Published:Updated:

சுட்ட படம்

சுட்ட படம்

சுட்ட படம்

சுட்ட படம்

Published:Updated:

ந்த வார சுட்ட படம் இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘ரெட்டை வால் குருவி’. 1987-ல் ரிலீஸான இந்தப் படத்தில் மோகன் ஹீரோ. இவருக்கு ராதிகா -அர்ச்சனா என இரண்டு ஜோடிகள். 1984-ல் ஹிட்டடித்த ஹாலிவுட் படமான ‘மிக்கி - மௌடி’ என்ற படத்தின் தழுவல்தான் இந்தப் படம். ஹாலிவுட் படமான ஒரிஜினலின் கதையைப் பார்ப்போமா..?

சுட்ட படம்

ராப் சாலிங்கர் சுறுசுறுப்பான டி.வி நிருபர். மனைவி மிக்கி ஒரு வக்கீல். விரைவில் நீதிபதியாகும் முனைப்போடு இருப்பவள். ராப்புக்கு குழந்தைகள் என்றால் இஷ்டம். ஆனால், தன் லட்சியக் கனவான நீதிபதியாகும் வாய்ப்புக்காக குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுகிறாள் மிக்கி. இந்த நேரத்தில் மௌடி என்ற இசையமைப்பாளினியை பேட்டி எடுக்கச் சந்திக்கிறான் ராப். அண்ணலும் நோக்க அவளும் நோக்க கொஞ்ச நாட்களில் கர்ப்பம் ஆகிறாள் மௌடி. மௌடியின் அப்பா மல்யுத்த வீரர் என்ற விஷயம் தெரிய வந்ததும் லைட்டாக ‘ஜெர்க்’ ஆகிறான் ராப். விரைவில் தன் மகளை மணமுடித்துக்கொள்ளச் சொல்கிறார் அவள் தந்தை. மிக்கியை விவாகரத்து செய்துவிட்டு மௌடியைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறான் ராப். மிக்கியிடம் இந்த விஷயத்தைச் சொல்லவரும் போது அவள் அவனுக்கு இன்னொரு ஷாக் கொடுக்கிறாள். ஆம். இப்போது மிக்கி கர்ப்பமாக இருக்கிறாள். வேறு வழியில்லாமல் ஷாக் ஆனதை மறைத்துவிட்டு அவனும் அதைக் கொண்டாடுகிறான். ஒரே நேரத்தில் இருவரிடமும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாமல் குடும்பம் நடத்துகிறான். அவனுடைய டி.வி கம்பெனி உரிமையாளர் லியோ இந்த விஷயத்தில் அவனுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் யோசனைப்படி வேலையைக் காரணம் காட்டி பகலில் ஒரு மனைவியிடமும், இரவில் ஒரு மனைவியிடமும் குடும்பம் நடத்துகிறான். பல நாள் குடிகாரன் ஒருநாள் ட்ரெய்னேஜில் விழாமல் போவானா? மிக்கிக்கும் மௌடிக்கும் ஒரே நேரத்தில் ஒரே ஆஸ்பத்திரியில் ஒரே தளத்தில் பக்கத்து பக்கத்து வார்டுகளில் குழந்தை பிறக்கிறது. ஒரு வழியாக மாப்பிள்ளை ராப் கையும் களவுமாக பிடிபடுகிறான். மிக்கியும் மைடியும் அவனைவிட்டுப் பிரிந்து செல்கிறார்கள். ராப் அவர்கள் இருவரையும் அவர்களுக்குத் தெரியாமல் சுற்றிச்சுற்றி வருகிறான். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரோடு சமாதானம் செய்துகொள்கிறான். சில வருடங்கள் கழித்து மிக்கி ஒரு நீதிபதியாக பிஸியாக இருக்கிறாள். மௌடி ‘செல்லோ’ எனப்படும் வாத்தியத்தை உலகப் புகழ்பெற்ற சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா ஒன்றில் வாசிக்கிறாள். படத்தின் க்ளைமாக்ஸில் ராப் ஒரு பூங்காவில் இரண்டு குழந்தைகளோடு உட்கார்ந்திருக்கிறான். பக்கத்தில் தன் மூலம் அவர்களுக்குப் பிறந்த 6 குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதோடு படம் முடிவடையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி தமிழுக்கு வருவோம்...

இந்தப் படத்திலும் மோகன் ஒரு டி.வி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வி.கே.ராமசாமிதான் அவருக்கு பாஸ். மனைவி அர்ச்சனாவோடு சந்தோஷமாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போதுதான் பாடகியான ராதிகாவைச் சந்திக்கிறார் மோகன். காதல் டெவலப் ஆகி கல்யாணம் வரை போய்விடும். அதே ஹாலிவுட் படத்தின் மல்யுத்த வீரர் அப்பா, க்ளைமாக்ஸில் ஒரே ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் பக்கத்து பக்கத்து அறைகளில் பிரசவம்... எல்லாம் சுபம் என அப்படியே ‘மிக்கி -மௌடி’ படத்தின் டிட்டோ காப்பியாகவே படம் இருக்கும்! திருதிரு முழியோடு ரெண்டு பொண்டாட்டிக்காரனாய் மோகன் செம ஸ்கோர் செய்திருப்பார். அப்பாவித்தனமான மனைவி கேரக்டரில் அர்ச்சனா தெறிக்கவிட்டிருப்பார். வி.கே ராமசாமியின் டைமிங் காமெடி டயலாக்குகள் பட்டாசு கொளுத்தி இருக்கும். இளையராஜாவின் பின்னணி இசையுடன் மு.மேத்தாவின் வரிகளில் யேசுதாஸ் பாடிய ‘ராஜராஜ சோழன் நான்...’ பாடல் இப்போதும் எஃப்.எம்-களிலும், மியூஸிக் சேனல்களிலும் இரவுநேர சாய்ஸாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கதையைக் காப்பி அடித்தாலும் தமிழ் டச்சோடு காதலையும் கள்ளத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து படத்தை க்ளாஸிக்காக்கி இருப்பதற்காய் இயக்குநரைப் பாராட்டலாம்!

ஞானப்பழம்

(இன்னும் சுடும்..!)