் 16
Published:Updated:

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

ட, யாருப்பா அது இன்னும் ஆரம்பிக்கவே இல்லை... அதுக்குள்ள ராக்கெட்டை என்மேல

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

திருப்பிவிட்டது? என்னது... ஓவரா பேசினா `ஆட்டம் பாம்’மை அடியில வெப்பீங்களா? சரிசரி... சண்டைனா சட்டை கிழியிறதும், தீபாவளினா காலுக்குக் கீழே வெடிவைக்கிறதும் சகஜம்தானே! ஒண்ணும் பிரச்னை இல்லை.  ஆங்... முக்கியமான விஷயம். பார்த்து நிதானமா பட்டாசு கொளுத்தி என்ஜாய் பண்ணுங்க. எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! 

ரைட்டு. நான்  மேட்டருக்கு வரேன் ஃப்ரெண்ட்ஸ்!
லாங் லாங் எகோ... இதேபோல அழகான ஒரு தீபாவளிதான் என் வாழ்க்கையை மாத்திப்போட்டுச்சு. தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துறது தெரியும். ஆனா, ஏரியா விட்டு ஏரியா போய் பட்டாசு கொளுத்தி பல பேரை தூங்கவிடாம பண்ணுறதுதான் அப்போ என்னோட வேலையா இருந்துச்சு. கேங்கா கிளம்புற என்னைப் பார்த்து ‘ஏழு கழுத வயசாச்சு... பொறுப்புனா என்னன்னு தெரியுமாடா?’னு அம்மா கேட்டா, ‘இந்த சாம்பாருக்குப் போடுவாங்களே... அதுவா மம்மி?’னு மொக்கை கொடுப்பேன்.

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

அப்போதான் கோயம்புத்தூர்ல நடக்கப்போற ‘நாளைய நட்சத்திரம்’கிற நிகழ்ச்சி பத்தி தெரிஞ்சது. என்னமோ மனசுக்குள்ள மணி அடிச்சுச்சு. அம்மா கேட்ட ‘ஏழு கழுத வயசாகுது... பொறுப்புன்னா என்னனு தெரியுமாடா?’ங்கிற கேள்வி மனசுக்குள்ள சுர்ர்ன்னு கம்பி மத்தாப்பை கொளுத்தி வெச்ச மாதிரி ரிப்பீட் மோட்ல கேட்டுச்சு. தீபாவளி கொண்டாடின கையோட கோவையில லேண்ட் ஆகிட்டேன். அங்கே கலந்துக்க வந்திருந்த ஒவ்வொருத்தரும் நடிக்கிறத பாத்தப்ப மெரசல் ஆகிட்டேன். ‘டேய் பாபி... சூதனமா இருந்துக்கோடா... இதவிட்டா உனக்கு வேற வாய்ப்பு நஹிடா’னு எனக்கு நானே தட்டிக் கொடுத்துக்கிட்டேன். சிவாஜி. கமல், ரஜினி ஆக்ட்டிங்கை மிக்ஸில அடிச்சு புது வெரைட்டில நடிச்சுக் காட்டினேன் (இந்த இடத்துல நீங்க என்னை டவுட்டா பாக்கணும்! :-) வெளிய வந்தா...’யூ ஆர் செலக்டட்... உங்ககிட்ட நடிப்பு இருக்கு’னு ஒரு சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. ‘பொழைச்சிப்போம்’னு மனசுல தெம்பு வந்து ‘சென்னைக்கு வண்டிய விடுறோம்... சூப்பர் ஸ்டார் ஆகுறோம்’னு பொட்டியைக் கட்டுனேன்.

2005 ஜூன் 10 - இது என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத நாள். சினிமாவ மட்டுமே நம்பி சென்னைக்கு வந்து சேர்ந்த நாள்! கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்துல தங்கினேன். சாப்பாட்டுக்கே வழியில்லாம சமயங்கள்ல வெறும் பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு நாட்களை நகர்த்தியிருக்கேன். கடைசியில அதுக்கும் வழியில்லாம ஐசிஐசிஐ இன்ஷூரன்ஸ் கம்பனியில வேலைக்குச் சேர்ந்தேன். நினைச்சா வேலைக்குப் போவேன். இல்லாட்டி கட்தான். இப்படியே நாட்கள் நகர்ந்துச்சு. நடுவுல கூத்துப்பட்டறையில மூணு மாசம் பயிற்சி எடுத்தேன். அப்பதான் ஒரு மகான் என் லைஃப்ல என்ட்ரி கொடுத்தார்.

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

அவரைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி தண்ணி குடிச்சுக்குங்க!

‘சீரியல்ல நடிக்கணும்னா 5 ஆயிரம்!’ ‘படத்துல நடிக்கணும்னா 10 ஆயிரம்!’னு எல்லாத்துக்கும் ஷார்ட்கட் ரூட் இருக்குனு சொன்னார். எப்படியாச்சும் சினிமாவுக்கும் போகணும்னு மனசுக்குள்ள அவா... அதனால பணத்தை இழந்தேன் பல தபா! என் கை இருப்பு பணம் காலி ஆனதுக்குக் காரணகர்த்தாவே அந்த மகான்தான்! ஒருநாள் அவர் போன் போட்டு ஒரு டைரக்டர்கிட்ட பேசச் சொன்னார்... டைரக்டர்கிட்ட  பேசினேன்.  

‘வீட்டுக்கு முன்னாடி முருங்கை மரம் இருக்கா?’

‘ஆங் இருக்கு சார்.’

‘பக்கத்துல ஒருத்தன் குறுகுறுன்னு பாக்குறானா?’

‘இல்ல சார்...’

‘அடேய் சினிமா போஸ்டர்ல பாருடா?’

‘ஆமா சார்... ஒரு ஆள் போஸ் குடுத்துட்டு இருக்கான்...’

‘ரைட்டு..! அதுக்குப்பக்கத்துல இருக்குற கதவை தட்டுப்பா..!

கதவை தட்டுனா... உள்ள இருந்து வந்தார் ஒருத்தர். பார்க்குறதுக்கு கொஞ்சம் மெலிஞ்சு தம்பி ராமய்யாவோட தம்பி மாதிரி இருந்தார். பனியன்லகூட ரெண்டு ஓட்டை இருந்துச்சு. என்னைக் குறுகுறுனு பார்த்த அவர் புருவம் உயர்த்தி, ‘நீங்கதான் என்னோட ஈஸ்வர்’ன்னார்.

‘சார்... நான் பாபி!’’

‘தெரியும்டா படவா... இத்தனை நாள் உன்னை மாதிரி ஒரு ஹீரோவுக்காகத்தான் ஸ்கிரிப்ட்டோட காத்துட்டு இருந்தேன். எங்கேடா போனே?’னு உரிமையா கன்னத்தைக் கிள்ளினார். எனக்கு றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருந்துச்சு.

‘செகண்டு ஹீரோதான். ஆனா, காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் மாதிரி பவர்ஃபுல் ரோல்டா!’ - அவர் சொல்லச் சொல்ல... பாரதிராஜா பாட்டுல வர்ற ஏஞ்சல்ஸ் என்னைச் சுத்தி டான்ஸ் ஆடுற மாதிரி இருந்துச்சு.

‘டேய் பாபி... சுக்கிரன் உனக்கு உச்சத்துல இருக்காண்டா’னு மனசுக்குள்ள மெர்குரி பல்ப் எரிஞ்சது. கிளம்புறப்போ பைக் ஸ்டார்ட் பண்ணா... `தம்பி, கொஞ்சம் நில்லுப்பா’ன்னார் அந்த மகான்.

திரும்பினேன்.

‘சேஞ்ச் இருக்குமா?’

‘எவ்ளோ வேணும் சார்... 30 ரூபாவா 40 ரூபாவா?’

‘ஃபைவ் ஹண்ட்ரட் ப்ளீஸ்’னார்

பாக்கெட்ல இருந்த மொத்த பணத்தையும் துடைச்சிக் கொடுத்துட்டு அப்டியே அந்த ஸ்மைலை மட்டும் மெயின்டெயின் பண்ணிக் கிளம்பி வந்தேன். அன்னிக்கு நைட் செம பார்ட்டி. இந்த முறையும் `குடி குடியை கெடுக்கும்’ கேப்ஷன் போட்டுக்கோங்க. ஆனா, ஒரு ரகசியம் சொல்றேன். நான் ரொம்ப நல்ல பையன். நான் வெறும் மிராண்டா மட்டும்தான் குடிச்சேன். எப்பவுமே சைட் டிஷ் சாப்பிடுறது மட்டும்தான் என் வேலை (ரிப்போர்ட்டர் மேடம் ‘அவள் 16 ஆச்சே’னு எடிட்டிங்ல இதைத் தூக்கிடாதீங்க. அப்புறம் மம்மி என்னை அடிப்பாங்க. ஓ.கே-யா?)
மறுநாள் காலையில ஆபீஸ் போறேன். மேனேஜர் ‘ஏன் லீவு?’னு கோபமாக் கேட்டார். மனசுக்குள்ள எனக்கு செம காண்டு!

‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

‘எக்ஸ்யூஸ் மீ சார்... நான் இந்த வேலையை ரிசைன் பண்றேன். என்ன சொன்னீங்க... கொடுத்த வேலையை ஒழுங்கா பண்ண மாட்டேங்குறேனா? ஒரு எக்சல் ஃபைலைக்கூட எனக்கு ஓப்பன் பண்ணத் தெரியலைனு அந்த கொச்சின் பொண்ணு முன்னாடி அசிங்கப்படுத்துனீங்கள்ல... நான் இப்போ தனி ஆள் இல்லை. தமிழ் சினிமா என்னைத் தத்து எடுத்திருக்கு. புரியலையா? உங்கள் பாபி இப்ப ஒரு படத்தோட ஹீரோ!’ ரஜினி ஸ்டைல்ல ச்சும்மா முடியைக் கோதிக்கிட்டே சொன்னேன் பாருங்க. அவர் முகத்தை அவ்ளோ கோணலா அதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. பாவம் அந்த மேனேஜர்!

அப்புறம் மகான் மறுபடியும் போன் பண்ணி ஏவி.எம் வாசல்கிட்ட வரச் சொன்னார். ஏவி.எம்... சினிமா கலைஞர்களோட கனவுக்கோட்டை. ரொம்ப பெருமையோட அங்க போய் உலக உருண்டையைப் பார்த்தபடி நின்னேன். ‘சார் வந்துட்டேன்’னு சொன்னதும் ‘தம்பி அங்கே இல்ல... இங்கே... ஆங், ஸ்ட்ரெய்ட்டா உள்ளே வா!’னு அவர் கூப்பிட்ட இடம் கேம்பஸ் ஹோட்டல்! சோளாபூரி மாதிரி உப்பி இருந்த மனசு அப்பளம் மாதிரி டக்குனு நொறுங்கிப் போச்சு. அந்த ஹோட்டல்ல இருந்த அஞ்சாறு பேருக்கும் சேர்த்து அன்னிக்கும் நான்தான் பில் கட்டினேன்.
சாப்பிட்டு முடிச்சதும் செம பில்டப்போட ‘ஒரு வெயிட்டான ரோல் இருக்கு’னு சொல்லி ஷூட்டிங்க்கு கூட்டிட்டுப் போனார் மகான். ஹீரோ டயலாக் பேசிட்டு இருப்பார். நான் பக்கத்துல லக்கேஜோட கிராஸ் பண்ணி போயிட்டே இருக்கணும். இதான் ஸீன். சரி, ஃபிரேம்ல நாம ஹீரோவோட தெரிஞ்சா போதும். அதான் இருக்குல்ல செகண்ட் ஹீரோ வாய்ப்பு. அதுல பின்னிப் பெடல் எடுக்கலாம்னு சமாதானப்படுத்திட்டு அவர் செஞ்ச டார்ச்சர்ஸை பொறுமையா சகிச்சுக்கிட்டேன். அந்தப் படத்தோட உதவி இயக்குநர் ஒருத்தர் என்னைக் கூப்பிட்டார். தூரமா காலரைத் தூக்கி விட்டுட்டு நான் வாங்கிக்கொடுத்த கூல்ட்ரிங்ஸைக் குடிச்சுட்டு அங்க தூரமா இருந்த மகானைக் காட்டி, ‘தம்பி அந்த ஆளு செம ஃப்ராடு. நீங்க பண்றதுக்குப் பேரு அட்மாஸ்பியர். இதுக்கு பெட்ரோல் காசும் பேட்டாவும் கொடுப்பாங்க. ஆனா, அந்த ஆளு உங்கள வெச்சு வறுக்குறான். உஷாரா இருங்க!’னு சொல்லி அனுப்பிட்டார்.

ஷூட்டிங் முடிஞ்சதும் பயங்கர டென்ஷன்ல பசங்கள கூட்டிட்டு பாருக்குப் போனேன். வழக்கம் போலவே சைட் டிஷ் மட்டுமே சாப்ட்டுட்டு இருந்தேன். அந்த சமயம் பார்த்து அந்த மகான் உள்ளே வந்தார். ‘நாளைக்கு ஒரு ரோல் இருக்கு... மெயின் ரோல். 5 ஆயிரம் ரெடி பண்ணுங்க’னு சொன்னதும் ‘பளார்’னு விட்டேன். ‘இனி உன்ன எங்கயும் பாக்கக் கூடாது’னு துரத்திவிட்டேன். சினிமாவுல யாரை நம்பணும் நம்பக் கூடாதுன்னு எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சம்பவம் இதுதான். அதனாலதான் அந்த ஆளை மகான் மகான்னு சொல்றேன்.
அதுக்கப்புறம்தான் கார்த்திக் சுப்புராஜ், அல்போன்ஸ்புத்திரன், `காக்காமுட்டை’ மணிகண்டன், விஜய்சேதுபதி, நலன்குமாரசாமி, பாலாஜிமோகன்னு நல்ல நண்பர்களோட அறிமுகம் கிடைச்சது. எங்களோட கூட்டணி நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில ஹிட் அடிச்சதும் என்னோட லைஃப் தீபாவளி ராக்கெட் போல சர்ர்னு மேல பறந்துச்சு. என் வானம் ரொம்ப பெருசாச்சு. நான் சொல்ல மறந்த காதலும் தேசியவிருது வாங்குன அழகான தருணமும் இன்னமும் மிச்சம் இருக்குல்ல? அதை அடுத்த புக்ல நிச்சயம் சொல்றேன்.
அதுவரை...

ஒன்ஸ் அகெய்ன் விஷ் யூ ஹேப்பி தீபாவளி... ஸீ யூ பை பை!

மீட்: பொன்.விமலா, எஸ்.கே.பிரேம் குமார்,
ஐ.மா.கிருத்திகா,
 சொ.பாலசுப்ரமணியன், க.சர்வின்,
 பா.அபிரக்‌ஷன், ச.பிரசாந்த்

டேய் பாபி...சுக்கிரன் உனக்கு உச்சத்துல இருக்காண்டா!