Published:Updated:

கழிவறைக்கு அடிக்கல் நாட்டிய த்ரிஷா..!

கழிவறைக்கு அடிக்கல் நாட்டிய த்ரிஷா..!
கழிவறைக்கு அடிக்கல் நாட்டிய த்ரிஷா..!

கழிவறைக்கு அடிக்கல் நாட்டிய த்ரிஷா..!

திருப்போரூர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் டாய்லெட் கட்டும் பணியை செய்து பொதுமக்களிடம் நடிகை த்ரிஷா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து, மத்திய மாநில அரசுகள், பிரபலங்கள்  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள வடநெம்மேலியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊரக வளச்சி கூடுதல் இயக்குநர் லட்சுமிபதி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் கவிதா, நடிகை த்ரிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கெனவே கட்டப்பட்ட கழிவறைகளை பொதுமக்களிடம் ஒப்படைத்து அதன் பயன்பாடு பற்றி நடிகை திரிஷா பேசினார். அப்போது “திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது. கழிப்பறை கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 12 ஆயிரம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. எல்லோரும் அதை பயன்படுத்தினால் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும்” என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார். பின்பு அவரே ஒரு வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை செய்தார்.

அடுத்த கட்டுரைக்கு