Published:Updated:

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

அக்கட தேசத்து அழகிகள்!

Published:Updated:

‘வார்ர்ர்ரே வா!’ சொல்ல வைக்கும் இந்த வார அக்கட தேசத்து அழகு ஹீரோயின்கள் இவர்கள்...

சான்டல்வுட் ஷான்வி ஸ்ரீவத்ஸவா

அக்கட தேசத்து அழகிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாரணாசிப் பொண்ணு! தெலுங்கு தேசத்தில் கரியரை ஆரம்பித்த எம்.பி.ஏ கண்ணு! முதல் படம் ‘லவ்லி’ பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடிக்க வரிசை கட்டி வந்தது பட வாய்ப்பு. ‘அட்டா’, ராம் கோபால் வர்மாவின் ‘ரௌடி’ என ஹிட் படங்களில் நடித்ததால் ஷான்விக்கு இன்னும் மவுசு கூடி உள்ளது. கன்னடத்தில் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஜோடியாக சென்ற வருடம் நடித்த ‘சந்திரலேகா’ படம் வசூலைக் குவிக்க பெங்களூரு வெல்வெட் கம்பளம் விரித்தது. இப்போது தமிழில் ‘வரைபடம்’ என்ற படமும், கன்னடத்தில்  யாஷுக்கு ஜோடியாக ‘மாஸ்டர் பீஸ்’ என்ற படமும் புதுமுக நடிகரோடு ‘பலே ஜோடி’ என்ற படமும்  நடித்துக்கொண்டிருக்கிறார். ‘ஒருமுறை சொன்னால் காட்சிக்குத் தேவையான உணர்வை டேக் வாங்காமல் கொடுத்துவிடும் அழகுப் பெண்!’ என ராம் கோபால் வர்மாவே புகழ்ந்த பெண் என்பதால் சாண்டல்வுட்டில் ஷான்வி கொடி பறக்குது! ஷான்விக்கு வார்ம் வெல்கம் வைப்போம்!

மல்லுவுட் அனுமோல்

அக்கட தேசத்து அழகிகள்!

கோயம்புத்தூரில் இன்ஜினீயரிங் படித்த மலையாள தேசத்து மயில்! 2010-ல் ‘கண்ணுக்குள்ளே’, ‘ராமர்’ என்ற சுமாரான தமிழ்ப் படங்களில் அறிமுகமானார். 2012-ல் பாலசந்திரனின் ‘இவன் மேகரூபன்’ என்ற படத்தில் மலையாளத்தில் அறிமுகம். ஜெயசூர்யாவோடு ‘டேவிட் அண்ட் கோலியாத்’, ஃபஹத் ஃபாசிலோடு ‘அகம்’, குஞ்சாக்கோ கோபனோடு ‘காட் ஃபார் சேல்’, இந்திரஜித்தோடு ‘வெடி வழிபாடு’, துல்ஹர் சல்மானோடு ‘ஞான்’ என இவர் நடித்தவை எல்லாமே வேற லெவல் படங்கள். இந்த வருடம் தமிழில் ‘ஒரு நாள் இரவில்’ என்ற மலையாள சினிமாவில் ஹிட்டடித்த ‘ஷட்டர்’ படத்தின்  ரீமேக்கில் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார். ‘பேர்ட்ஸ் வித் லார்ஜ் விங்ஸ்’, ‘ராக் ஸ்டார்’, ‘அமீபா’ என அனுமோல் நடிப்பில் இந்த ஆண்டு இறுதியில் வந்த படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க அடுத்த வருடம் முழுமைக்கும் அனு படா பிஸியாக்கும்!

டோலிவுட் அவிகா கோர்

அக்கட தேசத்து அழகிகள்!

குஜராத் குல்மொஹர் ஃப்ளவர்! 18 வயதிலும் நடிப்பில் செம ஸ்கோர்! பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாய் ‘மார்னிங் வாக்’, ‘பாத்சாலா, ‘ தேஜ்’ என மூன்று படங்களில் நடித்தவரை விரிஞ்சி வர்மா என்ற இயக்குநர் 2013-ல் டோலிவுட்டில் ‘உய்யாலா ஜம்பாலா’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். படமும் ஹிட் அவிகாவும் ஹிட்டாக போன வருடம் மட்டும் ‘மாஞ்சா’, ‘சினிமா சூப்பிஸ்த மாவா’, ‘தாணு நேனு’, ‘லக்‌ஷ்மி மாவே ரா இந்திகி’ என நான்கு படங்களில் நடித்தார். கன்னடத்தில் ‘கேர் ஆஃப் ஃபுட்பாத்’ என்ற சினிமா நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க தெக்கத்தி தேசமெங்கும் அவிகா புகழ் பரவத் தொடங்கி விட்டது. இங்கிட்டு வாங்க அவிகா!

-ஆர்.சரண்