Published:Updated:

இப்போ இவரும் ஹீரோ!

இப்போ இவரும் ஹீரோ!

இப்போ இவரும் ஹீரோ!

இப்போ இவரும் ஹீரோ!

Published:Updated:

தித்யா சேனல் தொகுப்பாளர் அஸார், மிமிக்ரியில் கலக்கிக்கொண்டிருந்தவர்... இப்போது ஹீரோவாகிவிட்டார். எப்புடி பாஸ்?

இப்போ இவரும் ஹீரோ!

‘‘எல்லோரும் ஸ்கூல் படிக்கும்போது எதிர்காலத்துல என்னவாகப் போறேன்னு வாத்தியார் கேட்டா வக்கீல், இன்ஜினீயர், டாக்டர் இப்படித்தானே சொல்வீங்க. நான் சொன்னேன் சினிமால நடிக்கப்போறேன்னு. அப்போவே மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டேன் நான் சினிமாக்காரன்தான்னு. அதுக்காக எடுத்த உடனே ஹீரோவா நடிக்க முடியுமா? சொந்தமா படம் எடுக்கிற அளவுக்கு நம்மகிட்டே பணமும் கிடையாது. அந்தப் பணத்துக்கு பதிலாதான் கடவுள் வாயைக் கொடுத்திருக்கானே. அதை வெச்சு எப்படியாவது முன்னேறிடலாம்னு நம்பிக்கை மட்டும் இருந்துச்சு. முதல்ல மீடியாவில் என்ட்ரியைப் போடுவோம்னு டி.வி சேனல்கள், ரேடியோவில் வாய்ப்புத் தேடினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போ இவரும் ஹீரோ!
இப்போ இவரும் ஹீரோ!

அப்போதான் ஒரு எஃப்.எம்-மில் இருந்து முதல் வாய்ப்பு வந்தது. அங்கிருந்து அப்படியே ஆதித்யா சேனலுக்குத் தாவினேன். அங்கே திண்டுக்கல் சரவணனோடு நான் பண்ணிய டபுள் கலாட்டா நிகழ்சிகள்தான் என்னை ஓரளவு பாப்புலராக்கியது. ஒரு நாள் இயக்குநர் விக்ரமன் சார் என்னை அவர் வீட்டுக்கு வரச் சொன்னார்.  ‘நினைத்தது யாரோ’ன்னு ஒரு படம் பண்றேன். படத்துல நாலு ஹீரோ. அதுல நீயும் ஒரு ஹீரோன்னு சொல்லிட்டார். அதைக்கேட்ட நான் வடிவேல் மாதிரி அப்படியே ஷாக்காகிட்டேன். படமும் ரிலீசாச்சு. படத்தோட ரிசல்ட் கேட்டதும் அதைவிட ஷாக் ஆனேன்.

இப்போ இரண்டு படங்களில் சோலோ ஹீரோவா நடிச்சுருக்கேன். அதில் ஒரு படம் ‘சாரல்’. ஹீரோயினா பிரியங்கான்னு பாண்டிச்சேரி பொண்ணு நடிச்சுருக்காங்க. இந்தப் படம் ரொம்ப இயல்பான காதல் கதை. ஜி.வி. பிரகாஷ் அம்மா ஏ.ஆர். ரெஹானா மூலமாதான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த இன்னொரு படத்தின் பெயரைக் கேட்டாலே நீங்க சிரிப்பீங்க பாஸ். ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’. இது ஒரு முழு நீள காமெடிப் படம். கதைனு பார்த்தா ரொம்ப சிம்பிள். ஹீரோ ஒரு பொண்ணை லவ் பண்ண ஆசைப்படுவான். ஆனா படம் முடியும்வரை அவனுக்கு ஒரு பொண்ணுகூட செட்டாகாது. இதுதான் இந்தப் படத்தோட ஒன் லைன். இதில் நான் அடுத்த லெவலுக்குப் போயிருக்கேன். ‘சாரல்’ படத்தில் ஒரு ஹீரோயின் இந்தப் படத்தில் ரெண்டு ஹீரோயின்(ஓ... இதுதான் அடுத்த லெவலா). ஒருத்தர் ‘சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி, இன்னொருத்தர் ஈடன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்குக்கும் இதுதான் முதல் படம்” என்கிறார்.

-ஜுல்ஃபி