Published:Updated:

’’சோதனைகளை சாதனையா மாத்துன அஞ்சு பேர் கதை இது!’’ - சென்னை டு சிங்கப்பூர் பயண சுவாரஸ்யம்   (Sponsored Content)

’’சோதனைகளை சாதனையா மாத்துன அஞ்சு பேர் கதை இது!’’ - சென்னை டு சிங்கப்பூர் பயண சுவாரஸ்யம்   (Sponsored Content)
’’சோதனைகளை சாதனையா மாத்துன அஞ்சு பேர் கதை இது!’’ - சென்னை டு சிங்கப்பூர் பயண சுவாரஸ்யம்   (Sponsored Content)

’’சோதனைகளை சாதனையா மாத்துன அஞ்சு பேர் கதை இது!’’ - சென்னை டு சிங்கப்பூர் பயண சுவாரஸ்யம்   (Sponsored Content)

’’சோதனைகளை சாதனையா மாத்துன அஞ்சு பேர் கதை இது!’’ - சென்னை டு சிங்கப்பூர் பயண சுவாரஸ்யம்   (Sponsored Content)


சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் மூலம் இளம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் 'அப்பாஸ் அக்பர்'. இளைஞர் கூட்டணியாக இணைந்து எடுக்கப்பட்ட இந்தப் படம் குறித்து அப்பாஸ் நம்முடன் பகிர்ந்துகொண்டார்...

"உள்ளத்தை அள்ளித்தா, மைக்கேல் மதன காமராஜன் மாதிரி குலுங்கி குலுங்கிச் சிரிக்கவைக்கிற, நகைச்சுவையை மையமா வச்சு ஒரு படம் எடுக்கணும்ங்றதுதான் என்னோட ஆசை. இதில் என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்தை கருவா வச்சு கதையை வடிவமைச்சேன். சென்னை 2 சிங்கப்பூர் படத்துல, 'ஹரிஷ்' அப்பிடிங்க்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கும் கோகுல் ஆனந்த், சிங்கப்பூரில் முதன் முறையாக காலெடுத்து வைக்கும்போது, தேடி வந்தவரின் கார் கம்பத்தில் மோதி, பறந்து விழுந்து கோமாவில் படுத்த படுக்கையாறாரு. இப்படி அடுக்கடுக்கா எல்லாமே நாசமா போனாலும், கடைசியில பெண்ணையும் பொன்னையும் வெல்றாரு ஹரிஷ். படத்துல கஷ்டங்களக் கண்ணீரோட சொல்லாம, காமெடியா சொல்லிருக்கோம்".

படத்தோட டீம் புதுசு! எப்படி இந்த டீம் பிடிச்சீங்க?! 

"இதுல முக்கிய கலைஞர்கள் எல்லாருக்குமே ஒரு ஒற்றுமையுண்டு. அதுதான் தோல்வியப் பார்த்து துவளாம இருக்குற மனோபாவம். வெளிப்படையா பேசணும்னா, துரதிர்ஷ்டசாலிகள் அஞ்சு பேர்  சேர்ந்து ஒரு படம் எடுத்தா என்னவாகும்? நான், ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, படத்தோட ஹீரோ கோகுல் அப்புறம் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கும் ராஜேஷ்தான் அந்த அஞ்சு பேரு!

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்து, பாஸ்போர்ட்டைத் தொலைச்சு, ஆறு மாசமா வீடு திரும்ப முடியாம நான் அவதிப்பட்டேன். அதையே கருவாக வெச்சுப் படம் எடுக்க முயன்று, மூன்று முறை தோல்வியடைஞ்சேன். வாழ்க்கையில சில சமயங்கள்ல நம்ம உள்மனசு சொல்றதகேட்டு நம்பிக்கையோட ரிஸ்க் எடுக்கும்போது  தடைகளெல்லாம் தவிடுபொடியாகிடுது. அப்படித்தான், தன்னம்பிக்கையோடு செயல்பட்டு கடைசில வெற்றிகரமா 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்த எடுத்துமுடிச்சேன்.

வாகை சூடவா படத்துக்கு தேசிய விருது கெடச்சாலும், அதுக்கடுத்து நெறைய தோல்விகளத்தான் சந்திச்சார் இசையமைப்பாளர்

’’சோதனைகளை சாதனையா மாத்துன அஞ்சு பேர் கதை இது!’’ - சென்னை டு சிங்கப்பூர் பயண சுவாரஸ்யம்   (Sponsored Content)

ஜிப்ரான். விரக்தியடைந்த நேரத்துலையும், தைரியத்தை வரவழச்சுக்கிட்டு தயாரிப்பாளராகலாம் என முடிவெடுத்தார். அறம், தீரன் படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சது முதல் மகிழ்ச்சி, இப்போ இவர் தயாரிப்பான 'சென்னை 2 சிங்கப்பூர்' படமும் எல்லாத் தடைகளையும் தாண்டி ஓடிக்கிட்டு இருக்கு.

'மும்பை எக்ஸ்பிரஸ்', 'எந்திரன்' போன்ற மெகா படங்களில் உதவி ஒளிப்பதிவாளரா வேலை செஞ்சிருந்தாலும், எப்படியாவது தனது கைவண்ணத்தில் ஒளிப்பதிவு செய்யவேண்டுமென்ற வேட்கையோடு இருந்தார் கார்த்திக். விக்ரமின் கரிகாலன் பட வாய்ப்பு கிடைச்சும் படம் பாதியில நின்னுபோச்சு. இப்போ 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்துக்கு அப்புறம் பிசியா பிற இயக்குநர்களைப் பார்க்கக் கிளம்பிட்டார் கார்த்திக்!

நடிகனாகணும்ங்க்ற ஆசையில சிங்கப்பூரில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு, நூற்றுக்கும் மேலான ஆடிஷன்களுக்குச் சென்று “உனக்கு ஹீரோ லுக் இல்லை”ன்னு அவமானப்பட்டு, இந்தக் கனவையே விட்டுவிடலாம்னு நினைச்ச கோகுல் ஆனந்த், இப்போ ஒரு ஹீரோ!

நிஜ வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், மத்தவங்கள சிரிக்க வைக்கணும்னு நினைத்த ராஜேஷ், பத்து வருடங்களா வாய்ப்புகளைத் தேடி அலைஞ்சு, இன்னிக்கி 'வானம்பாடி' எனும் ஒரு கல்ட் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கார்!"

’’பாட்டெல்லாம் பக்காவா போடுறவர் ஜிப்ரான், திடீர்னு தயாரிப்பாளார் ஆகி சர்ப்ரைஸ் கொடுத்திருக்காரு! இதெப்படி?’’

"எனக்குமே இது ஒரு சர்ப்ரைஸ்தான்! இது நட்புக்காக அவர் செய்த ஒரு மிகப்பெரிய செயல்னுதான் சொல்லணும். சிங்கப்பூர்ல ஜிப்ரான் படிச்சிட்டு இருந்தப்ப எங்க வீட்டுலதான் பேயிங் கெஸ்ட்டா தங்கியிருந்தார். அப்போதுலேர்ந்து எனக்கு அவர் ரொம்ப க்ளோஸ். சும்மா டீ ஷாப்ல உட்கார்ந்து 'படமெடுத்தா இப்டில்லாம் பண்ணணும்னு' நான் சொல்றத தலையாட்டிக் கேட்டுப்பார்! அப்போ அவருக்கும் நான் இயக்குநரா வருவேன்னு தெரியாது, எனக்கும் அவர் கோலிவுட்ல  ஒரு பெரிய இசையமைப்பாளரா ஆவார்னு தெரியாது. 2011-ல நான் ரொம்பவே கஷ்டப்பட்டுதான் இந்தப் புரொஜக்ட்ட ஸ்டார்ட் பண்ணினேன். ரொம்ப ட்ரை பண்ணியும் தயாரிப்பாளர்கள் கிடைக்காததுனால, என் வீட்டை வித்துதான் படத்தோட வேலைகள் ஆரம்பிச்சது! பிறகு பல தடங்கல்கள், அப்போதான் நம்ம நண்பனுக்காக கண்டிப்பா இந்தப் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினார் ஜிப்ரான். தோள் கொடுப்பான் தோழன்! அந்தத் தோழன் எனக்கு ஜிப்ரான்தான்!"

முதல்ல படத்தோட பாடல் வெளியீட்டப் பத்தி சொல்லணும்! சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரைக்கும் தரைவழியா பயணம் பண்ணி, ஒவ்வொரு நாட்டுலேயும் ஒவ்வொரு பாட்டா வெளியிட்டு ஆடியோ லான்ச் பண்ணோம். லான்ச் வித்தியாசமா இருக்கும்போது, ரிஸ்க்கும் எடுத்துத்தானே ஆகணும். எங்க வாழ்க்கையில நாங்க மறக்கவே முடியாத சம்பவமெல்லாம் இந்தப் பயணத்துல நடந்ததுன்னு சொல்லலாம். மணிப்பூர்ல இருந்தப்போ பயங்கரமான நிலநடுக்கத்துல மாட்டிக்கிட்டோம், மியான்மருக்குப் போனப்போ எங்களோட டிராவலிங் பேப்பர்ஸ்ல சட்ட ரீதியா பிரச்னை இருக்குன்னு சொல்லி அங்கேயே பிடிச்சுவெச்சுக்கிட்டாங்க. இதெல்லாம் நாங்க என்னைக்குமே மறக்கமாட்டோம்!"

முதலில் படம் எடுப்பதுல தடைமேலத் தடை; பின் ஆடியோ லான்ச்சில் ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவங்கள் என அத்தனைச் சிரமங்களையும் தாண்டி படம் வெளி வந்தப்ப, எல்லாச் சின்ன படத்துக்கும் இருக்கிற தொடக்கம்தான், ஸ்லோவாதான் ஸ்டார்ட் ஆச்சு. ஆனா நாலு நாள் கழிச்சு நாங்க மக்களோட மக்களா ரோகினி தியேட்டர்ல படம் பார்க்கப்போனபோதுதான் தெரிஞ்சுது, விளம்பரப்படுத்தலைத் தாண்டி வாய் வழியா மக்கள்கிட்ட போய்ச் சேருற தகவலுக்கு எவ்வளவு பலம் இருக்குன்னு. தியேட்டர்ல காமெடி சீன்ஸ்க்கெல்லாம் அவ்வளவு அருமையான வரவேற்பு. ஒவ்வொரு தடவ எல்லாரும் கைதட்டும்போதும், விசில் அடிக்கும்போதும், சிரிக்கும்போதும் இந்தப் படம் மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்திருக்குன்னு நெனச்சு மகிழ்ச்சியா இருக்கு. இப்பவே ஹீரோ கோகுல் 3 படத்திலயும், ஹீரோயின் அஞ்சு குரியன் 2 படத்திலயும் கமிட் ஆயிட்டாங்க! இதைவிட சந்தோஷமான சேதி வேணுமா!"​​

அடுத்த கட்டுரைக்கு