Published:Updated:

இவர் ஒரு மாதிரி!

இவர் ஒரு மாதிரி!

இவர் ஒரு மாதிரி!

இவர் ஒரு மாதிரி!

Published:Updated:

‘இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனால், எங்கேன்னுதான் தெரியலை’னு யோசிக்காதீங்க ஃப்ரெண்ட்ச். விடை விபரீதமா இருக்கும். இவர் சாதாரண ஆள் இல்லை, ஜேம்ஸ் டீன், பிரபலமான பிட்டுப் பட ஹீரோ. தனது கடினமான உழைப்பு மூலம் இந்த உயரத்தை எட்டியவர்! இவரையும் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்...

இவர் ஒரு மாதிரி!

ஜேம்ஸ் டீனோட உண்மையான பெயர் பிரையன் செவில்லா. 29 வயதான ஜேம்ஸ் பிறந்தது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில். ஜேம்ஸோட ஆசை, லட்சியம், கனவு எல்லாமே பிட்டுப் படத்துல நடிக்கிறதுதானாம். 18 வயசுலேயே படத்துல நடிக்க ஆரம்பிச்சுட்டாப்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜேம்ஸ் டீன் உண்மையாகவே நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர். அப்பா மெக்கானிக்கல் இன்ஜினீயர், அம்மா சாஃப்ட்வேர் இன்ஜினீயர். டீனும் பசடேனா சிட்டி கல்லூரியில் வகுப்புகள் எடுத்திருக்கிறார். ஆஹாங்...

பொதுவாகவே அந்த மாதிரிப் படத்தில் வரும் பக்கிகள், புஜ பல பலாக்கிரமசாலியாக இருப்பார்கள்.ஆனால், ஜேம்ஸ் அப்படி கிடையாது. அதுதான் அவரது சிறப்பு என்கிறார்கள், இவரது ரசிகப் பெருமக்கள். ஜேம்ஸ் டீனுக்கு ‘ஜிம்மி டீன்’, ‘ஃப்யூச்சர் பேபி டாடி’ என்ற வேறு பெயர்களும் உண்டு.

ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில், ‘நீங்க நினைக்கிற மாதிரி பிட்டுப்படத்துல நடிக்கிறவங்க எல்லோரும் பெரிய பணக்காரங்க கிடையாது. இந்தத் தொழிலில் லாபம் குறைவாகவே வரும். அதிலும் திருட்டு வி.சி.டி-கள் இன்னும் பிரச்னையைத் தருகின்றன’ என்று கொதித்து எழுந்துவிட்டார். திருட்டு வி.சி.டி எல்லாப் படங்களுக்கும் இடையூறுதான் போல...

இவர் ஒரு மாதிரி!

11 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கும் ஜேம்ஸ், 4,000 காட்சிகளுக்கு மேல் நடித்துவிட்டார்.

நாயகி லிண்ட்ஸே லோகனுடன் இணைந்து ‘தி கேன்யான்ஸ்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இது நல்ல படம்தான். இந்தப் படத்தின் மூலம் நிறைய ஹாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன.

தனது இனைய தளத்தின் மூலம் வரும் வருவாயில் 50 சதவிகிதப் பணத்தைப் புற்று நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ். இவரது தாத்தாவும், பாட்டியும் புற்றுநோயால்தான் இறந்தனர் என்பது தான் இதற்குப் பின்னால் இருக்கும் சோக ஃப்ளாஷ்பேக்.

இதுவரை சக நடிகைகளான ஜோனா ஏஞ்சலுடனும், ஸ்டோயாவுடனும் ஜேம்ஸ் டேட்டியிருக் கிறார். ஆனால், இப்போ ஜேம்ஸ் தனிமரம். டேட்டிய பெண்களே இவர் தொல்லை தாங்காமல் பிரிந்து சென்று, புகார்களை அடுக்கடுக்காக ட்வீட்டி வருகிறார்கள். இதுவரை சுமார் 30 விருதுகளை வென்றுள்ளார் ஜேம்ஸ். அதில் 14, சிறந்த ஆண் நடிகருக்கான விருதுகள். பார்ரா!

-ப.சூரியராஜ்