மேகக்கூட்டத்தில் இருந்து இறங்கி வந்த மின்னல் மாதிரிதான் இருக்கிறார் நேரில் பார்த்தாலும்! நாம் வீசும் ஒவ்வொரு சொல்லுக்கும் படபடவென பதில் சொல் வந்து விடுகிறது. கண்களைச் சிமிட்டிக்கொண்டு, தலையை சாய்த்து, புன்னகையுடன் அவர் பதில் சொல்லும் அழகிலும் சினிமா நேர்த்தி!

தீபாவளி?

''தீபாவளின்னாலே எனக்கு அலர்ஜி. காரணம் பட்டாசுதான். அதுக்காக பயந்த பொண்ணுன்னு நினைச்சுடாதீங்க. எங்க வீட்டுல கேட்பரி, ஜோயான்னு ரெண்டு பப்பி இருக்காங்க. பட்டாசு சத்தம் கேட்டாலே அவங்க பயந்து நடுங்க ஆரம்பிச்சுருவாங்க. அஞ்சு வருஷங்களுக்கு முன்னால, ஒரு தீபாவளி சமயத்தில் பட்டாசு சத்தம் கேட்டு பயந்து, கேட்பரி பெட்ரூம்ல இருந்த கட்டிலுக்கு அடியில் போய் ஒளிஞ்சுக்கிட்டான். வீட்டில் இருக்கிற எல்லாக் கதவுகளையும் சாத்திட்டு, டி.வி-யில சத்தம் அதிகமா வெச்சுட்டேன். பெட்ல ஒரு பக்கம் கேட்பரியையும், இன்னொரு பக்கம் ஜோயாவையும் படுக்க வெச்சு போர்வை போத்தி விட்டு சாய்ந்திரம் வரை நானும் அவங்கக் கூடவே படுத்துக்கிட்டேன். அன்னையில் இருந்து நான் சுத்தமா பட்டாசுக்கு குட்பை சொல்லியாச்சு. வெடிச்சாதான் தீபாவளியா? வெளிச்சம்தானே தீபாவளி! அதனால தீபாவளிக்கு வீடுமுழுக்க விளக்கு ஏத்தி வைப்பேன்.''

அம்மா?

''அம்மாதான் எல்லாமே! அவங்க என் அம்மா மட்டும் இல்லை. என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட். என்னோட சந்தோஷத்தை மட்டும் இல்லை, நான் பண்ற தப்பு உட்பட எல்லாத்தையும் அம்மாகிட்ட ஷேர் பண்ணிக்குவேன். நீங்க தப்பு பண்ணினா உங்க அம்மா திட்டுவாங்கதானே? ஆனா எங்க அம்மா எப்பவுமே திட்ட மாட்டாங்க. 'விடு... தெரியாமத்தானே பண்ணிட்டே. இனி கவனமா இரு’ன்னு சொல்லுவாங்க. நான் நடிக்க ஆரம்பிச்ச புதுசுல அம்மா என் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. ஆனா, இப்போ அவங்க வர்றதே இல்லை. ஆனாலும், சாப்பிடுற நேரத்துக்கு கரெக்டா போன் பண்ணிடுவாங்க. நான் என்ன குழந்தையாம்மா..? சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. அது எங்க அம்மாவோட மாறாத குணம்.

எங்களுக்குள்ள நிறைய விஷயத்துக்கு சண்டையும் வரும். நான் பண்ற சில விஷயம் அம்மாவுக்குப் பிடிக்காது. அம்மா பண்ற சில விஷயம் எனக்குப் பிடிக்காது. நேருக்கு நேரா சண்டை போட்டுக்குவோம். விவாதம் பண்ணுவோம். எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் ராத்திரி தூங்கப் போறதுக்குள்ள சமாதானம் ஆகிடுவோம். ஏன்னா எங்களுக்குள்ள ஈகோ கிடையாது. ஒன்லி லவ்!''

ஸ்கூல்?

''என்னோட வாழ்க்கையில் எனக்கு ரொம்பவும் பிடிச்சது என்னோட ஸ்கூல் டேய்ஸ்தான். நம்ம சி.எம். மேடம் ஜெய லலிதா படிச்ச சர்ச் பார்க் ஸ்கூல்லதான் நானும் படிச்சேன். நான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும் போது, ஒரு தடவை ஸ்போர்ட்ஸ் டேவுக்கு ஜெயலலிதா மேடம் வந்தாங்க. அந்த ஃபங்ஷன்ல அவங்களுக்கு முன்னால நான்தான் வெல்கம் டான்ஸ் ஆடினேன். ரொம்பவும் பெருமையா இருந்துச்சு. இந்த மாதிரி நாமும் ஒருநாள் பெரிய ஆளாகி ஸ்கூல் ஃபங்ஷனுக்கு சீஃப் கெஸ்ட்டா வரணும்னு நினைச்சேன். நான் நினைச்ச மாதிரியே ரெண்டு வருஷத்துக்கு முன்னால, எங்க ஸ்கூல்ல இருந்து என்னைக் கூப்பிட்டாங்க. அந்தசமயத்துல நான் வெளிநாட்டுல இருந்தேன். அதனால போகமுடியலை. அதை நினைச்சா இன்னும்கூட எனக்கு வருத்தமாத்தான் இருக்கு.

ஸ்கூலுக்குப் போறதுன்னா நிறைய குழந்தைங்க அழுவாங்க. ஆனா, எனக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு அவ்வளவு பிடிக்கும். அதுக்குக் காரணம் என்னோட ஃபிரெண்ட்ஸ். படிப்பு மட்டும் இல்லாமல் வாழ்க்கையையும் கத்துக் கொடுத்த இடம் அது. எங்க டீச்சர்ஸ் அத்தனை பேர் கூடவும் நான் இன் னும் கான்டாக்ட்லதான் இருக்கேன். அவங்கதானே இந்த த்ரிஷாவை உருவாக்கியவங்க. எப்பவும் அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டே இருப்பேன்.''

நண்பர்கள்?

''யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டீங்க..? த்ரிஷான்னாவே ஃபிரெண்ட்ஸ் தான்னு ஊருக்கே தெரியும். ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே என்கூட படிச்ச பத்து பேரு இன்னும் ஒரு கேங்காதான் இருக்கோம். எங்கே போனாலும் ஒண்ணா சுத்துவோம். சினிமாவுக்கு வந்தப்புறம் சில நண்பர்கள். அதுல ரம்யா கிருஷ்ணனும், வினி கிருஷ்ணனும் முக்கியமானவங்க. வருஷத்துக்கு ஒருதடவை நியூஇயர் அல்லது கிறிஸ்துமஸ் டைம்ல எங்காவது கிளம்பிடுவோம். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் நட்புக்காக எதையும் செய்யக் கூடியவங்க. உண்மையான நட்பை அனுபவிச்சுப் பார்த்தால்தான் அந்த சந்தோஷம் புரியும்.''

பார்ட்டி?

''அது என்ன கெட்ட வார்த்தையா? பார்ட்டின்னா ஏன் அவ்வளவு தள்ளி வெச்சுப் பார்க்குறீங்க? என்னைப் பொறுத்தவரை நான் எப்பவும் ஓப்பன் புக்தான். நண்பர்கள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்துட்டா பார்ட்டிக்குக் கிளம் பிடுவோம். எங்களோட பார்ட்டியால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது. நண்பர்கள் யாராவது ஒருத்தரோட வீட்டுலதான் பார்ட்டி இருக்கும். நான் பார்ட்டிக்குப் போகும்போது எங்க அம்மாகிட்ட சொல்லிட்டுத்தான் போவேன். நான் எங்கே போறேன்... எங்கே இருக்கேன்னு அம்மாவுக்குத் தெரியும். வேற யாருக்காக நான் பயப்படணும் சொல்லுங்க?''

முதல் வெற்றி?

''நான் ஸ்கூல் படிக்கும் போது சேலத்தில் அழகிப்போட்டி நடந்துச்சு. நியூஸ் பேப்பர்ல விளம்பரத்தைப் பார்த்துட்டு சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாமேன்னு போனேன். போட்டி முடிஞ்சு ரிசல்ட்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தோம். 'மிஸ்.சேலம் த்ரிஷா’ன்னு அறிவிச்சுட்டாங்க. எனக்கு எதுவும் புரியல. அந்த சந்தோஷத்தை எப்படி வர்ணிச்சாலும் முடியாது. அதுக்கப்புறம் சென்னையில நடந்த அழகிப்போட்டியில கலந்துக்கிட்டு மிஸ்.சென்னை ஆகிட்டேன். மறுநாள் காலையில எங்க வீட்டுக்கு மூணு தயாரிப்பாளர்கள் வந்துட்டாங்க. 'அவ சின்னப் பொண்ணுங்க. ஸ்கூல் முடிக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு எங்கம்மா திருப்பி அனுப்பிட்டாங்க. ஆக, சினிமாவை என் பக்கம் திரும்பிப் பார்க்க வெச்சது அழகிப் போட்டிதான். காலேஜ் போன பிறகு அம்மாகிட்ட சினிமா பத்தி பேசினேன். ஓகே சொல்லிட்டாங்க.''

மறக்க விரும்புவது?

''நான் ஸ்கூல் படிக்கும்போது எங்க வீட்டுல கறுப்புக் கலர்ல ஒரு பப்பி இருந் துச்சு. அது பேரு மிங்ஸ். நான் வளர வளர அதுவும் என்கூடவே சேர்ந்து வளர்ந்துச்சு. எப்பவும் என்கூடவேதான் இருக்கும். அதுக்கு சாப்பாடு கொடுக்குறதுல இருந்து தூங்க வைக்கிறது வரை எல்லாமே நான்தான். திடீர்னு ஒரு நாள் மிங்ஸ் இறந்துபோச்சு. எனக்கு என்ன பண்ற துன்னே தெரியல. ஒருநாள் முழுக்க அழுதேன். மிங்ஸைக் குளிப்பாட்டி அதுக்கு பூ வெச்சு, எங்க வீட்டுத் தோட்டத்துலயே அடக்கம் செஞ்சோம். மிங்ஸை அடக்கம் செஞ்ச இடத்துல ஒரு எலுமிச்சை மரம் வெச்சோம். அந்த மரத்துக்கும் மிங்ஸ்ன்னுதான் பேர். இப்போ மிங்ஸ் வளர்ந்து நிறைய லெமன் கொடுக்குது. ஆனாலும், மிங்ஸ் என்னை விட்டுப்போன அந்த நாளை இப்போ நினைச்சாலும் அழுகை வருது. மிங்ஸ் எங்களை விட்டுப் போன சோகமான நாளை எப்படியாவது மறக்கணும்னு நினைக்கிறேன்.''

ஆசை?

''நம்புவீங்களா..? நான் எதிர்பார்த்தது எதுவும் என் வாழ்க்கையில நடக்கலை. ஆனா, நான் எதிர்பார்த்ததை விட நல்லபடியா நடந்துட்டு இருக்கு. எம்.பி.ஏ. முடிச்சுட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகணும்னு படிக்கிற காலத்துல ஆசைப் பட்டேன். நான் ஆசைப்பட்டதை விட இன்னைக்கு நல்ல நிலைமையிலதான் இருக்கேன். சினிமாவில் எல்லா ஹீரோ கூடவும் சேர்ந்து நடிச்சுட்டேன். சூப்பர் ஸ்டார்கூட மட்டும் இன்னும் ஜோடி சேர நேரம் வரலை. அந்த நாளுக்காக ஆசையாக் காத்திருக்கேன்.''

கல்யாணம்?

''நடக்கும்போது நடக்கும். ஆனா, எல்லோரும் நினைக்கிற மாதிரி... சிலர் எழுதுற மாதிரி கண்டிப்பா இருக்காது. 'இவர் என்னை காலம் முழுக்க நல்ல படியா பார்த்துக்குவார். இவர்தான் எனக்கு ஏற்றவர்’னு என் மனசுக்குத் தோணனும் இல்லையா? அப்படித் தோணும்போது கண்டிப்பா எங்க அம்மாகிட்ட சொல்லுவேன். அவங்க பேசி கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இதை யாருக்கும் தெரியாமலோ, ரகசிய மாகவோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வயசாயிடுச்சுன்னோ, மத்தவங்க சொல்றாங்கன்னோ கல்யாணம் பண்ணிக்க முடியாது. இது வாழ்க்கையில ஒருமுறை நடப்பது. ஆனால், வாழ்நாள் முழுக்க கூட வரும் ஒரு பந்தம். அது எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன். நான் நினைக்கிறது தப்பா?''

சரிதான்!