Published:Updated:

சினிமால்!

சினிமால்!

சினிமால்!

சினிமால்!

Published:Updated:

 ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்துவரும் ஸ்ருதிஹாசனை இணையதளங்களில் கலாய்த்தும், திட்டியும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் மலர் டீச்சரின் ரசிகர்கள். தற்போது தமிழிலும் ‘பிரேமம்’ பட ரீமேக் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. அதில் மலர் டீச்சராக நடிக்க ஹன்சிகாவைத் தேர்வு செய்துள்ளார்கள் எனத் தகவல் பரவியுள்ளது. மலர் டீச்சரின் ரசிகர்கள் கோயில் கோயிலாக ஏறி பிரார்த்தித்து வருகிறார்களாம். மலர் டீச்சர் பாதுகாப்பு சங்கம்!

சினிமால்!

 கடந்த சில மாதங்களாகவே தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையில் பிரச்னை, பேசிக்கொள்வதில்லை என செய்திகள் வந்தன. அவர்களோ சண்டையில்லை, நாங்கள் அண்ணன், தம்பிகள் என்றார்கள். இந்த நிலையில் தனுஷிடம் ‘ஏன் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்கிறதை நிறுத்திட்டீங்க?’ எனக் கேட்க, ‘சிவகார்த்திகேயனுக்கு எங்கள் நிறுவனத்தால் சம்பளம் கொடுக்க முடியவில்லை, ஆனால் அவர் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பதிலளித்துள்ளார் தனுஷ். அண்ணனுக்காக தம்பி சம்பளம் கம்மியா வாங்க மாட்டாராமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜாக்கி சான் படங்களிலும் ஹாலிவுட் படங்களிலும் நடிப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார்கள் இந்திய நடிகர், நடிகைகள். ஜாக்கி சான் அடுத்து நடிக்கும் ‘குங்ஃபூ யோகா’ என்ற படத்தில் ‘அனேகன்’ நாயகி அமிரா தஸ்தூர் ஹீரோயின். சோனு சூதும், இலியானாவும் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்களாம். இதற்கு முன் மல்லிகா ஷெராவத்தும் ஜாக்கி சான் ஜோடியாக நடித்திருக்கிறார். ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக!

சினிமால்!

 ‘எந்திரன் 2’ படத்தில் ஏமி ஜாக்ஸன் நடிக்க இருப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால், டூயட் பாடும் நாயகியாக அல்லாமல் முக்கியமான கதாபாத்திரமாம். ரஜினி சிட்டியாக நடித்தது போல ஏமியும் ரோபோவாக நடிக்க இருக்கிறாராம். ரோபோ டெஸ்டுக்காக அமெரிக்காவும் போய் வந்திருக்கிறார். மனித ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினிடம் பேசி வருகிறார்கள். புதிய மனுஷி பூமிக்கு வா!

 ஒரு நடிகைக்கு திருமணத் தேதி முடிவானாலே தமிழ் சினிமாவில் அந்த நடிகைக்கு வாலன்ட்டரி ரிட்டையர்மென்ட்தான். அப்படியிருக்கையில் மலையாள சினிமாவில் மட்டும்தான் நடிகைகளுக்கு ரீ என்ட்ரி கேட் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் மஞ்சு வாரியார். அந்த மாதிரி நிறைய நடிகைகள் மீண்டும் ரீ என்ட்ரியில் குதிக்க இருக்கிறார்களாம். கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்ட கோபிகாவும் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறாராம். குழந்தைகள் ஓரளவு வளர்ந்துவிட்டதால் நல்ல படங்களில் நடிக்க இருக்கிறாராம். அக்காவா, அண்ணியா, அம்மாவா?

 மக்களைத் தவிக்க வைத்த சென்னை மழையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இசை மழை பொழியவிருக்கிறது. அதில் முக்கிய விஷயம் அந்த இசை மழையின் வருமானத்தின் ஒரு பகுதி சென்னை மற்றும் கடலூர் மறு வாழ்வுக்கு வழங்கப்பட இருக்கிறதாம். ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை மற்றும் கோவையிலும், யுவன் ஷங்கர் ராஜா கோவை மற்றும் மதுரையிலும், கே.ஜே.யேசுதாஸ் சென்னையிலும் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இசை மழை பொழியட்டும்!

 ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜாவை மிகவும் மரியாதையோடு பார்க்கிறார்கள் திரையுலகில். அவரின் அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் அவரின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பது சிவகார்த்திகேயன். இருவரின் படங்களுமே குடும்பத்தோடு பார்க்கும் வகையில்தான் இருக்கும். அதனால் இப்போதே படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் போட்டி போடுகிறார்களாம். சூப்பர்ல!

 முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு. மலேசியா, பாங்காக் முடித்துவிட்டு தற்போது கோவாவில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ராதிகா ஆப்தே. முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பிறகுதான் நடித்திருக்கிறார். பதட்டத்தில் ராதிகா நிறைய சொதப்ப, கொஞ்ச நேரம் ராதிகா ஆப்தேவுடன் சகஜமாகப் பேசி அவரின் பதட்டத்தைப் போக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். இப்போ, ராதிகா ஹேப்பி அண்ணாச்சி!

சினிமால்!

 விக்ரம், ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நயன்தாரா தவிர இன்னொரு நாயகியும் இருக்கிறார். நிறைய வலை வீசிப் பார்த்த இயக்குநர் கடைசியாக டிக் அடித்திருப்பது நித்யா மேனனை. இரண்டு  சேச்சிகள் ஒரே கூட்டுக்குள், என்ன ஆகப்போகுதோ!

 ஆக்‌ஷன் படங்களுக்குப் பெயர் போன இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நடிக்க வந்தபின்பு படங்கள் இயக்குவதில் மந்த கதியில் இருந்தார். இரண்டு காமெடிப் படங்கள் எடுத்து மொக்கை வாங்கியதால், இந்தப் பேய் சீசனில் பேய் படம் அதுவும் ‘சொந்தப் படம்’ எடுக்கக் கிளம்பி விட்டார். இதில் ‘சொந்தப்படம்’ங்கிறது படத்தோட பேராம். ஒரு பேய், சொந்தமாக ஒரு படம் எடுக்க கிளம்புறதுதான் கதையாம். அதுவாவது நல்ல படமா எடுக்கட்டும்!

 ‘த்ருஷ்யம்’ படத்தில் நடித்த மோகன்லால், மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆனதில் இருந்தே அந்த ஜோடியை மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என நிறைய இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். தற்போது அந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. ‘வெள்ளி மூங்கா’ படத்தை இயக்கிய ஜீது ஜேக்கப் தான் இந்த ஜோடியை இணைத்த அந்தப் பெருமைக்குரியவர். ஆஹா ஆஹா!

 தமிழில் அறிமுகமான சமந்தா, எப்படியும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று தாராள கவர்ச்சியை வாரி வழங்கி தெலுங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். தாய்மொழியான தமிழில் மட்டும் அவரால் வெற்றிப் படத்தைக் கொடுத்து நம்பர் 1 இடத்தைப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும், தமிழில் இனிமேல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலேயே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். ‘தங்கமகன்’ தொடர்ந்து ‘தெறி’, ‘24 படங்களிலும் குடும்பப் பாங்காகவே நடித்துள்ள அவர் இனி கவர்ச்சிக்கு முழுக்குப் போட இருக்கிறாராம். என்ன கொடுமை சமந்தா!