Published:Updated:

கோட்டுக்கு அந்தப்பக்கம் அஜித், இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்.!

கோட்டுக்கு அந்தப்பக்கம் அஜித், இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ப்போவெல்லாம் படத்தின் கதைக்கு உழைக்கிறார்களோ இல்லையோ, போஸ்டர் டிசைன் செய்யவும், படத்துக்குத் தலைப்பு வைக்கவும் தலைகீழாகத் தண்ணி குடிக்கிறார்கள். சமீபத்தில் இடதுபக்கம் எம்.ஜி.ஆரும், வலது பக்கம் அஜித்தும் சிரிக்க, ‘வாத்யாரும் தலயும்’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் கண்ணில்பட, அந்தப் படத்தின் இயக்குநர் சூர்யாவிடம் பேசினேன்.

கோட்டுக்கு அந்தப்பக்கம் அஜித், இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்.!

‘‘சென்னைதான் பிரதர் நம்ம பூர்வீகம். அப்பா நாடகக் கலைஞர். தாத்தா சிற்பக் கலைஞர். குடும்பமே கலைக்குடும்பமா இருக்கிறப்போ, நமக்கு மட்டும் ஆர்வம் இல்லாம போகுமா? அதான், இன்ஜினீயரிங் முடிச்சுட்டு சினிமாவுக்கு வந்துட்டேன். ‘தூத்துக்குடி’ படத்துல இருந்து ‘பூவா தலையா’ படம் வரை பல படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். இது என்னுடைய முதல் படம். போஸ்டரையே மக்கள் நின்னு பார்க்கணும்னு உட்கார்ந்து யோசிச்சேன். அப்போ சிக்கினதுதான் ‘வாத்யாரும் தலயும்’ டைட்டில். இப்போ ஊர் பூரா நம்ம படத்தைப் பத்திதான் பேசிக்கிறாங்க’’ என்று ஆரம்பிக்கிறார் சூர்யா.

கோட்டுக்கு அந்தப்பக்கம் அஜித், இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்.!

‘‘தலைப்பு மட்டுமில்லை. படமே வித்தியாசமா இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு காமெடிப் படம் மாதிரிப் போயிட்டு இருக்கும். மெயின் கேரக்டர் வந்ததும் ஆக்‌ஷன் படம் மாதிரிப் போகும். கடைசி அரைமணி நேரத்துல ஃபேன்டஸி ஹாரரா இருக்கும். இப்படியெல்லாம் இதுவரை யாருமே டிரை பண்ணிப் படமெடுத்தது இல்லைனு நினைக்கிறேன். சுருக்கமா சொன்னா, ஒரே கல்லுல ரெண்டு இல்லை, மூணு மாங்கா அடிச்சுருக்கேன். சென்னையில இருக்கிற ஒரு குப்பம்தான் கதைக்களம். அந்தக் குப்பத்துல இருக்கிற எல்லோருமே ஆதரவற்றவர்கள் என்பதால், அதுக்கு ‘அனாதைக் குப்பம்’னு பேரு. அங்கதான் நம்ம ஹீரோக்கள் ரெண்டு பேரும் இருக்காங்க. ஒருத்தர் எம்.ஜி.ஆர் மாதிரி. இன்னொருத்தர் ‘தல’ மாதிரி. ரெண்டு பேருக்கும் ரெண்டு நண்பர்கள். இந்த நாலு பேர்தான் படத்தோட முக்கியமான கதாபாத்திரங்கள். அனாதையா இருக்கிற இவங்க எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் சொந்தமாகி, ‘அனாதை குப்பம்’ ஏரியாவை ‘அண்ணாத்த குப்பம்’னு மாத்துறாங்க. அந்தச் சமயத்துல வில்லன் மூலமா வருது ஒரு பிரச்னை. ஹீரோக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வெச்சு, அண்ணாத்த குப்பத்தோட கெத்தைக் காப்பாத்துறதுதான் கதை. போஸ்டரை நல்லா கவனிச்சுப் பாருங்களேன். ‘அண்ணாத்த குப்பத்துல வாத்யாரும் தலயும்’னுதான் டைட்டில் இருக்கும்” எனக் குஷியானவரிடம் ‘‘இந்தக் கதைக்கு ஏன் பாஸ் எம்.ஜி.ஆரையும், அஜித்தையும் இழுத்து விட்டீங்க?’’ எனக் கேட்டேன்.

கோட்டுக்கு அந்தப்பக்கம் அஜித், இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்.!

‘‘ஆக்சுவலா, படத்தோட கதையை ‘17டி’ பஸ்ஸுல போகும்போதுதான் எழுதினேன். அந்த பஸ்ஸுல ‘தல’ ரசிகர்கள் அதிகம் வருவாங்க. சில பேர் எம்.ஜி.ஆர் பாட்டா பாடிக்கிட்டு வருவாங்க. தவிர, சினிமாவுல இருக்கிற பலரே ‘எம்.ஜி.ஆருக்கு இருந்த இடத்தை, அஜித் பிடிச்சிக்கிட்டு இருக்கார்’னு

கோட்டுக்கு அந்தப்பக்கம் அஜித், இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்.!

மனசாரப் பாராட்டியிருக்காங்க. அதனாலதான், ரெண்டு பேரையும் கோத்துவிட்டுக் கதை எழுதினேன். ஊறுகாய் மாதிரி தொட்டுக்கலை பாஸ்... உண்மையிலேயே எம்.ஜி.ஆரையும், அஜித்தையும் பெருமைப்படுத்துற மாதிரி படத்துல பல சீன்ஸ் வெச்சுருக்கேன். பெயரைப் பயன்படுத்தினதுக்குப் பரிகாரமா ரெண்டு பேருக்குமே படத்துல மாஸ் ட்ரீட்மென்ட் கொடுத் திருக்கேன்’’ என்றவர்,

‘‘படத்தோட மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சுது பாஸ். பொங்கலுக்கு ரிலீஸ் பண்றோம். இப்போவெல்லாம் பெரிய படங்களே ஓடமாட்டேங்குது. முழுக்க புதுமுகங்கள் நடிச்சிருக்கிற என் படம் எம்மாத்திரம்? அதனாலதான், டைட்டிலுக்குத் தகுந்த மாதிரி எம்.ஜி.ஆரையும், அஜித் சாரையும் வெச்சே போஸ்டர்ஸ் அடிச்சேன். சென்னையில் முக்கியமான ஏரியாக்கள் மட்டுமில்லாம, அஜித் வீட்டுல அஞ்சு போஸ்டர்ஸ், விஜய் வீட்டுல அஞ்சு போஸ்டர்ஸ் ஒட்டிட்டு வந்திருக்கேன். பல பேர் பாராட்டினாங்க.  ஆனா, பல இடத்துல உங்க ‘டைம் பாஸ்’ போஸ்டரை எங்க ‘வாத்யாரும் தலயும்’ போஸ்டர்ஸ் மேல ஒட்டிட்டீங்க. அது எனக்குப் பெரிய வருத்தம் பாஸ். நாளைக்கும் ஒட்டப்போறோம். மறுபடியும் வந்து மறைச்சு ஒட்டிடாதீங்க!’’ கொஞ்சம் கோபமாகவே கோரிக்கை விடுத்தார் சூர்யா.

- கே.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு