Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் Season 2 , episode 2

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் Season 2 , episode 2

Published:Updated:

அப்பா கத்துக்கொடுத்த கஸ்டமர் கேர்!

‘‘ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! போன எபிசோட்ல என் ஃபேமிலி, ஸ்கூல் டேஸ் ஸ்வீட் மெமரீஸ் எல்லாம் சொன்னேன். இந்த எபிசோட்ல ரஜினி அப்பா, சிவகுமார் அப்பாவுடனான என் பால்யம், ‘தளபதி’ படத்தை முதன்முதலா தியேட்டரில் பார்த்த அனுபவம், எங்க நாயுடு ஹால் ஷோரூம்ல வேலை பார்த்து சம்பளம் வாங்கின நாட்கள், காலேஜ் லைஃப் பத்தியெல்லாம் கலகலனு பேசுவோம்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கப்பா ராமசுவாமியும், ரஜினி அப்பாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அதே மாதிரி நானும், ஐஸ்வர்யா, சௌந்தர்யாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ரஜினி அப்பா - லதா அம்மாவைப் பொறுத்தவரைக்கும் நான்தான் அவங்களோட மூத்த பொண்ணு. நான், எங்க வீட்டை விட்டா, நாயுடு ஹால் ஷோரூம், இல்லைன்னா ரஜினி அப்பா வீட்டுலதான் இருப்பேன். ரஜினி அப்பா அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்க. அவங்களை ஒரு நடிகர்னு தெரியும். ஆனா, அவரோட சூப்பர் ஸ்டார் இமேஜ் எல்லாம் தெரியாம அவர் மடியில் தவழ்ந்து வளர்ந்த பொண்ணு நான். இதேபோலதான் சிவகுமார் அப்பா வீட்டிலும், நான் அவங்க வீட்டுல ஒரு ஃபேமிலி மெம்பர். சிவகுமார் அப்பாவோட பொண்ணு பிருந்தாவும் நானும் ஸ்கூல் டேஸ்ல இருந்து இப்போ வரை க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.

என்னோட 12 வயசு வரைக்கும் தியேட்டருக்குப் போனதே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? எங்கம்மா என்னையும், அண்ணனையும் டி.வி-யில்கூட படம் பார்க்க விடமாட்டாங்க. அப்புறம் எங்க தியேட்டர்? டி.வி-யில் தினமும் கொஞ்ச நேரம் கார்ட்டூன் பார்க்கலாம், எவ்ளோ நேரம்னாலும் இங்கிலீஷ் நியூஸ் பார்க்கலாம். டி.வி-க்கு பக்கத்துலயே மேனுவல் ரிமோட்டா எங்கமா உட்கார்ந்துட்டு எங்களை கண்டிப்போட வளர்த்தாங்க.

‘தளபதி’ படம் ரிலீஸ் ஆனப்போ, முதல் ஷோவுக்கு லதா அம்மாவும், ஐஸ்வர்யாவும் எங்க அம்மாகிட்ட கேட்டு, என்னை அழைச்சிட்டுப் போனாங்க. அதுவரை ஒரு நடிகர்னு மட்டும் நினைச்சிருந்த எனக்கு, அவரோட மாஸ் என்னனு அன்னிக்குதான் புரிஞ்சது. எங்க கார் தியேட்டர் வாசலுக்குள்ள போகுது. கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், மாலை போடுறதுன்னு ரசிகர்கள் அவ்ளோ உற்சாகமா இருக்காங்க. எனக்கு அந்தக் கொண்டாட்டத்தைப் புரிஞ்சுக்கக் கூட முடியாம, ‘ஏண்டி இப்படியெல்லாம் பண்றாங்க?’னு ஐஸ்வர்யாகிட்ட கேட்டேன். ‘நீ இப்போதானே தியேட்டருக்கு வர்ற, போகப் போக புரியும்!’னு சொல்றா.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

தியேட்டருக்குள்ள போனா, இன்னும் அதிர்ச்சியாயிட்டேன். படம் போட ஆரம்பிச்சதுல இருந்து, படம் முடியுற வரைக்கும் என்னால படத்தை முழுசா பார்க்கவே முடியில. ஃபேன்ஸ் ஒவ்வொரு ஸீனுக்கும் கைதட்டுறது, விசில் அடிக்கிறது, பேப்பரை கிழிச்சி வீசிறதுனு ஒரு திருவிழாவைப் போல அவரோட படத்தைக் கொண்டாடினதைப் பார்த்தப்போ, ‘நம்ம ரஜினி அப்பாவுக்கு இவ்ளோ கிரேஸா!’னு சிலிப்பான சந்தோஷமா இருந்தது. படம் பார்த்துட்டு வந்ததும் ஐஸ்வர்யா எங்கிட்ட, ‘எப்படி இருந்துச்சு?’னு கேட்க, ‘சூப்பர்டி! வீட்டில் சாதாரணத்திலும் சாதாரணமா இருக்கிற அப்பாவை, ஸ்கிரீன்ல சூப்பர் ஹீரோவா ஃபேன்ஸ் கொண்டாடும் அன்பை கண்குளிரப் பார்த்தேன்!’னு சொன்னேன். அதுக்கப்புறமா ரஜினி அப்பாவோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அப்பப்போ போக ஆரம்பிச்சதோட, அவரோட எல்லா படத்தின் ஃபர்ஸ்ட் டே  - ஃப்ர்ஸ்ட் ஷோவையும், எங்க ஃபேமிலியோட பார்த்துடுவோம்!

எக்ஸைட்மென்ட் பேசிட்டோம். இப்போ கொஞ்சம் டெடிகேஷன் பேசுவோம். இன்னிக்கு நானும், எங்க அண்ணாவும் சொசைட்டியில ஒரு நல்ல நிலையில இருக்கிறோம்னா, அது எங்க அம்மா - அப்பாகிட்ட இருந்து, அவங்க வாழ்ந்த வாழ்க்கையில இருந்து கத்துக்கிட்ட பாடம்தான் காரணம். எங்கப்பா, `யாரா இருந்தாலும் மனிதர்களை முதல்ல மனிதர்களா பார்க்கணும், மதிக்கணும்'னு சொல்வார். `ஏழை, பணக்காரர்ங்கிற பாகுபாடில்லாம, எல்லார்கிட்டயும் ஒரேமாதிரி பழகணும்'னு சொல்லி எங்களை வளர்த்ததோட நிறுத்தல. அதை செயல்படுத்த, எங்க நாயுடு ஹால் ஷோரூம் லேபர்ஸ் கூட என்னையும், அண்ணனையும் வேலை செய்ய வெச்சாரு.

எனக்கும் அண்ணாவுக்கும் நாயுடு ஹால், இன்னொரு வீடு. சொல்லப்போனா வீட்டைவிட அதிக நேரம் நாங்க அங்கேதான் இருப்போம். அதேபோல எங்கம்மா வீட்டில் இருந்தாலும், பால்கனியில் லேபர்ஸோட சேர்ந்து துணி தைச்சுட்டு இருப்பாங்க. ‘உங்க தாத்தா டெய்லரிங் வேலை செஞ்சி ஷோரூம் ஆரம்பிச்சார்; நானும் ஒரு சாதாரண ஊழியரா இருந்துதான், இன்னிக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்; அதுபோவே, நீங்களும் ஆரம்பகட்டத்துல இருந்துதான் படிப்படியா மேல வரணும்!னு சொல்லி, எங்களையும் லேபர்ஸ் யூனிஃபார்ம் போட்டு கடையில் வேலை பார்க்க வெச்சார் எங்க அப்பா. ஸ்கூல் லீவ் டேஸ்ல, ஷோரூம்ல டேபிள் துடைக்கறதுல இருந்து பில் போடுறது வரை எல்லா வேலைகளிலும் நானும் அண்ணனும் பரபரப்பா இருப்போம். வீட்டுக்குக் கிளம்பும்போது, அன்னிக்கு நாங்க செஞ்ச வேலைக்கு கையில் சம்பளம் கொடுத்து அனுப்புவார் அப்பா.

நானும், அண்ணனும் நியாயமான தேவைக்காக எவ்வளவு பணம் கேட்டாலும், அம்மாவும் அப்பாவும் கொடுப்பாங்க. ஆனா, அந்த பாக்கெட் மணிக்கும், ஷோரூம்ல கிடைக்கிற சம்பளத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சம்பளமா கிடைக்கிற பணத்துக்கு ஈடு இணையே கிடையாது. அப்பா நிறைய தான, தர்மம் செய்வாரு. அப்பா மாதிரியே நானும், என் சம்பளப் பணத்தை ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து, ஹோம்ஸ்க்கு கொடுத்துடுவேன்.

`கடைக்கு வரக்கூடிய எந்த ஒரு கஸ்டமரையும், துணி வாங்காம வெறும் கையோடு அனுப்பக்கூடாது; அவங்களோட தேவைகளைப் புரிஞ்சி நடந்துக்கணும்'னு அப்பா அடிக்கடி சொல்வார். பொதுவா கடைக்கு வர்ற டிரெஸ்ல, எனக்குப் பிடிச்ச பீஸ்களை எடுத்துக்குவேன். ஒருமுறை கஸ்டமர் ஒருத்தர், ஷோரூம்ல இருந்த மஞ்சள் கலர் சுடிதாரைப் பார்த்துட்டு, ‘இதில் பிங்க் இருந்தா நல்லாயிருக்கும்’னு கேட்டாங்க. கடையில் பிங்க் பீஸ் இல்லை, ஆனா, வீட்டில் எனக்காக நான் எடுத்து வெச்சிருந்தது பிங்க் பீஸ்தான். ‘உங்களுக்கு இந்த யெல்லோ அழகா இருக்கும்’னு கன்வின்ஸ் பண்ண முயன்றும், அந்த கஸ்டமர் திருப்தி ஆகாம கிளம்பத் தயாரானாங்க. உடனே நான், ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’னு சொல்லி, வீட்டுக்கு ஓடி வந்து அந்த பிங்க் பீஸை எடுத்துட்டு கடைக்கு ஓடி, ‘இதோ நீங்க கேட்ட பிங்க் கலர். குடோன்ல இருந்து உங்களுக்காக எடுத்துட்டு வந்தேன்!’னு சொன்னேன். அவங்க முகத்துலயும் மனசுலயும் அவ்ளோ சந்தோஷம்! அதைப் பார்க்கும்போது எனக்குத் திருப்தி. உண்மையில் அந்த டிரெஸ்ஸை போட்டிருந்தாக்கூட நான் இவ்ளோ திருப்தியா உணர்ந்திருக்க மாட்டேன். அதுதான் எங்கப்பா எனக்கு சொல்லிக்கொடுத்த ‘கஸ்டமர் கேர்’!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

காலேஜ் கலகல எபிஸோடுக்குப் போவோமா?! ப்ளஸ் டூ-ல 87 பர்சன்ட் மார்க் எடுத்ததும், ஜர்னலிஸ்ட், லா, ஃபாரின் ஸ்டடீஸ்னு மூணு சாய்ஸ் வெச்சிருந்தேன். அப்பா, நான் அவர் பக்கத்துலயே இருக்கணும்னு ஆசைப்பட்டதால, மூணையும் ரிஜெக்ட் பண்ணிட, ‘சரி, ஃபேஷன் டிசைனிங் படிக்கிறேன்!’னு சொன்னதும் சம்மதிச்சார். சென்னை, `நிஃப்ட்'ல (NIFT - National Institute of Fashion Technology) படிக்க ஆசைப்பட்டு, ரெண்டு முறை என்ட்ரன்ஸ் எழுதியும் தேர்வாக முடியல. கடைசியில சம்பந்தமே இல்லாம, பிரிட்டிஷ் யுனிவர்சிட்டியோட ‘ஸ்கூல் ஆஃப் ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட்’ல அப்பா சேர்த்துவிட்டுட்டார்.

ப்ளஸ் டூ வரைக்கும் கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்ச எனக்கு கோ-எட் காலேஜ் பெரிய அதிர்ச்சி, பயம். அப்போ நான் ரொம்ப குண்டா இருப்பேங்கிறதால நிறைய கிண்டல், ரேகிங்க்கு ஆளானேன். மதியம் எல்லாரும் லன்ச் பாக்ஸ் எடுக்கும்போது, எனக்கு வீட்டுல இருந்து அஞ்சு அடுக்கு கேரியர் சாப்பாடு வரும். நாக்கு செத்துப்போன ஹாஸ்டல் ஸ்டூடன்ட்ஸுக்கு எல்லாம் எங்க வீட்டு சாப்பாடுதான். கொஞ்ச நாள்ள, ரெண்டு கேரியர் கொண்டு போற அளவுக்கு லன்ச் பிரேக் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு சேர்ந்துட்டே இருந்தாங்க. அடுத்த நாளுக்கான மெனுவை முந்தின நாளே எங்கிட்ட சொல்ற அளவுக்கு அந்த ஃப்ரெண்ட்ஷிப்பில் உரிமை வளர்ந்தது. அது ஆரம்பநாட்களில் எனக்கிருந்த கோ-எட் பயத்தை எல்லாம் தூக்கி தூரமா வெச்சிருச்சு. எங்க கிளாஸ் 32 பசங்க, அஞ்சு பொண்ணுங்க. அதனால கேம்பஸ்ல தோழிகளைவிட, எனக்கு நண்பர்கள் நிறைய. ஒரு நாள்கூட காலேஜை கட் அடிச்ச த்ரில் இல்லாம, ஒரு அரியர்கூட வைக்காம சமர்த்துப் பொண்ணா டிகிரியை முடிச்சிட்டு வந்தேன்.

என் வாழ்க்கையின் பெரிய இழப்பு, திருமணத்துக்குப் பிறகு ஃபேஷன் டிசைனரானது, ‘பரதேசி’ பட வாய்ப்பு, `பரதேசி படத்தின் மூலம் கிடைச்ச அனுபவம்... டிசம்பர் 29-ம் தேதி வர்ற `அவள் 16'-ல ஷேர் பண்றேன்!

டேக் கேர்!’’

கு.ஆனந்தராஜ் படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism