Published:Updated:

டிஜிட்டல் நாயகிகள்!

பா.ஜான்ஸன், ஓவியங்கள்: பரனூர் வெங்கட்

''என் சொந்த ஊர் செங்கல்பட்டு பக்கம் பரனூர். 18 வருஷமா ஓவியத் துறையில் இருக்கேன். கலை இயக்குநர்கள் தோட்டாதரணி, ஜி.கே., லால்குடி இளையராஜா இவங்ககிட்ட எல்லாம் உதவி

டிஜிட்டல் நாயகிகள்!

கலை இயக்குநரா வேலைசெஞ்சேன். இன்னொரு பக்கம், பழைய ஓவியங்கள், போட்டோக்கள் எல்லாத்தையும் டிஜிட்டல் ஓவியமா வரைஞ்சு கொடுக்கும் பிசினஸையும் ஆரம்பிச்சேன்.

சிலருக்கு சில போட்டோக்கள் பொக்கிஷமா இருக்கும். அதை அவங்களுக்கு டிஜிட்டலா தரும்போது நிச்சயம் இன்னும் பத்திரமா இருக்கும்ல?! இந்த விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் பிரபலங்களை ஓவியங்களாக வரைஞ்சு ஃபேஸ்புக்ல போட ஆரம்பிச்சேன். அது பெரிய ரீச் கொடுத்தது. வெளிநாடுகள்ல இருந்துகூட இப்போ வரையச் சொல்லிக் கேக்கிறாங்க'' - தன் டிஜிட்டல் ஓவியப் பயணத்தை அழகாக விவரிக்கிறார் ஓவியர் பரனூர் வெங்கட். இனி, அவர் வரைந்த பிரபலங்களின் ஓவியங்களும் அவர்களைப் பற்றிய டிட்பிட்ஸும்...

தமன்னா:

'அல்லுடு ஸ்ரீனு’ தெலுங்கு படத்தில் கெட்ட ஆட்டம் போட்ட தமன்னா, 'சுந்தரபாண்டியன்’ தெலுங்கு ரீமேக்கில் அடுத்த ஐட்டம் டான்ஸுக்குத் தயார். அழகியின் சம்பளம் 80 லட்சமாம். ஆத்தாடி!

நஸ்ரியா:

'பெங்களூர் டேஸ்’-க்கு முன்பு நஸ்ரியாவுக்கு நாய் என்றாலே பயம், பயம். ஆனால் இப்போது நாய்களின் டார்லிங் ஆகிவிட்டார். முதல் திருமண நாளுக்கு கணவர் ஃபஹத் பாசில் வாங்கித் தந்த கிஃப்ட், ஒரு க்யூட் நாய்க்குட்டி. குட்டியின் பெயர்... ஓரியோ!

சமந்தா:

செல்ஃபிபுள்ள இப்போது மகாபாரதம் படிக்க ஆரம்பித்திருக்கிறார். 'எவன் ஒருவன் சந்தோஷம், துக்கம், அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் எல்லாவற்றையும் கடந்து, காலங்களைச் சமமாக நினைக்கிறானோ, அவனே உலகின் மிகப் பெரும் செல்வந்தன்’ என்பது சமந்தாவின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்.  

ஹன்சிகா:

ஹன்சிகா 'அம்மா செல்லம்’. அவரின் கால்ஷீட்கள் கவனிப்பது, ஷூட்டிங்குக்கு கூட வருவது என ஹன்சிகாவின் சிறந்த தோழியும் அவர்தான். சமீபத்தில் 'போக்கிரிராஜா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் அம்மாவுக்கு தானே புது ஹேர்ஸ்டைலில் தலைவாரி அசத்தியிருக்கிறார் இந்த டார்லிங் டம்பக்கு!

டிஜிட்டல் நாயகிகள்!

டாப்ஸி:

'தி ஹோம் கம்மிங்’ என்ற இந்திக் குறும்படத்தில் டாப்ஸியின் நடிப்புக்கு லைக்ஸ் குவிகிறது. ஆனால் இந்த வெள்ளாவி தேவதையோ, ''வெற்றி மாறனின் 'விசாரணை’ பார்த்தேன். மூச்சு விடக்கூட மறந்து படத்தை ரசித்தேன்'' - பார்ப்போரிடம் எல்லாம் கண்கள் விரித்து சிலாகிக்கிறார்.

நயன்தாரா:

'மாயா’, 'தனி ஒருவன்’, 'நானும் ரௌடிதான்’... ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு நயன்தாரா ஜோடி சேர்ந்திருப்பது மம்மூட்டியுடன். படத்தின் பெயர், 'புதிய நியமம்’. அதே மம்மூட்டி நடித்த 'பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நயன்தான் ஹீரோயின்!

ஜோதிகா:

விஜயதசமியன்று தன் குழந்தைகளின் ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு மரியாதைசெய்து, குழந்தைகளை ஆசீர்வாதம் வாங்கவைத்திருக்கிறார் ஜோதிகா.

டிஜிட்டல் நாயகிகள்!

அமலா பால்:

இவருக்கு வயது 24.  கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கூபா டைவிங் செய்து திருமண நாளை சாகசங்களோடு கொண்டாடியிருக்கிறார். 'போன ஜென்மத்தில் நான் நிச்சயம் மீனாகத்தான் பிறந்திருப்பேன்’ என சிலிர்க்கிறார்!

லட்சுமி மேனன்:

இப்போது லட்சுமி மேனனுக்கு கவனம் எல்லாம் கல்லூரிப் படிப்பில்தான். ''காலேஜ்ல 'அந்த ஹீரோ எப்படி, இந்த ஹீரோ எப்படி?’னு ஃப்ரெண்ட்ஸ் கேட்கிறாங்க. நானும் 'அவர் எனக்கு க்ளோஸ், இவர் எனக்கு க்ளோஸ்னு கெத்து காமிக்கிறேன்’ என்கிற இந்த ஜாலி கோழிக்குள் ஜெர்னலிஸ்ட் ஆர்வம் ஒளிந்திருக்கிறது!

ஆண்ட்ரியா:

டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை, பாடகி என சகல ஏரியாவிலும் கில்லி அடிக்கும் ஆண்ட்ரியா, பாடகியாக ஹாஃப் செஞ்சுரி அடிக்கிறார். 'அந்நியன்’ பட 'கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியாவுக்கு, 'மெல்லிசை’ படத்தின் 'டேக் மி’ ஐம்பதாவது பாடல்!

ரம்யா கிருஷ்ணன்:

கண் அசைவில் கட்டளையிடும் 'பாகுபலி’ சிவகாமி, அடுத்த படத்திலும் அரசனின் மகள்தான். மலையாளப் படம் 'ஆடு புலி ஆட்ட’த்தில் அரசனின் மகள், பத்து வயது குழந்தையின் தாய் என ரம்யாவுக்கு இரு வேடங்கள்.  

டிஜிட்டல் நாயகிகள்!

அஞ்சலி:

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'சரைனோடு’ படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடல். அனுஷ்காதான் ஆடவேண்டும் எனக் காத்துக்கிடந்தது படக் குழு. ஆனால் 'இஞ்சி இடுப்பழகி’யின் எக்கச்சக்க எடை தடையாக வர... இப்போது அந்த ஆட்டத்தை உங்களுக்கு வழங்கவிருப்பது அஞ்சலி!

அசின்:

அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித் எனப் பிரபலங்கள் நூடுல்ஸ் விளம்பரத்தால் நொந்து நூடுல்ஸாகிக் கிடக்க, 'இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்னர், அந்தப் பொருட்கள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் நம் பொறுப்பும் அடங்கியிருக்கிறது. தவறான பொருட்களின் விளம்பரப் படத்தில் ஒருபோதும் நாம் இருக்கக் கூடாது’ என்று ஸ்டேட்டஸ் தட்டுகிறார் அசின்.

டிஜிட்டல் நாயகிகள்!

தீபிகா படுகோன்:

தீபிகா இப்போது ஃபேஷன் டிசைனரும்கூட. பிரெஞ்சு டிசைனிங் நிறுவனத்துடன் இணைந்து தான் உருவாக்கிய 'ஆல் அபௌட் யூ’ பிராண்டு உடைகளை அறிமுகம் செய்திருக்கிறார் அழகி. 

அடுத்த கட்டுரைக்கு