இந்திய சினிமாவுக்கு வயது நூறு. மௌனப்படங்கள் 1912 முதல் இந்தியாவில் உருவாகத் தொடங்கின. வட நாட்டில் பால்கே, தமிழகத்தில் சாமிக்கண்ணு வின்சென்ட் போன்றவர்கள் மௌன யுகத்தில் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினர்.

1930-களில் கேரள மண்ணில் முதல் சினிமாவை உருவாக்கியவர் ஜே.சி.டேனியல் என்ற தமிழன். தனது திரைப்படத் தயாரிப்புக்காக சொத்துகளை இழந்து வறுமையில் வாடிய டேனியல், கேரள அரசிடம் நிதி உதவி கோரியபோது, அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது அன்றைய அரசு. தனது வாழ்நாளில் எவ்வித அங்கீகாரத்தையும் பெறாமல் காலமாகிப் போன டேனியல், இன்றைக்கு 'மலையாள சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படுவது காலத்தின் வேடிக்கை விளையாட்டு.

பிரபல மலையாள இயக்குனர் கமல், ஜே.சி.டேனியலின் வாழ்க்கையை 'செல்லுலாய்ட்’ என்ற பெயரில் தயாரித்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் டேனியலாக நடிப்பவர் நடிகர் பிருத்விராஜ். கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற ஊரில் ஒரு மருத்துவரின் மகனாகப் பிறந்த ஜோசப் செல்லையா டேனியல், சிறுவயதில் இருந்தே கலைகள் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். குறிப்பாக களரி, சிலம்பாட்டம், வர்மக்கலை போன்றவற்றின் மீது அதீத ஆர்வம்.

திருவனந்தபுரத்தில் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தபோது, நகரில் திரையிடப்படும் மௌனப் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவார். வர்மக்கலையைப் பற்றி டாகுமென்ட்ரி படம் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தார் டேனியல். சென்னையிலும், மும்பையிலும் மட்டுமே மௌனப் படங்கள் அந்நாளில் தயாரிக்கப்பட்டு வந்தன.

டேனியல் தனது ஆவணப் படத்துக்காக சென்னை, மும்பை ஸ்டுடியோக்களை அணுகினார். மும்பை ஸ்டுடியோவில் அனுபவம் பெற்றதும், சொந்தமாக ஒரு சினிமா ஸ்டுடியோவை தொடங்கும் முடி வோடு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார்.

வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த டேனியல், தனது பூர்வீகச் சொத்துகளை விற்று 1928-ம் ஆண்டு திருவனந்தபுரம் பட்டம் பகுதியில் 'திருவாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ்’ என்ற ஸ்டுடியோவைத் தொடங் கினார். கேரளத்தின் முதல் ஸ்டுடியோ இதுவே. ஆவணப்படத்துக்கு முன்பாக நல்ல கதையம்சம் கொண்ட ஒரு திரைப் படத்தைத் தயாரிக்க நினைத்தார்.

'விகதகுமாரன்’ என்ற பெயரில் ஒரு திரைக்கதையை டேனியலே எழுதி னார். திருவனந்தபுரத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் ஒரு சிறு வனின் வாழ்க்கையைப் பற்றிய கதை அது. அதற்கு நடிகையை ஏற்பாடு செய்வதுதான் பெரும் சிரமமாக இருந்தது. அந்தக் காலத்தில் பெண்கள் சினிமாவில் நடிப்பது கேவலமாகப் பார்க்கப்பட்டது. அந்தக் கால நாடகங்களில் ஆண்கள்தான் பெண் வேடமிட்டு நடித்தனர். டேனிய லின் படத்தில் நடிக்க உள்ளூரில் எந்தப் பெண்ணும் முன் வராததால், மும்பையைச் சேர்ந்த லானா என்ற ஆங் கிலோ இந்தியப் பெண்மணியை ஏற்பாடு செய்தார்.

அந்தக் காலத்திலேயே ஐந்தாயிரம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்ட லானா, முதல் நாளிலேயே தனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை என்று கூறி பணத்தையும் திருப்பித் தராமல் மும் பைக்குப் போய்விட்டார். வறுமை காரணமாக ரோசி என்ற பெண்ணை அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி இந்தப் படத்தில் நடிக்க வைத்தனர், ஆனால் ரோசிக்கு ஊரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பணத்துக்காக அதையும் தாண்டி நடித்தார். படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கினார் டேனியல்.

களரி அடிமுறையுடன் காட்டிய சண்டைக் காட்சிகள் படத்தில் சேர்க்கப் பட்டன. அனுபவம் இல்லை என்பதால் தேவைக்கு அதிகமாகப் பணத்தை செலவு செய்துவிட்டார்.

1930-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி 'விகதகுமாரன்’ மௌனப்படம் வெளியானது. படத்தில் ரோசி தோன்றும் காட்சிகளின்போது சில பார்வையாளர்கள் கூச்சல் போட்டு ரகளை செய்தனர். நான்காவது நாளின்போது திரையில் கற்கள் வீசப்பட்டதால் திரை கிழிந்து காட்சி நிறுத்தப்பட்டது. நிறைய இடங்களில் படத்தைத் திரையிட முடியவில்லை. அதன் பிறகு தென் கேரளத்தின் சில நகரங்களில் மட்டும் படம் திரையிடப்பட்டது. ஆனால் போட்ட பணத்தில் பாதிகூட தேறவில்லை. பெரும் கடன் சுமைக்கு ஆளான டேனியல் தனது ஸ்டுடியோவை விற்றுவிட்டு, பல் மருத்துவம் படிக்க மும்பைக்கு போய்விட்டார். அந்தப் படத்தின் படச்சுருள் கூட யாரிடமும் இப்போது கிடையாது.

நடிகை ரோசியின் நிலையோ பரிதா பம். அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. தெருவில் நடக்கும்போது கற்களும், வசை சொற்களும் ரோசியை நோக்கிப் பாய்ந்தன. ஒரு கும்பல் அவரது வீட்டுக்கு தீ வைக்க முயற்சி செய்தது. உரிய நேரத்தில் போலீஸார் வந்ததால் அந்தக் குடிசை வீடு தப்பியது. கடைசியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருடன் ரோசி ஊரைவிட்டே ஓடிப் போய்விட்டார். பின்னர் அவர் திருச்சியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

படப்பிடிப்பின்போது டேனியலுக்கு உதவியாளராக இருந்த அவரது உறவினர் சுந்தர்ராஜ் என்பவர்தான் கேரளத்தின் இரண்டாவது சினிமா தயாரிப்பாளர். இவரது தயாரிப்பில் 1933-ம் ஆண்டு 'மார்த்தாண்டவர்மா’ என்ற திரைப்படம் வெளியானது. ஒரு நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டதால் காப்புரிமை வழக்கில் சிக்கிய இந்தப் படம் நீதிமன்றத் தடையை சந்தித்தது. தென் இந்தியாவில் அன்று தயாரிக்கப்பட்ட எந்தவொரு மௌனப் படத்தின் படச்சுருளும், கிடைக்காமல் போன நிலையில், 'மார்த் தாண்டவர்மா’ படத்தின் படச்சுருள் மட்டுமே பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. புனே நகரில் உள்ள சினிமா ஆவணக் காப்பகத்தில் இந்தப் படத்தின் படச்சுருள் உள்ளது.

பல் மருத்துவம் படித்துவிட்டு ஊர் திரும்பிய டேனியல், மதுரையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்ந்து... மருத்துவத் துறையில் புகழ்பெற்று பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டார். மதுரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தனது மருத்துவமனையில் அடைக்கலம் கொடுத்ததால், போலீஸாரின் தொந்தரவுக்கு ஆளானார். காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அரசு பல் மருத்துவராகப் பணிபுரிந்தார்.

ஏவி.எம். மெய்யப்பச் செட்டியார், அக்காலத் தமிழ் சூப்பர் ஸ்டார் பி.யு. சின்னப்பா போன்றோர் எல்லாம் டேனியலின் நண்பர்களாக இருந்தனர். பி.யு.சின்னப்பாவுடனான நட்பு டேனியலுக்குள் புதைந்துகிடந்த சினிமா மோகத்தை மீண்டும் கிளறிவிட்டது. சின்னப்பாவை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு தமிழ் சினிமாவைத் தயாரிப்பது என்ற திட்டத்தில் இறங்கினார். மருத்துவத் தொழிலில் சம்பாதித்த பணத்தையெல்லாம் கொண்டு இந்தத் தயாரிப்பில் பங்குதாரராக சேர்ந்தார். ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தில் பிரச்னை ஏற்படவே, டேனியல் வெறுங்கையுடன் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பினார். அதன் பிறகு கன்னியாகுமரிக்கு அருகில் ஜேம்ஸ் டவுன் என்ற இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனையைத் திறந்தார். ஆனால் முன்பு போல் அவரால் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்க இயலவில்லை. இந்த சமயத்தில் கொட்டாரம் என்ற இடத்தில் களரி மற்றும் சிலம்பாட்ட பயிற்சிக் கூடத்தையும் அவர் நடத்தியிருக்கிறார்.

சினிமா தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் அவரது உடல் நலனைக் குன்றச் செய்தது. படுத்த படுக்கையானார். பக்கவாதம் தாக்கி கண் பார்வையும் பறி போனது. வெளியூர்களில் இருந்து பிள்ளைகள் அனுப்பித் தரும் பணம் மட்டுமே ஒரே வருமானம். சிகிச்சைச் செலவு கூடியதால் அதுவும் போதுமானதாக இல்லை. கேரள அரசிடம் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்த போது, அவரது தாய் மொழி மலையாளம் அல்ல என்று கூறி மனு நிராகரிக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி அவரது உயிர் பிரிந்தது. அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள கல்லறையில், 'கேரள சினிமாவின் தந்தை’ என்று பொறிக்கப்பட்டு, அந்த சாத னையாளர் அடக்கம் செய்யப்பட்டார்.

சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் என்ற பத்திரிகையாளர் டேனியலைப் பற்றியும் 'விகதகுமாரன்’ படத்தைக் குறித்தும் முதன்முதலில் எழுதினார். டேனியலுக்கு கேரள அரசு மூலம் நிதியுதவி கிடைக்கவும் முயற்சிகள் எடுத்தார். கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனிடம் இவர் முறையிட்டபோது 'கன்னியாகுமரிக்காரர் அல்லவா... அவருக்கான வேண்டுகோளை தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும்’ என்று பதில் அளித்ததாக ஒரு தகவல் உண்டு.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் தயாரிப்பில் 1938-ம் ஆண்டு வெளிவந்த 'பாலன்’ என்ற திரைப்படமே கேரளத்தின் முதல் சினிமா என்று எல்லோராலும் சொல்லப்பட்டு வந்தது. சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன்தான், டேனியல் எடுத்த 'விகதகுமாரன்’ தான் மலையாளத்தில் முதல் படம் என்று உணர்த்தினார். அவரைத் தொடர்ந்து மேலும் சில பத்திரிகையாளர்கள் டேனியலைப் பற்றிய தகவல்களை வெளிக் கொணர்ந்தனர். இவர்களின் முயற்சியால் 1991-ம் ஆண்டு டேனியலை 'மலையாள சினிமாவின் தந்தை’ என்று கேரள அரசும் ஏற்றுக்கொண்டு அறிவித்தது. கேரள அரசால் வழங்கப்பட்டுவரும் மலையாள சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது, இப்போது ஆண்டு தோறும் ஜே.சி.டேனியலின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன், டேனியலைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில், ''தான் விதை போட்ட சினிமா சமூகத்தின் ஆதரவோ, மரியாதையோ, அஞ்சலியோ, சிறு உதவியோகூட கிடைக்காமல் டேனியல் மரணத்துக்குக் கீழ்படிந்தார் என்பது நாம் எப்போதும் அவமானத்துக்கு உட்பட வேண்டிய உண்மையாக இருக்கிறது!'' என்று எழுதினார்.

இது, மேதைகளுக்கென்றே விதிக்கப்பட்ட சாபக்கேடு போலும்!