சென்னை, வடபழனி, ஃபோரம் விஜயா மாலில், மேடையச் சுத்தி காது கிழியுற அளவுக்கு `ஓ' போட்டுக்கிட்டும் விசில் அடிச்சுக்கிட்டும் ஒரே மக்கள் கூட்டம். ‘யாருப்பா அந்த பெர்ஃபார்மர்?’னு எட்டிப் பார்த்தா, ‘அதாரு அதாரு’னு நம்ம பாடகர் விஜய் பிரகாஷ், ஃபுல் எனர்ஜியோட பாடி, ரசிகர்களை உற்சாகப்படுத்திட்டு இருந்தார். ஆஸ்கர் சாங் ‘ஜெய் ஹோ’ பாடலை பாடி, முடிச்சிட்டு கிளம்பின விஜய் பிரகாஷை மறிச்சு, சில ஜாலி கேள்விகள் கேட்டோம்!

‘‘தல, தளபதி ரெண்டு பேருல, உங்க குரல் யாருக்கு ரொம்பப் பொருத்தமா இருக்குனு நினைக்கிறீங்க?’’

‘‘சூப்பர் ஸ்டார், உலக நாயகன், அஜித் சார், விஜய் சார் எல்லோருக்கும் பாடியிருக்கேன். ஒரு பாடகனா என்னோட குரல் எல்லோருக்கும் சூட் ஆகுறதுதான் எனக்கு சந்தோஷம்!’’

‘‘பல மொழிகள்ல பாடின நீங்க, நொந்து நூடுல்ஸ் ஆன மொழி எது?’’

‘‘அம்மா திருச்சி, அப்பா ஆந்திரா, நான் வளர்ந்ததெல்லாம் மைசூர். அதனால தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்த மூன்று மொழிகளும் எனக்கு ஓ.கே! மலையாளத்துல பாடக் கொஞ்சம் கஷ்டப்படுவேன்.

‘‘உங்க குரலுக்குப் பொருத்தமான ஜோடி பெண் குரல் யார்?’’

‘‘ஏழெட்டு பேர் இருக்காங்க. ஷ்ரேயா கோஷலோட ரசிகன் நான். அவங்களோட பாடின டூயட்கள் செம ஹிட்!’’

‘‘உங்க மனைவி கோபப்பட்டா, அவங்கள சமாளிக்க என்ன பாட்டுப் பாடுவீங்க?!’’

‘‘பாட்டுப் பாடி சமாதானப்படுத்துறது எல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். ரியல் லைஃப்ல, ‘என்னை மன்னிச்சிரும்மா!’னு ஸாரி கேட்டு சரண்டர் ஆகுறதைத் தவிர வேற வழி இல்ல. இருந்தாலும் நான் பாடினதுல அவங்களுக்குப் புடிச்ச பாட்டு... `இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?' (`மரியான்' பட பாடல்).’’

‘‘நீங்க அதிகமா கேக்குற அல்லது முணுமுணுக்குற பாடல்?’’

“மன மன மன மென்டல் மனதில்... (`ஓ.கே. கண்மணி' பட பாடல்)!’’

‘‘இசை தவிர என்ன பிடிக்கும்?’’

‘‘பேட்மின்டன். கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரைக்கும் வெறித்தனமா விளையாடிட்டு இருந்தேன். ஒரு பிரேக்குக்கு அப்புறம், இப்போ மறுபடியும் தொடங்கியிருக்கேன்!’’

‘‘எப்பவுமே எப்படி இப்படி யூத்ஃபுல்லா இருக்கீங்க?’’

‘‘கேள்வியே தப்பு. இதை வயசானவங்ககிட்ட கேக்கணும். யூத், யூத்ஃபுல்லாதானே இருப்பாங்க?!’’

‘‘விஜய் பிரகாஷுக்கு... த்ரிஷாவா இல்லனா நயன்தாராவா?’’

‘‘எனக்கு எப்பவுமே ஏஞ்சலினா ஜோலிதான்!’’

மொக்கை கேள்விகளையும் முகம் மலர்ந்து எதிர்கொண்ட விஜய்க்கு, க்ளாப்ஸ்!

ஜெ.விக்னேஷ், வெ.மோ.ரமணி, படங்கள்: ச.பிரசாந்த்