ம்ம ஊர் சீரியல்களைப் பார்த்திருப்பீங்க. இங்கிலீஷ் சீரியல்களைப் பார்த்திருக்கீங்களா? புரியுதோ இல்லையோ அதில் நடிக்கும் அழகிகளுக்காகவே பார்க்கலாம். அப்படி அழகோ அழகாய் இருக்கும் அம்சமான இங்கிலீஷ் சீரியல் கிளிகள் இவர்கள்...

டேனியல் பனபகேர் 

அழ வைக்காத அழகிகள்!

சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும், பனபகேர் 2002-ம் ஆண்டு முதலே தொலைக்காட்சித் தொடர்களில் பயங்கர பிஸி. ‘தி ஏரோ’ தொடரில் கௌரவத் தோற்றத்தில் நடித்த பனபகேருக்கு, அதன் தொடர்ச்சியான ‘தி ஃப்ளேஷ்’ தொடரில் எல்லா எபிசோடுகளிலும் நடிப்பது மாதிரியான வேடம் கிடைத்து இருக்கிறது. பட்டாசு சும்மா கொளுத்தாம வெடிக்கும்!

லாரன் கோஹன் 

அழ வைக்காத அழகிகள்!

‘தி வாக்கிங் டெட்’, ‘சக்’, ‘தி வாம்பயர் டைரீஸ்’ என பல தொலைக்காட்சித் தொடர்களில் கிறங்கடித்தவர் லாரன். ‘தி வாம்பயர் டைரீஸ்’ தொடரில் 560 வயது காட்டேரியாக மிரட்டி இருப்பார். (அழகான காட்டேரி ப்ரோ! ). நடிப்பதற்கு முன் மாடலிங்கில் பொண்ணு பயங்கர பிஸியாம். கிக் பாக்ஸிங்கும் தெரியுமாம். ஐ டோண்ட் கேர்!

ஜெனிஃபர் கார்பென்ட்டர்

அழ வைக்காத அழகிகள்!

‘டெக்ஸ்டர்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் அசத்தினார் இந்த அமெரிக்க நடிகை. தொடரில் அவரது அண்ணனாக வரும் மைக்கேலை நிஜத்தில் காதலித்து, பின் சில பிரச்சனைகளால் பிரியவும் செய்தார். இருந்தும், தொடரின் 96 எபிசோடுகளிலும் பொண்ணு ஆஜர். தொடர்  முழுக்கவே காவல் அதிகாரி வேடம் என்றாலும், படுக்கை அறைக் காட்சிகளில் சீசனுக்கு ஒருவரோடு கலக்கி இருப்பார் ஜெனி. இப்போது ‘லிமிட்லெஸ்’ தொடரில் பொண்ணு ரொம்ப பிஸி. எதுக்குமே லிமிட் இல்லை!

எமிலி வான்கேம்ப் 

அழ வைக்காத அழகிகள்!

‘எவெர்வுட்’, ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’, ‘ரிவெஞ்ச்’ எனப் பல தொடர்களில் நடித்தவர் எமிலி வான்கேம்ப். கனடா அழகியான எமிலி சிறுவயதில் இருந்தே பாலே டான்சராம். தன் முதல் சம்பளத்தில் எமிலி ஆசையாக வாங்கியது கேமராதானாம். இருந்தும் அவரை யாரும் படம் பிடிப்பது பிடிக்காதாம் இதெல்லாம் தப்பு எமிலி!

- கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு