Published:Updated:

தனுஷ் எனக்கு ரெண்டு சங்கிலி போட்டார்!

தனுஷ் எனக்கு ரெண்டு சங்கிலி போட்டார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரோபோ சங்கர்... ‘மாரி’ படத்துக்குப் பிறகு பரபர காமெடிப் பட்டாசு கொளுத்த ஆரம்பித்தவருடன் ஒரு மினி பேட்டி!

தனுஷ் எனக்கு ரெண்டு சங்கிலி போட்டார்!

‘‘வாங்க சனிக்கிழமை... எப்படி இருக்கீங்க?’’

‘‘கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன் நண்பா. ‘மாரி’ படத்துல என் பேரு சனிக்கிழமைங்கிறதை ஞாபகப்படுத்திக் கூப்பிட்டீங்களே, ஸ்பெஷல் தாங்க்ஸ்.”

‘‘தனுஷுக்கு இப்போ நீங்க செம ஃப்ரெண்டாமே?”

தனுஷ் எனக்கு ரெண்டு சங்கிலி போட்டார்!

‘‘தனுஷ் சாருக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். பாடி பில்டரா, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டா, ஸ்டேஜ் பெர்ஃபார்மரா எவ்வளவோ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படம் என்னோட சினிமா வாழ்க்கையை வேற லெவல்ல மாத்திடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல என்னோட ஒன்லைன் ஜோக்குகளை ரொம்ப உற்சாகப்படுத்தி ‘இது நல்லா இருக்கே...இதையே பேசிடுங்க ரோபோ ஜி’னு செமையா என்கரேஜ் பண்ணினதே தனுஷ் சார்தான். தினமும் ஷூட்டிங் மாதிரியே இருக்காது. வீடு மாதிரிதான்  ரகளை அடிச்சிட்டு இருப்போம். ‘உங்களுக்கு என்னெல்லாம் பேசணும்னு தோணுதோ பேசுங்க’னு தனுஷ் சார் கொடுத்த சுதந்திரம்தான் இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு. இப்போ அவரோட நட்புப் பட்டியல்ல என்னைச் சேர்த்துக்கிட்டார். அன்புல திக்குமுக்காட வைக்கிறார் மனுஷன். ‘மாரி’ படம் சக்சஸ்ஃபுல்லுக்காக எனக்கு தங்கச் சங்கிலி பரிசு கொடுத்தார்னு நியூஸ் படிச்சிருப்பீங்க. என்னோட திருமண நாளுக்கு சமீபத்துல நானும் என் மனைவியும் மத்தியானம் லஞ்ச்சுக்கு இன்வைட் பண்ணி இருந்தோம்.  அவர் வெஜிடேரியன் மெனுதான் சாப்பிடுவார்னு அந்த அயிட்டங்கள்தான் செஞ்சிருந்தோம்.ரொம்ப சந்தோஷமாகிட்டார். போகும்போது இன்னொரு தங்கச் சங்கிலியை டபக்குனு என் கழுத்துல மாட்டிவிட்டார். நான் ஷாக் ஆகிட்டேன். சின்னதா ஒரு பாசிட்டிவ் விஷயம் நடந்தாலும் சொல்லுவேன். செமையா உற்சாகப்படுத்தி ‘கலக்குங்க ரோபோ’னு வாழ்த்துவார். அவரோட அடுத்த படத்தின் அழைப்புக்காக காத்திருக்கேன்.”

‘‘ரொம்ப சீரியஸாவே பேசுறீங்களே... ஆனா, காமெடியில பட்டையைக் கிளப்புறீங்களே?”

தனுஷ் எனக்கு ரெண்டு சங்கிலி போட்டார்!

‘‘ஆமா ஜி. இது கடவுள் கொடுத்த பரிசு. நிச்சயம் டயலாக் இல்லாம பாடி லாங்வேஜாலேயே என்னால சிரிக்க வைக்க முடியும். அதைத் தக்க வெச்சுக்க இப்போ ரொம்பப் போராடுறேன். ஏன்னா, ரசிகர்கள் இப்போ செம ஷார்ப். கொஞ்சம் ரிப்பீட் ஜோக்ஸ் அடிச்சாலோ இல்லை மொக்கை போட்டாலோ கலாய்ச்சி எடுத்திருவாங்க. காலையில பேப்பர் படிக்கிறதுல ஆரம்பிச்சு நெட்ல என்ன இப்போ ட்ரெண்டுங்கிற வரைக்கும் தேடித்தேடிப் பார்க்க வேண்டி இருக்கு. ஸ்கூல் பசங்களே நம்மளைக் காலி பண்ணிடுவாங்க. அவ்ளோ திறமைகள் வெளியில கொட்டிக்கிடக்கு. நிறைய திறமையான பசங்க யூடியூப்கள்ல ஒளிஞ்சுக்கிட்டு இருக்காங்க. நான் என்னை அப்டேட் பண்ணிக்கலைனா நிச்சயம் நான் போயிட்டு இன்னொரு ஆள் என்னைவிட பல மடங்குத் திறமையோட வருவாங்க. எல்லோருக்கும் தனித்தனி அடையாளம் இருக்கு. ‘ரோபோ சங்கரா..? ‘ஏ புள்ள’னு கேப்டன் மாடுலேஷன்ல பேசுவானே?’னு கேட்டுடக் கூடாதுல்ல... இவனால அழ, சிரிக்க, வில்லத்தனம் காட்ட முடியும்னு தெரியணும்.’’

‘‘விஜய் சேதுபதியுடன் ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பண்ணி இருந்தீங்க...அவர்கூட நட்பு உண்டா?”

‘‘அவரைப்போல ஒரு குழந்தை மனம்கொண்ட ஆளை நான் பார்த்ததே இல்லை. ராஜபாளையத்துல சாதாரண குடும்பப் பின்னணியில இருந்து வந்து இன்னிக்கு நடிப்பாலேயே கலக்கி எடுக்கிறார். இன்னும் உச்சங்கள் தொடுவார்.’’

‘‘நீங்க கமல்ஹாசனோட வெறித்தனமான ரசிகர்னு தெரியும். என்ன சொல்றார் கமல் சார்?”

‘‘ ‘சினிமாவை சின்ஸியரா செய்’னு சொல்றார். கன்னம் தொட்டு வாழ்த்தினார். அவரைப்போல மேதைகள் அங்கீகரிச்சிருக்காங்க. எனக்கான பாதை இப்போ தெளிவா தெரியுது. அரை டஜன் படங்கள் காத்திருக்கு. பொறுமையா அருமையா பண்ணணும் சகோ!”

-சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு