Published:Updated:

“மகனோடு தலைதீபாவளி..”

சந்திப்பு: சிவராஜ் ,படங்கள் / கே.ராஜசேகரன்

“மகனோடு தலைதீபாவளி..”

சந்திப்பு: சிவராஜ் ,படங்கள் / கே.ராஜசேகரன்

Published:Updated:

 “தலை தீபாவளி கொண்டாடுறதே தனி சுகம். அதுவும் ஆசை மனைவியோடு சேர்ந்து கொண்டாடுற முதல் தீபாவளிக்கு ஒரு தனி உற்சாகம். என்னோட இந்த தலை தீபாவளி, அதையும் தாண்டி இரட்டிப்பு சந்தோஷம்! ஆமா, எனக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்... அதோட, நான் நடிச்ச 'வாகை சூட வா’ வெளியாகிற தீபாவளிங்கிறதால, எனக்கு இந்த தீபாவளியில ட்ரிபிள் சந்தோஷம்...'' என்று முகம் கொள்ளாத சிரிப்புடன் பேசத் தொடங்கினார் விமல். 

''இந்த இனிப்பான தருணத்துல சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்க விரும்பறேன். முதல்ல நம்ம வேட்டி-சட்டை யிலிருந்தே ஆரம்பிக்​கிறேன்.

  வேட்டி-சட்டையில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டு வேட்டி, பட்டுச் சட்டை எனக்கு ரொம்பப் பொருத்தமா இருக் குன்னு ரசிகர்கள், நண்பர்கள் எல்லாரும் சொல்றாங்க. ஊர்ல கிராமத்துலயே இருந்ததுனால இந்த வேட்டி மேட்டர் பொருத்தமா அமைஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். அதுவும் நம்ம பண்பாட்டு உடைங்கிறதே, ஒரு பெருமைதான். நான் வீட்ல இருக்கும்போது பெரும்பாலும் வேட்டி, சட்டைலதான் இருப்பேன்! சில சமயம் இதே காஸ்ட்யூமோட வெளியிலும் போய்ட்டு வருவேன்.

 “மகனோடு தலைதீபாவளி..”

ஊருல ஒரு கல்யாணம் காட்சி... காதுகுத்து... இப்படி எது நடந்தாலும் வேட்டி சட்டையில போனா தனி மரியாதைதான்! 'களவாணி’ படத்துல முழுக்க முழுக்க வேட்டி, சட்டையில என்ஜாய் பண்ணி நடிச்சேன். அந்த கேரக்டரும் யதார்த்தமா அமைஞ்சது. சிலர் இன்னமும்கூட நான் ஊர்ப்பக்கம் போனா, 'என்ன அறிவழகன் அண்ணே, எப்படி இருக்கீங்க? வீட்ல அம்மாகிட்ட பொய் சொல்ற பழக்கத்த இன்னும் விடலையா?’னு அந்த கேரக்டரை மனசுல வச்சுக்கிட்டுச் சதாய்ப்பாங்க. ரொம்ப அழுத்தமா ரசிகர்கள் மனசுல பதிஞ்ச அந்த கிராமத்து கேரக்டரை படைச்ச இயக்குனர் சற்குணத்துக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்!''

கூத்துப் பட்டறை!

''அடுத்ததா கொஞ்சம் பிளாஷ்பேக். நான் கூத்துப் பட்டறையில ஆறு வருஷம் இருந்தேன். நமக்கும் கொஞ்சம் நடிப்பு வருதுன்னா, கூத்துப் பட்டறையில் கிடைச்ச பயிற்சியும் அனுபவமும்தான் காரணம்.

அதுக்கு முன்னாடி, நான் டென்த் முடிச்ச சமயம்... நடிப்புல செம ஆர்வம். நடிக்கிறதுக்கு என்ன பண்ணலாம்னு திரிஞ்சப்ப... 'கலாஸ் கலாலயா’னு கலா மாஸ்டர் நடிப்புக்குன்னு ஒரு இன்ஸ்டிட்யூட் மாதிரி வச்சுருந்தது தெரிஞ்சுது. உடனே நடிப்பு ஆர்வத்துல, அதுல சேர்ந்தேன். கவிஞர் வைரமுத்து உதவியாளர் பாஸ்கர் மூலமாதான் அதுல சேர்ந்தேன்.

அங்க ஒரு வருஷம் இருந்தேன். அங்க நடனம், நடிப்பு இந்த இரண்டிலும் பயிற்சி கொடுத்தாங்க. அதை முடிச்சதும் கூத்துப் பட்டறையில் இருந்த ஜார்ஜ் அண்ணனோட ('அழகி’ படத்துல வாத்தியாரா வர்றவர்...) பழக்கம் கிடைச்சது. கூத்துப் பட்டறையில ஒரு நாள்கூட சும்மாவே இருந்தது கிடையாது!

 “மகனோடு தலைதீபாவளி..”

காலையில 10 மணிக்கு ஆரம்பிச்சா... மாலை 6 மணி வரையும் ஏதோ ஒரு வேலை போயிக்கிட்டே இருக்கும். சிலம்பம் அது இதுன்னு நிறைய விஷயங்கள். ந.முத்துசாமி சார் சொல்லித் தருவாரு. 'நடிப்புன்னா, ஒரு நடிகன் சும்மா டயலாக்கை மட்டும் வாங்கிக்கிட்டுப் பண்ற விஷயம் இல்ல. அவன், முதல்ல ஒரு நல்ல மனிதனா இருக்கணும். அப்பத்தான் நல்ல நடிகனாவும் வர முடியும். வீடு கூட்டுறதுலகூட ஒரு பயிற்சி இருக்கு. டீ போடுறதுலகூட ஒரு பயிற்சி இருக்கு. நம்ம சாப்பிடும்போது ஒரு பயிற்சி இருக்கு. சாப்பிட்டுக் கை கழுவும்போது அதுல ஒரு பயிற்சி இருக்கு. அது மாதிரி நம்ம செய்யுற ஒவ்வொரு அசைவுல இருந்தும் கத்துக்கணும். அந்தப் பயிற்சியெல்லாமே நடிப்புக்குப் பயன்படும்’ என்பதை  கத்துக்கிட்டேன்.

''டைரக்டர் தரணி சார் கூத்துப் பட்டறைக்கு அடிக்கடி நாடகம் பார்க்க வருவார். அப்ப அவரோடு பழக்கம் ஏற்பட்டது. 'உங்களுக்கு ஒரு வேஷம் தர்றேன்’னுட்டு ஒரு நாள் கூத்துப் பட்டறையில் இருந்து எங்க மூணு பேரைக் கூட்டிட்டுப் போனாரு.

'நமக்கும் கொஞ்சம் செலவுக்கு காசு கெடச்ச மாதிரியும் ஆச்சு. அங்க நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டது மாதிரியும் ஆச்சு’ன்னு ஜாலியா கௌம்பினேன்.

அங்க போயிட்டு ஹீரோ ஃபிரண்டு அப்படின்னுட்டு மட்டும் இல்லாம, உதவி இயக்குநனர் வேலையும் நாங்க பார்த்தோம். தரணி சார் எங்களுக்கு அவ்வளவு ஃபிரீடம் கொடுத்ததுதான் அதுக்குக் காரணம்.

ஃபீல்டு க்ளியர் பண்றது, அது இதுன்னு சில வேலைகள் பார்ப்போம். அந்தப் படம் விஜய் சார் நடிச்ச 'கில்லி’. அதுல நடிக்கும்போது, விஜய் சார் ரொம்ப எதார்த்தமா நல்லா பழகினாரு. சுருக்கமா சொன்னா, நான் முதன் முதலா சினிமா கத்துக்கிட்டது, 'கில்லி’ படத்துலதான்! சினிமா எப்படி எடுப்பாங்க, என்னென்ன நடக்கும், வேலைகள் எவை, கேமராவுக்கு பின்னாடி என்ன நடக்குதுன்னு ஓரளவு கவனிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

நானும் சற்குணமும்...

நட்பு இந்த உலகில் மிகப் பெரிய விஷயம். அது மட்டும் ஒரு மனுஷனுக்கு சரியா அமைஞ்சதுன்னா, எதை வேணாலும் சாதிக்கலாம். நானும் சற்குணமும் 12 வருஷ நண்பர்கள். நான் கூத்துப் பட்டறைக்குப் போறதுக்கு முன்பிருந்தே சற்குணம் சினிமாவுல உதவியாளரா சேர முயற்சி பண்ணினார். அப்பவே நானும் அவரும் நண்பர்கள். அப்பவே 'களவாணி’ கதையெல்லாம் ரெடி பண்ணிட்டார். அந்த நேரத்துலயே களவாணி கதையச் சொன்னாரு. நல்லா எதார்த்தமா இருந்துச்சு. ரெண்டு பேரும் இணைஞ்சு இந்த படத்தைப் பண்ணலாம்னு ஆசைப்பட்டோம். ஆனா, தயாரிப்பாளர்கள் உடனே யாரும் முன்வரல. அதை எல்லாம் மீறி, சற்குணத்து மேல நான் வச்சுருந்த நம்பிக்கையும் அவர் என் மேல வச்சுருந்த நம்பிக்கையும்தான் இந்த அளவுக்கு எங்களை இணைச்சு, அந்தப் படத்தைப் பண்ண வச்சது. ரெண்டாவதா, 'வாகை சூட வா’ன்னு மறுபடியும் ஒரு படம் பண்ற அளவுக்கு இருக்கிறோம்னா, அந்த நட்பும் நம்பிக்கையும்தானே காரணம்!''

 “மகனோடு தலைதீபாவளி..”

சினிமா போஸ்டரால்...

மணப்பாறை பக்கத்துல இருக்கிற பன்னாங்கொம்பு நான் பிறந்த கிராமம். அப்பா நரசிம்மன். அம்மா ரமணி. நான் அங்கே ஒண்ணாவது படிக்கும்போதே அப்பா சென்னைக்கு கான்ட்ராக்ட் வேலைகள் செய்ய வந்துட்டார். நான் அஞ்சாவது வகுப்பு வரை மணப்பாறையில படிச்சேன். தாத்தா வெங்கம நாயுடு, பாட்டி சின்னம்மாள், பெரியப்பா ராஜாமணின்னு அவுங்களோட அன்பு மழையில பாசமா இருந்த என்னை ஒரு நாள் திடீர்னு அப்பா சென்னைக்கு அழைச்சுட்டு வந்து, இங்க ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டார். ஆறாம் வகுப்புலேர்ந்து பத்தாவது வரை சென்னை டிரஸ்ட்புரம் பெட்ரோல் பங்க் எதிர்ல இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில். கவிஞர் பழநிபாரதியும் அங்கேதான் படிச்சார். அந்த ஸ்பாட்தான் நமக்கு சினிமா ஆர்வத்துக்கு முதல் விதை விழுந்த இடம்!  

அந்த ஸ்கூலுக்குப் போற வழி எல்லாம் அப்ப நிறைய சினிமா போஸ்டர்களா இருக்கும். வேடிக்கை பார்த்துக்கிட்டே போவேன்! ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்னு விதவிதமான கெட்டப்ல நம்மள சுண்டி இழுப்பாங்க. இப்படி அஞ்சாறு வருஷம் சினிமா போஸ்டர் பார்த்ததுல சினிமா மேல ஒரு வெறியே வந்துருச்சு. அதுவும், பத்தாவது படிக்கும்போது புஸ்தகம் மண்டைல ஏறலை... ஃபுல்லா போஸ்டர்தான் ஏறுச்சு! அதனால பத்தாவது ஃபெயில்! . ' நான் நடிக்கப் போறேன்’னேன். அவுங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அப்புறம் என் பிடிவாதத்தைப் பார்த்துட்டு மெள்ள சமாதானமாகி, அப்பா என் இஷ்டத்துக்கு விட்டுட்டாரு. அம்மாவும் நமக்கு ஃபுல் சப்போர்ட் பண்ண... அப்புறம்தான் கூத்துபட்டறைக்கு வந்துட்டேன்.

 “மகனோடு தலைதீபாவளி..”

தாடி மீசையுடன்...

'பசங்க’ படம்தான் எனக்கு கிடைத்த முதல் பெரிய ரெஸ்பான்ஸ்! கூத்துப்பட்டறையில இருந்தப்ப ரெண்டு விளம்பரப் படங்கள் பண்ணினேன். அதோட அப்ப ஒரு நாடகத் துக்காக மீசை எடுத்துட்டு க்ளீன் ஷேவ்ல இருந்தேன். அப்பத்தான் 'சசிகுமார் சாரோட தயாரிப்புல, பாண்டிராஜ் இயக்கத்துல 'பசங்க’ படத்துக்கு ஒரு புதுமுகம் தேவைன்னு தேடிக்கிட்டு இருங்காங்க’ன்னு விஜய் சேதுபதி ('தென்மேற்குப் பருவக்காற்று’ நாயகன்) மூலமா தகவல் கிடைச்சது!

உடனே பாண்டிராஜ் சாரைப் போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததுமே 'நீ வேண்டாம்’னுட்டாரு! 'பசங்க’ படத்தோட கேமராமேன் பிரேம் சார், என் விளம்பரப் படத்தை டி.வி-ல பாத்திருக்காரு. அவரு டைரக்டர்கிட்ட சொல்ல, 'ஓ.. அந்தப் பையனா நீ? அந்த விளம்பரப் படத்துல தாடி மீசையெல்லாம் நல்லா இருந்துச்சே’ன்னார். 'ஒரு பத்து நாள்ல தாடியும் மீசையும் வளர்த்துக்கிட்டு வந்து என்னை பாருப்பா’ன்னாரு. அதே மாதிரி போனப்ப... டயலாக் கொடுத்துப் பேசச் சொன்னாரு. பேசினேன். 'நீதான் என்னோட மீனாட்சிசுந்தரம்’னுட்டாரு.  

முன்பும் பின்பும்...

நான் மனசளவுல இன்னும் அப்படியேதான் இருக்கேன். எந்த மாற்றமும் இல்ல. ஆனா, இந்த சமூகத்தில் நம்மை நடிகனாவதற்கு முன்பு பார்த்தவங்களுக்கும் இப்போது பார்க்கிற வர்களுக்கும் வேறுபாடு தெரியுது. இன்னொரு விஷயம், முன்னாடி ஊருக்குப் போறதுக்கும் இப்ப போறதுக்கும் வித்தியாசம் தெரியுது. முன்னாடி சினிமா வாய்ப்பு கிடைக்காம ஒரு விதமான அழுத்தத்தோட ஊருக்குப் போவேன். இப்ப வேறு மாதிரியான வில்லங்கம். அதாவது, 'இந்த மரியாதையை எப்படிடா தக்க வைக்கப் போறோம்’னு இருக்கு!

 “மகனோடு தலைதீபாவளி..”
 “மகனோடு தலைதீபாவளி..”
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism