Published:Updated:

நம்ம ஊருப் பொண்ணுங்க!

நம்ம ஊருப் பொண்ணுங்க!

நம்ம ஊருப் பொண்ணுங்க!

நம்ம ஊருப் பொண்ணுங்க!

Published:Updated:

ம் நாட்டு வம்சாவளிகளாக இருந்தும் நம் நாட்டுக்கு சேவை செய்யாமல் வெளிநாட்டுக்குப் போய் சினிமா சேவை செய்து வெளிநாட்டு மக்களை ஜொள் கடலில் நீந்தவிடும் சில ஹாட்டிகளைப் பற்றி இந்தப் பதிவு. பார்ப்போமா?

அர்ச்சி பஞ்சாபி: பிறந்தது லண்டனா இருந்தாலும், அப்பா அம்மா இருவருமே இந்தியர்கள். பொண்ணு பாலே நடனத்தில் சிறப்புப் பயிற்சி வேறு எடுத்து இருக்காங்க. ‘சான் ஆண்ட்ரியாஸ்’, ‘தி கான்ஸ்டன்ட் கார்டனர்’, ‘எ மைட்டி ஹார்ட்’ எனப் பெயர் சொல்லும் படங்களில் நடித்து இருக்கிறார் அர்ச்சி. ‘ப்ரூக்ளின் நைன் நைன்’, ‘தி குட் வொய்ஃப்’, ‘தி ஃபால்’ எனத் தொலைக்காட்சித் தொடர்களிலும் பொண்ணு பயங்கர பிஸி. இந்திய உணவு வகைகளின் தீவிர விரும்பியான அர்ச்சி, ஓய்வு நேரங்களில் இந்திய உணவு வகைகள் சமைப்பாராம். சமையல் ஹாட்டா இருக்குமா?

நம்ம ஊருப் பொண்ணுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திரா வர்மா: ‘காம சூத்ரா: ஏ டேல் ஆஃப் லவ்’ படத்தின் மூலம் பலரை ஜொள்ளர்கள் ஆக்கியவர் இந்திரா. இங்கிலாந்தின் சாமர்செட்டில் பிறந்த இந்திராவின் தந்தை இந்தியர். ‘காம சூத்ரா’, ‘பேஸிக் இன்ஸ்டின்க்ட் 2’ எனப் படங்களிலும், ‘ரோம்’, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ எனத் தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா தாராளமாய் நடித்த  காட்சிகள் ஏராளம். கடந்த 20 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவரும் இந்திரா, தயாரிப்பாளரும்கூட.

அன்னெட் மஹெந்துரு: ஆப்கானில் பிறந்த அன்னெட்டின் தாய், தந்தையர் அவரது 13-வது வயதில் பிரிந்துவிட இந்திய வம்சாவளித் தந்தையோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ‘தி அமெரிக்கன்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான அன்னெட், ரஷ்யன், ஜெர்மன், இந்தி, பெர்சியன் எனப் பல மொழிகள் பேசும் திறமை பெற்றவர். பேசுறதா முக்கியம்?

நம்ம ஊருப் பொண்ணுங்க!

ஜுலைக்கா ராபின்சன்: ஜூலைக்காவோட தாயார் பர்மா-இந்தியா கலவையா இருந்தாலும், நம்ம தொகுப்புல வரலாம். ஏன்னா, பொண்ணு அழகா இருக்கு பாஸ். மலேசியா, தாய்லாந்துல பொண்ணு வளர்ந்தாலும், அப்பா பிரிட்டன் என்பதால், இவரை பிரிட்டிஷ் நடிகை என்றுதான் சொல்கிறார்கள். மீரா நாயரின் ‘தி நேம்சேக்’ படத்தில் பெங்காலிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தபோதுதான், பலருக்கு இது நம்ம ஊரு பொண்ணு என்கிற எண்ணமே வந்து இருக்கிறது. ‘லாஸ்ட்’, ‘ஹோம்லேண்ட்’, ‘தி ஃபாலோயிங்’, ‘ரோம்’ எனப் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் ஜூலைக்கா.

ரோனா நடாஷா மித்ரா:  இங்கிலாந்து நடிகையான ரோனாவின் தந்தை அந்தோணி மித்ரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மாடலிங், பாடகி எனப் பல துறைகளில் முத்திரை பதித்தவர் ரோனா. ‘ஷூட்டர்’, ‘அண்டர்வேர்ல்டு: ரைஸ் ஆஃப் தி லைக்கன்ஸ்’, ‘ஹாலோமேன்’ மாதிரியான பல படங்களில் நடித்து இருக்கிறார் ரோனா.

நம்ம ஊருப் பொண்ணுங்க!

பர்மிந்தர் நக்ரா: லண்டனில் பிறந்த பர்மிந்தர் நக்ராவின் அப்பா, அம்மா இருவருமே பஞ்சாப்பில் இருந்து லண்டனில் தஞ்சம் அடைந்த சீக்கியர்கள். ரேடியோ, மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என நக்ரா கால் பதிக்காத கலைத் துறையே இல்லையாம். 2004-ல் நடந்த கோடைகால ஒலிம்பிக்ஸின் ஒலிம்பிக் டார்ச் லண்டன் வந்தபோது அதை ஏந்திய சிலரில் நக்ராவும் ஒருவர்.

-கார்த்தி