Published:Updated:

"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க!"

- நெகிழ்கிறார் நடிகர் பிரபு

"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க!"

- நெகிழ்கிறார் நடிகர் பிரபு

Published:Updated:

ன்னக்குழிச் சிரிப்பில் கொள்ளையடிப்பவர், பிரபு! நடிகர் திலகத்தின் மகன் என்ற கௌரவ

"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க!"

அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர், 80-களின் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் முந்தியவர், இப்போது தன் மகன் விக்ரம் பிரபு நடிக்க ஆரம்பித்த பின்னும், இன்னும் ‘வான்டட்’ ஆக கோடம்பாக்கத்தில் வலம்வந்து கொண்டிருக்கும் செல்ல சீனியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மூன்று தலைமுறைகளா எங்க சினிமா குடும்பத்தை ஆதரிச்சுட்டு வர்ற தமிழ்க் குடும்பங்களின் அன்புதான் எங்க பலம்!’’ - பிரபுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் போர்த்தியிருந்தது பணிவு.

"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க!"

‘‘அப்பா நடிச்ச ‘சங்கிலி’ படத்தில்தான் அறிமுகமானேன். எந்தத் துறைனாலும் பிரபலங்களின் பிள்ளைகளுக்கு எப்பவுமே ஒரு பிரச்னை இருக்கும்... `அப்பா பெயரைக் கெடுக்காம இருக்கணுமே’னு! ஏன்னா, அவங்களோட ஒவ்வொரு அசைவும் அவங்க அப்பாகூடதான் ஒப்பிடப்படும். அப்படித்தான் ‘சிவாஜி பிள்ளையாமே’னு தமிழ்நாடே என்னைக் குறுகுறுனு பார்த்துச்சு. அடுத்த படம் கிடைக்குமாங்கிற பிரச்னை இல்லாம, நான் முதல் படத்தில் அறிமுகமானப்போவே என் கையில் ஆறு படங்கள் இருந்துச்சு. ஆனா, அந்த வாய்ப்புகள் எல்லாம் நடிகர்திலகத்தின் பையனுக்குத்தரப்பட்டவைதான்; பிரபுவுக்கு இல்ல.

1981-ம் வருஷம். சாருஹாசன் அண்ணன் இயக்கத்தில் ‘புதிய சங்கமம்’ படத்தில் வாகை சந்திரசேகர் ஹீரோ, சுஹாசினி ஹீரோயின், நான் வில்லன். அதுதான் முதன் முதலில் நான் அவுட்டோர் போன படம். மரக்காணத்தில் ஷூட்டிங். என்னைப் பார்த்துக்க மேக்கப்மேன் பாண்டியனை அப்பா அனுப்பி வெச்சார். அப்போ அங்க ஹோட்டல் எல்லாம் இல்ல. நாலு குடிசைகள் போட்டுத் தந்தாங்க. நானும் சந்திரசேகரும் மணல்ல ஜமுக்காளம் விரிச்சுப் படுத்திருப்போம். காலையில முழிக்கும்போது எங்களைச் சுத்திப் பத்துப் பேரு வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்க. என்னை யாருக்கும் தெரியாது. சந்திரசேகருக்கு வந்த கூட்டம் அது.

மரக்காணத்தில் இருந்து அப்படியே திருவண்ணாமலைக்கு ‘கோழி கூவுது’ ஷூட்டிங்குக்குப் போவேன். ‘பாவலர் பிரதர்ஸ்’ தயாரிப்பு, கங்கை அமரன் அண்ணன் டைரக்‌ஷன், ராஜா அண்ணன் மியூஸிக், நிவாஸ் சார் கேமரா, சில்க் சுமிதா, சுரேஷ், விஜினு நல்ல காம்பினேஷன் எனக்குக் கிடைச்சது. ஆரம்பத்தில் எல்லோரும் எங்கிட்ட ‘சிவாஜி சார் பையன்’னு தயங்கித் தயங்கிப் பழகுவாங்க. நான் ஹாஸ்டலில் படிச்சு வளர்ந்ததால எல்லார்கிட்டயும் பேசி, எல்லாரையும் பேச வெச்சிடுவேன்!’’  -  சினிமாத் துறையில் தன் கத்துக்குட்டி நாட்கள் பற்றிச் சொல்லும்போது, குதூகலம் பிரபு குரலில்.

‘‘என் படங்கள் வெற்றிப் படங்களானப்போ அப்பா பாராட்டுவார்னு பார்த்தா, ‘நான் வசனம் பேசினா தமிழ் தெறிக்கும். நீ என்னடா தமிழ் பேசுற?’னு சொல்வார். ‘என்னப்பா பண்றது... கான்வென்ட்ல படிச்சதால’னு நான் முடிக்கிறதுக்கு முன்னாடி, ``நான் கான்வென்ட்ல படிச்சிருந்தா உன்னைவிட நல்லா இங்கிலீஷ் பேசியிருப்பேன்!’னு அதட்டுவார்... கப்சிப்!’’ என்றவர், தன் சமகால ஹீரோக்கள் பற்றிப் பேசினார்...

‘‘ரஜினி சார், கமல் சார், கார்த்திக், விஜயகாந்த் சார், சத்யராஜ்னு எல்லோர்கூடவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ஸ் பண்ணியிருக்கேன். எல்லோருமே எனக்கு சகோதரர்கள் போலதான். ரஜினி சாரும், கமல் சாரும் எங்க வீட்டு மூத்த பிள்ளைங்க மாதிரி. என்ன விசேஷம்னாலும் அண்ணன்கள் ஸ்தானத்தில் முன்னாடி வந்து நிப்பாங்க. என்னை அப்படிப் பார்த்துப்பாங்க! ‘குருசிஷ்யன்’ படம் மைசூரில் ஷூட். ரஜினி சாருக்கு 2 மணிக்கே ஷூட்டிங் முடிஞ்சுட்டாலும், 5 மணி வரைக்கும் எனக்காகக் காத்திருப்பார். ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி சார் படுத்திருப்பார், நான் சண்டை போட்டு அவரைக் காப்பாத்துற மாதிரி ஸீன் இருக்கும்.

"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க!"

‘பிரபு என்னை நம்பி வந்திருக்கார். அவர் பண்ணட்டும்!’னு டைரக்டர்கிட்ட சொல்லுவார் அந்த சூப்பர் ஸ்டார்!

கமல் சார், எங்க அண்ணன் ராம்குமாருக்கும் ரொம்ப க்ளோஸ். அவர் நம்மளைத் தட்டிக்கொடுத்துட்டு மட்டும் இருக்க மாட்டார், டிரில் வாங்கியாச்சும் நம்ம திறமையையும் வெளிப்படுத்த வெச்சிடுவார். ‘வானமென்ன...’ பாடலில் அவரும் நானும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்போம். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன்னு நினைச்சிருந்தேன். கமல் சார் கூட ஆடும்போதுதான் உண்மை புரிஞ்சது. நான் தனியா ஆடினப்போ எல்லாம் கிடைக்காத பெயரை, ‘கமலுக்கு ஈக்குவலா ஆடிட்டாரே’னு பேசவெச்சு பாராட்டுகள் வாங்கிக் கொடுத்தவர்!’’ - தன் ஹீரோயின்ஸ் பற்றியும் தொடர்ந்தார் இந்த ஸ்மார்ட் ஹீரோ...

‘‘80-90ல் நிறைய ஹீரோயின்ஸோட நடிச் சிருந்தாலும், பிரபுவுக்கு பெஸ்ட் ஜோடினா... குஷ்பு, ராதா, ராதிகானு சொல்வேன். ஒரு முக்கியமான ஹீரோயினைப் பத்தியும் சொல்லணும். அவங்க என் ஹீரோயின் இல்ல. தமிழ் சினிமா வரலாற்றின் ஹீரோயின். ஆச்சி மனோரமா. ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துல, ‘அடுத்த ஜென்மம் இருந்தா நீங்க அண்ணனா பொறக்கணும், நான் தங்கச்சியா பொறக்கணும்னு’னு ஆச்சி சொல்வார். அதுக்கு அப்பா, ‘லூசு’னு சொல்வார். ஆச்சி, ‘ஏன்?’னு கேட்க, ‘இப்போவே அப்படித்தானே இருக்கோம்’னு சொல்லுவார். அது உண்மை. அப்பாவோட கூடப்பிறந்த தங்கச்சி பத்மாவதி. அடுத்து எங்களுக்கு ஆச்சிதான்!’’ என்று உள்ளத்தில் இருந்து அன்பு சொல்லும் பிரபு, இரண்டு வருடங்களில் 14 படங்கள் வெளியாகி, அதில் 12 படங்கள் ஹிட் அடித்த ஒரே ஹீரோ என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதுவரை 67 புதுமுக இயக்குநர்கள். இவர் படங்களின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்கள். மூன்று தலைமுறைகளாக சினிமா குடும்பமாக இருக்கும் தன் வீட்டின் இயல்பு சொன்னார்...

‘‘எம்.ஜி.ஆர், கலைஞர், முத்துராமன், நாகேஷ் எல்லாரையும்... `பெரியப்பா', `அங்கிள்'னு உறவு சொல்லிதான் கூப்பிடப் பழக்கினார் அப்பா. அவங்க எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்ளோ அன்பா, அந்நியோன்யமா இருப்பாங்க. அப்பா பரபரப்பா நடிச்சுட்டு இருந்தப்போ, அவருக்கு வீட்டைப் பார்த்துக்க நேரமிருக்காது. எங்க அம்மா குறை எதுவும் இல்லாம அதை தன் அன்பாலயும், பொறுப்பாலயும் ஈடு கட்டினாங்க. எங்களுக்கும், எங்க சித்தப்பா பிள்ளைங்களுக்கும் அப்பாகிட்ட வித்தியாசமில்லை. வீட்டுக் குழந்தைகள் எல்லோரும் ஹாஸ்டலில் தங்கி படிச்சோம். எங்களுக்கு லீவு நாட்களில் அப்பாவும்

வீட்டில் இருந்தால், எல்லாரையும் சுத்தி உட்காரச் சொல்லி பேசுவார். ஷூட்டிங்கில் இருந்தால், பக்கத்துலயே ஒரு பங்களா பிடிச்சு, எங்களை அங்க தங்க வெச்சிட்டு, தினமும் ஷூட்டிங் முடிஞ்சதும் மிச்ச பொழுதுகளை எங்ககூட கழிப்பார்.

நானும் அப்பா போலவேதான் சினிமாவில் பரபரனு ஓடிட்டு இருந்தப்போ, குடும்பத்தைப் பார்த்துக்கிற பொறுப்பை 100% என் மனைவிகிட்ட ஒப்படைச்சுட்டேன். ஆனா...

என் பையன் விக்ரம் பிரபு, குடும்பத்துக்கான நேரத்தையும் அழகா ஒதுக்கிக்கிறான். இந்தத் தலைமுறை ஹீரோக்கள் எல்லார்கிட்டயுமே நான் வியந்து மகிழும் குணம் இது. ஒரு படம் முடிச்சதும் அடுத்த படத்துக்கு ஓடாம ஒரு சின்ன பிரேக்கை ஃபேமிலி கூட சந்தோஷமா கழிக்கிறாங்க. அவங்க மனைவிகள் எல்லாம் அதைக் கண்டிஷனாவே போட்டு, ஸ்ட்ரிக்டா செயல்படுத்துறாங்க. அதேநேரம், சினிமாவில் தன் புருஷன் செய்யும் வேலைக்கும் உதவுறாங்க. ரொம்ப நல்ல விஷயம்... சூப்பர் மாற்றம்!’’

- ரசித்துச் சொல்கிறார், ‘நம்’ பிரபு!

 எம்.குணா  படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism