முதல் படமான ‘பென்சில்’ இன்னமும் வெளியாகவில்லை, ஆனாலும் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களால் இளம் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ஆகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ‘புரூஸ் லீ’, ‘கெட்ட பையன்டா கார்த்தி’ படங்களைத் தொடர்ந்து ‘டார்லிங்’ இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், லைக்கா தயாரிக்கும் பிரமாண்ட ஆக்‌ஷன் படத்திலும் நடிக்க இருக்கிறாராம். அந்தப் படத்தையும் ‘டார்லிங்’ இயக்குநர் சாம் ஆண்டன்தான் இயக்குவார் எனச் சொல்கிறார்கள். இசை என்னாச்சு?

சினிமால்!

 புகழின் உச்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ரசிகர்களைத் தவிக்கவிட்டு, நடிப்பதை நிறுத்தி, அவ்வப்போது தலைகாட்டிவிட்டுப் போனவர் கஜோல். தற்போது ஷாரூக்கானுடன் ‘தில்வாலே’ படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டின் ஹாட் ஜோடியான ஷாரூக்-கஜோல் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்றியிருக்கிறது. வாம்மா மின்னல்!

 ‘சிங் இஸ் பிலிங்’ படத்துக்குப் பிறகு ஏமி ஜாக்ஸன் இந்தியில்தான் கவனம் செலுத்துவார் என நினைக்க, அவருக்குத் தமிழ் சினிமாதான் ரொம்பப் பிடிச்சிருக்காம். ‘தங்கமகன்’, ‘கெத்து’, விஜய் படம் முடிந்து அடுத்தடுத்து நிறைய இளம் ஹீரோக்களின் படங்களிலும் கமிட்டாகியுள்ளாராம். இது தவிர சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்-2’ விலும் முக்கிய கேரக்டராம். அப்போ, இன்னும் ரெண்டு வருஷம் இங்கதான். வெள்ளைக்காரத் தமிழச்சி!

 ‘ ‘காக்கா முட்டை’ படத்தில் சேரிப்பெண்ணாக, இரண்டு மகன்களுக்கு அம்மாவாக நடித்தபோது வேண்டாம் என நிறையப் பேர் தடுத்தார்கள்’ என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் தற்போது அம்மணி ஹேப்பி. அதே பாணியில்தான் சமந்தாவும் மேக்கப் இல்லாமல், சேரிப்பெண்ணாக நடிக்க இருக்கிறாராம். வெற்றிமாறன், தனுஷ் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால் எந்தக் கவலையும் இன்றி டபுள் ஓகே சொல்லி விட்டாராம். தேசிய விருது கிடைக்கிறதுல பிரச்னை வரக் கூடாதுனு டப்பிங்கைக்கூட அவரேதான் பேச இருக்கிறாராம். பொண்ணு நல்ல உஷாருதான்!

 அஜித்தைப் போலவே நடிகை ராய் லக்ஷ்மிக்கும் காலில் ஆபரேஷன் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் ‘சர்தார் கப்பார் சிங்’, ‘ஜூலி 2’ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு. இடைவிடாமல் நடனமாடிக்கொண்டிருந்தவர், திடீரென வலி பொறுக்க முடியாமல் விழுந்துவிட, ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். கால் நரம்பு பாதிப்புக்குள்ளானதால் தற்போது ஆபரேஷன் செய்துகொண்டிருக்கிறாராம். தல வழி!

சினிமால்!

 ரஜினி டைப் மாஸ் படங்களையும், கமல் டைப்பில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் ‘பேலன்ஸ்’ செய்து நடித்துவரும் தனுஷ் தற்போது இந்த இரண்டையும் ஒரே படத்தில் செய்ய இருக்கிறாராம். துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அதில் ஒரு கேரக்டர் ரஜினி மாதிரி மாஸ், மற்றொன்று கமல் மாதிரி க்ளாஸ். அதற்காக இப்போதே ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்து விட்டாராம். இதில் த்ரிஷா ‘நீலாம்பரி’ டைப் வில்லியாம். ஆஹா..!

 தேசிய விருது பெற்ற வித்யாபாலனுக்கு அந்த ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் ஏண்டா நடித்தோம் என்று ஆகிவிட்டதாம். அந்த அளவுக்கு நிறைய வாழ்க்கை வரலாற்றுக் கதைகளில் நடிக்கச்சொல்லிக் கேட்டு நச்சரிக்கிறார்களாம். ‘இந்திரா காந்தி, பெனாசிர் பூட்டோ, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, சுசித்ரா சென் என நிறையக் கதைகளில் நடிக்கக் கேட்கிறார்கள். ஆனால், எனக்கு அதிலெல்லாம் நடிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. மேலும், பட்ஜெட், காலம் அதிகமாகும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்கிறாராம். அடுத்து...

 ‘தூங்காவனம்’ படத்தால் யார் ஹேப்பியோ, இல்லையோ... மதுஷாலினி ரொம்பவே ஹேப்பியாம். ஒரிஜினல் ‘ஸ்லீப்லெஸ் நைட்ஸ்’ படத்தில் ஓரிரண்டு காட்சிகள் வரும் கேரக்டரில்தான் நடிக்கப் போகிறோம் எனத் தெரிந்தும், கமல் படம் என்பதால் ஒப்புக்கொண்டாராம் மது. ஆனால், ‘தூங்காவனம்’ படத்தில் மதுஷாலினியின் கேரக்டரைக் கொஞ்சம் நீட்டி, முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கமல். அதன் விளைவு, தற்போது இரண்டு பட வாய்ப்புகள் வர, உடனடியாக ஓகே சொல்லியிருக்கிறாராம். இனி தூங்காமனம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு