Published:Updated:

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

Published:Updated:

க்கத்து ஸ்டேட்களைப் பதறவைக்க ஆரம்பித்திருக்கும் குட்டி அழகுப்புயல்கள் இவர்கள்...

சாண்டல்வுட் நபா நடேஷ் 

அக்கட தேசத்து அழகிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ங்களூரு மல்லிகை. மாடலிங் மங்கை. 20 வயசுப்புயல். 2013-ல் ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ டாப் 11 அழகிகளுள் ஒருவர். நம் ஊர் கூத்துப்பட்டறை போல கர்நாடகத்தில் ‘அபிநய தரங்கா’வில் நடிப்புப் பயின்றவர். கன்னட தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பிரகாஷ் பெலவாடியின் பயிற்சிப்பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட வைரம். உலகப் புகழ்பெற்ற சாந்திநிகேதனில் ரவீந்திரநாத் தாகூரின் நாடகமான ‘கோரா’வை அரங்கேற்றி அசத்தியவர். ‘ப்ரீத்தி கீதி இத்யாதி’ என்ற படத்தில் நாடகக் கலைஞராக கெஸ்ட்ரோல் செய்தவருக்கு இந்த ஆண்டு அடித்தது கமர்ஷியல் ஜாக்பாட். ஷிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக இந்த வருடம் ரிலீஸான ‘வஜ்ராக்யா’ பாக்ஸ் ஆபீஸில் இன்னமும் கில்லியடிக்கிறது. நபாவுக்கு இப்போ மார்க்கெட் உச்சத்தில். நபா, கோலிவுட்டுக்கு ஒரு தபா வாப்பா!

டோலிவுட்  ஷ்ரியா சர்மா

அக்கட தேசத்து அழகிகள்!

மாச்சல் பிரதேசத்து அழகி. டி.வி விளம்பரங்களில் நமக்கெல்லாம் அறிமுகமான குட்டிப்பாப்பா. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா-ஜோவின் மகள். ‘அந்தக் குட்டிப்பொண்ணா இது?’ என ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்காமல் மேலே படிக்கவும். விளையாட்டாய்க் கிடைத்த ரஸ்னா விளம்பரத்தில் பச்சக்கென இந்தியா முழுக்க ரீச் ஆனவர். ராணுவ அப்பாவுக்கு காஷ்மீரிலிருந்து ஹைதரபாத்துக்கு மாற்றல் கிடைக்க, மகளுக்குக் கிடைத்தது டோலிவுட் வாய்ப்பு. ஒரே நேரத்தில் தெலுங்கு, இந்தி என சீரியல் குழந்தை நட்சத்திரமாக பிஸியாய் கலக்கினார். ‘இண்டியன் டெலிவிஷன் அகாடமி அவார்ட்’ வரை பாக்கெட் செய்தது இந்தச் சுட்டி. குட்டி ஸ்டாராய் ஜொலித்தவரை நாம் கடைசியாக ‘எந்திரன்’ க்ளைமாக்ஸில் மியூஸியத்தில் சிட்டி ரோபோவின் ஸ்பேர் பார்ட்ஸை ஆச்சர்யமாகப் பார்க்கும் மழலையாகப் பார்த்தோம். பொண்ணு இப்போ கிளாமர் ஹீரோயின். ‘காயகுடு’ என்ற படத்தில் நடித்து மேலும் பல கிளாமர் வாய்ப்புக்காகக் காத்திருக்குது பொண்ணு. இதெல்லாம் பாவம் மை சன்!

மல்லுவுட் சிஜா ரோஸ் 

அக்கட தேசத்து அழகிகள்!

கோழிக்கோடு குயின். ஓமனில் வளர்ந்தவர். சின்னச் சின்னதாய் விளம்பர மாடலிங்கில் ஈடுபட்டவருக்கு துல்ஹர் சல்மானின் தங்கை ரோல் ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில் கிடைத்தது. அப்பாவுக்காக ஜர்னலிஸம் படித்தவர் நமக்காக இந்தியாவில் டேரா போட்டார். தமிழில் ‘கோழிகூவுது’ (புதுசு பாஸ்!) என்ற அடாசு படத்தில் நடித்துக் காணாமல் போனார். நல்லவேளையாக மலையாள உலகம் மீண்டும் வாரி எடுத்துக்கொண்டது. ‘நீ கோ ஞா சா’, ‘அன்னையும் ரசூலும்’, ‘என்ட்ரி’, ‘விர்ஜின் ரோடு’, ‘மிலி’, ‘நெல்லிகா’, ‘என்னுநின்டே மொய்தீன்’ என ஓடிய படங்களில் வாய்ப்புகள். இப்போது இந்திப்படம் ஒன்றிலும், மலையாளப் படம் ஒன்றிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழுக்கு வா தங்கம்!

- ஆர்.சரண்