Published:Updated:

காணாமல் போன கண்மணிகள்!

காணாமல் போன கண்மணிகள்!

காணாமல் போன கண்மணிகள்!

காணாமல் போன கண்மணிகள்!

Published:Updated:

மிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சிட்டாகச் சிறகடித்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை எட்டிப்பார்க்காமல் இருக்கும் சில நடிகைகளின் அப்டேட்ஸ்:

காணாமல் போன கண்மணிகள்!

ஸ்ரேயா: 2001-ல் தெலுங்கில் அறிமுகமாகி, 2013-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி! தெலுங்குப் படங்களில் ஹை-வோல்டேஜில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ரேயாவுக்கு, சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக நடிக்க ‘மழை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என இரண்டே தமிழ்ப் படங்கள் போதுமானதாக இருந்தன. ‘அட, பொண்ணு பின்னுதுப்பா!’ எனப் பலரும் பாராட்டி முடிப்பதற்குள் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி, தன் கேரியரைத் தன் கையாலேயே இழுத்து இறக்கினார். பிறகு நடித்த எந்தத் தமிழ்ப் படமும் ஸ்ரேயாவுக்குச் சொல்லிக்கொள்ளுபடி இல்லை. விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’தான், அம்மணி கடைசியாகத் தலை காட்டிய தமிழ்ப் படம். ஆனால், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழிப் படங்களில் ஸ்ரேயா பிஸிதான். தவிர, ஸ்ரேயா மும்பையில் மிகப் பெரிய பியூட்டி பார்லர் நடத்திவரும் ‘பிசினஸ் வுமன்’ என்பதால், வாய்ப்புகள் வருவது போவதைப் பற்றியெல்லாம் ஸ்ரேயாவுக்குக் கவலை இல்லை. ‘அதிகப் படங்களில் நடிக்கிறவங்க நல்ல நடிகைனும் சொல்லிட முடியாது. வாய்ப்பு இல்லாம இருக்கிறவங்க மோசமான நடிகைனும் சொல்லிட முடியாது. அவங்க திறமைக்குத் தகுந்த வாய்ப்புகள் வந்துகிட்டேதான் இருக்கும்!’ இது ஸ்ரேயாவின் பளிச் பன்ச். ஸ்ரேயாடா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காணாமல் போன கண்மணிகள்!

அசின்: அவ்ளோ சீக்கிரம் மறந்துட முடியுமா? இவரும் 2001-ல் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, 2004-ல் தமிழுக்கு வந்தார். ‘கஜினி’ படத்தின் ‘கல்பனா’ கேரக்டர் அசின் கேரியர் கிராபை டாப் கியரில் தட்டியது. கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம்... எனக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டார். மலையாளம், தமிழ், தெலுங்கு என சுற்றிச் சுழன்ற அசினுக்கு, பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதை, ‘கஜினி’ இந்தி ரீமேக்கில் நிறைவேற்றினார் முருகதாஸ். விளைவு? ‘காவலன்’ தவிர, அசின் நடித்த கடைசி ஏழு படங்களும் இந்திதான்! அமீர்கான், சல்மான்கான், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன் என பாலிவுட்டின் மோஸ்ட்-வான்ட்டட் ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், 50/50 வெற்றியையே கொடுத்துக்கொண்டிருந்த அசினுக்கு 2012-க்குப் பிறகு வாய்ப்புகள் இல்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, அசின் நடித்த ‘ஆல் இஸ் வெல்’ கடந்த ஆகஸ்டில் வெளியானது.  அசின் கடைசியாக அடிபட்டது கல்யாணச் செய்தியில்!

காணாமல் போன கண்மணிகள்!

ப்ரியாமணி: ‘பருத்திவீரன்’ வந்தபோது, பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்த முத்தழகு, அந்தப் படத்தின் மூலம் ‘சிறந்த நடிகை’க்கான தேசிய விருது பெற்றார். ஆனால், ‘தொடர்ந்து கிராமத்துப் பெண் கேரக்டர்களாகவே வருகின்றன’ என அலுத்துக்கொண்டு கவர்ச்சிக்கு மாறினார். முடிந்தது கதை. ‘பருத்தி வீரன்’ படத்துக்குப் பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், அத்தனையும் ஃப்ளாப்! ஆனால், தெலுங்கு, மலையாள சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு நகர்ந்தார். இடையில் தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை ப்ரியாமணி காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், திடீர் ட்விஸ்ட்டாக ‘இயக்குநர்’ அவதாரம் எடுக்கிறார் ப்ரியாமணி. தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மூன்று கன்னடப் படங்களின் ஷூட்டிங் முடிந்தது. ‘நான் ஈ’ சுதீப் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறாராம் ப்ரியாமணி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிப் படமாக உருவாகும் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறதாம். முத்தழகு இப்போது, திரைக்கதை எழுதும் பணியில் பிஸி!

காணாமல் போன கண்மணிகள்!

நமீதா: ‘மச்சான்ஸ்... நமீதாவுக்கு என்னதான் ஆச்சு?’ என ‘கூகுள்’ பண்ணாதவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களாகவே இருக்க முடியாது. 2002-ல் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, 2004-ல் ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி. ஹீரோயின், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், குத்துப்பாட்டுக்கு ஆடுவது... என அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டிருந்த நமீதா திடீரென சினிமாவில் இல்லை. சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராகக் கலந்துகொண்டு, ‘லைம்லைட்’டைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார். கலைஞரின் கைவண்ணத்தில் வெளியான ‘இளைஞன்’ படம்தான், நமீதா நடித்த கடைசி தமிழ்ப் படம். பிறகு இரண்டு கன்னடப்படங்களில் தலைகாட்டினார். ‘எனது உடல் எடை அதிகரிப்புதான், நடிப்பதில் இருந்து விலகி இருந்ததற்குக் காரணம்’ எனக் கருத்து தெரிவித்திருக்கும் நமீதா, தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு பழைய ‘கிக்-லுக்’கில் அசத்துகிறார். ஆகையால், அன்பார்ந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க... பிரபு நடிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் நமீதா ரீ-என்ட்ரி! வாட் எ ரைமிங் டைட்டில்?

காணாமல் போன கண்மணிகள்!

பாவனா: 2002-ல்தான் மலையாள சினிமாவில் அறிமுகமானார். அங்கு மூன்றே வருடத்தில் 20 திரைப்படங்களில் நடித்துக் கலக்கிய பாவனாவை, ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவர் மிஷ்கின். தமிழில் பத்து படங்களில் நடித்திருந்தாலும், ஒன்று, இரண்டு படங்களைத் தவிர எல்லாமே தோல்விப்படங்கள்தான்! எனவே, மீண்டும் மலையாளம், கன்னடப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய பாவனா, ஆண்டுக்கு நான்கு, ஐந்து படங்களில் நடிக்கும் பிஸியான நடிகை. தமிழில் கடைசியாக ‘அசல்’ படத்தில் நடித்திருந்த பாவனா, நல்ல கதை, பொருத்தமான வேடம் கிடைத்தால் மட்டுமே தமிழில் நடிப்பாராம். பாவனாவைப் பார்த்து பல வருடம் ஆச்சே? என வருத்தப்படும் ரசிகர்களுக்காக, சரத்குமார், பாவனா, நிவின் பாலி நடிப்பில் 2011-ல் வெளியான ‘தி மெட்ரோ’ என்ற மலையாளப் படத்தினை ‘தென்னிந்தியன்’ என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார்கள்.

வரணும்... பழைய பன்னீர்செல்வமா வரணும்!

- கே.ஜி.மணிகண்டன்