Published:Updated:

சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் மரணம்

விகடன் விமர்சனக்குழு
சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் மரணம்
சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் மரணம்
சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் மரணம்

மதுரை: சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் இன்று  மரணமடைந்தார்.அவருக்கு வயது 76.

மதுரை சின்னசொக்கி குளத்தில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த  வி.என்.சிதம்பரம்,கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட வி.என்.சிதம்பரம், இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.  அவருக்கு கமலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

மரணமடைந்த வி.என்.சிதம்பரத்தின் சொந்த ஊர் புதுகோட்டை மாவட்டம்  பொன்னமராவதியை அடுத்த ராங்கியம் என்ற கிராமம் ஆகும்.

##~~##
சிதம்பரம் தூங்காநகரம் படத்தில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் குணச்சித்திர  வேடங்களிலும் நடித்துள்ளார்.
வி.என்.சிதம்பரம் மரணமடைந்த செய்தி கேட்டு அவரது நண்பர்கள் மற்றும்  தொழிலதிபர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து, பின்னர்  வி.என்.சிதம் பரத்தின் உடல் மதுரையிலிருந்து சொந்த ஊரான ராங்கியத்திற்கு எடுத்து  செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் நாளை தகனம்  செய்யப்படுகிறது.